வெளிப்படுத்தின விசேஷம் 5 அதிகாரம் #2
Jeffersonville, Indiana, USA
61-0618
1மீண்டும் இக்கூடாரத்தில் இக்காலை வேளையில் வந்து, நற்செய்தியை அறிவித்திட முடிந்துள்ளது; இந்த வகையில் கர்த்த ராகிய தேவன் நமக்கு எவ்வளவு நல்லவராய் இருந்திருக்கிறார்
கடந்த ஞாயிறன்று அத்தரிசனமானது இங்கு கூறப்பட்ட பொழுது, உங்களில் அநேகர் இங்கேயிருந்தீர்கள். அச்சர்ப்பமானது அதன் நடுப்பாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பற்றியதாகும் அத்தரிசனம். இப்பிரசங்க பீடத்திலிருந்து அத்தரிசனமானது விவரிக்கப்பட்டதன் பிறகு, அதிலிருந்து இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் அது வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நிறைவேறியது. கர்த்தர் என்ன செய்தாரோ அது மகிமைானதாக இருந்தது. என் வாழ்க்கை முழுவதிலும் நான் ஒருபோதும் அத் தரிசனங்கள் ஒன்றும் தவறாகப் போனதை நான் கண்டதேயில்லை. நான் இப்பொழுது ஐம்பத்திரண்டு வயதுடையவனாக இருக் கிறேன். பூரணமாக, வார்த்தைக்கு வார்த்தை அப்படியே அது நிறை வேறியுள்ளது. இப்பொழுது நான் மிகவும் நன்றாக உணருகிறேன்
2நான் அக்குற்றச்சாட்டைப் பற்றியெல்லாம் பேசிக்கொண் டிருந்தேன். அல்ல, அது ஒரு குற்றச்சாட்டு அல்ல. அது உத்தம இருதயமுள்ள, தேவபயமுள்ள மனிதரிடமிருந்து கிளம்பிய தாகும். அவர்களுக்கு எனது ஊழியமானது சற்று கூடுதலான அளவுக்கு இயற்கைக்கு மேம்பட்ட தெய்வீகமானதாக தோன்றி, அதனால் அவர்கள் நான் தான் கர்த்தராகிய இயேசு என்று எண்ண ஆரம்பித்து, அதின் பேரில் ஒரு உபதேசத்தையே ஸ்தாபிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் அதெல்லாம் உடனடியாக நிறுத்தப்பட்டுவிட்டது. அதற்காக கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன்.
அதிலிருந்து நான் என்னையே விடுவித்துக்கொண்டு விட்ட பொழுது, கர்த்தரே அதைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று அதை அவர் கையில் ஒப்படைத்த பிறகு, அது உடனடியாக, அதாவது இருபத்து நான்கு மணி நேரத்திற்குள், அதெல்லாம் முடிவடைந்து விட்டது. அக்காரியமானது என்னை சற்று உணர்ச்சி வசப்படுத்தி, நிலைகுலையச் செய்துவிட்டது. ஆனால் சிறிது நேரத்திற்குப்பிறகு நான் அதிலிருந்த விடுபட்டுவிடுவேன். நிச்சயமாகவே அது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் இப்பொழுது நான் நன்றாகவும், அருமையாகவும் இருப்பதாக உணருகிறேன்.
3இவ்வாரத்தில் நமக்கு மகத்தான வெற்றிகள் கிட்டியுள்ளது. நான் ஒரு காரியத்தைப் பற்றி அறிவிக்க விரும்புகிறேன்.
கர்த்தர் எனக்கு கூறியதற்கு நான் செவி கொடுத்திருந்தால், அது இவ்வாறு நடந்திருக்காது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் என்னிடம் கூறினார். இங்கே சபையார் நடுவில் எங்கோ ஓரிடத்தில் இப்பொழுது என் மனைவி அமர்ந்திருக்கிறாள். சற்று நேரத்திற்கு முன்பு வரையிலும் இங்கே மேடையில் அமர்ந்திருந்த என் மகனுங்கூட, இன்னும் ஏனைய அநேகருங்கூட, நான் மீண்டும் மீண்டும் இவ்வாறு கூறியதைக் கேட்டிருக்கிறார்கள். “இதுதான் கடைசி தடவை, இருதயத்தை பகுத்தறிந்து கூறும் ஊழியத்தை நான் செய்வதின் கடைசி தடவை இதுதான்'' என்று. நான் மிகவும்..... நான் தேவனிடத்திற்கு மிகவும் நெருங்கி ஜீவிக்க முயன்று வந்திருக்கிறேன். அவ்வாறு செய்வதில், அது ஏதோ ஒன்றை வெளிக் கொணர்கிறது. அதனால், என்ன சிந்திப்பது என்றே அறியாமல் இருக்கக்கூடிய அளவுக்கு, மக்கள் வேறு விதமாக தவறான கருத்தைக் கொண்டிருக்கக்கூடிய அளவுக்கு, அவர்களுக்கு ஏதோ ஒன்று நேரிட்டு விடுகிறது.
4பிறகு, வரி பற்றிய அந்த வழக்கில், கர்த்தர் எனக்கு கூறிய வற்றிற்கு நான் செவி கொடுத்திருந்தால், அதைப் பற்றிய எந்த வொரு வார்த்தையும் அங்கே ஏற்பட்டிருக்காது. அது எப்பொழுது நான் செய்வதாக அங்கே இருக்கிறது... நான் அவருக்கு கீழ்ப்படி யாமல் போகும் பொழுது, அப்பொழுது தான் நான் தொல்லையில் எப்பொழுதும் மாட்டிக்கொள்ளுகிறேன். நான் அவருக்கு கவனமாக செவிகொடுத்து, அவரோடு நடந்திருந்தால்!
ஊழியமானது சில வேளைகளில் மிகவும் இயற்கைக்கு அப்பாற்பட்டு தெய்வீகமாக இருக்கிறது. அதனால் நான் தடத்தை விட்டு சற்று அப்பால் போய்விடுவேனோ என்று கூட அஞ்சு கிறேன்; ஆனால் இப்பொழுது நான் கூறுவதை தவறாக அர்த்தம் கொண்டு விடாதீர்கள், நான் என்ன கூறுகிறேன் என்பதை சரியாக அறிந்து கொள்ளுங்கள். நான் கர்த்தரைவிட்டு விலகிப் போய் விடுவேன் என்று கூறவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அந்த அசாதாரணமான, இயற்கைக்கு அப்பாற்பட்ட அக்காரியங் களை பகுத்தறிதல் போன்றவைகளை இனிமேல் நான் விளக்கி விவரித்துக் கூறிட விரும்பவில்லை.
இந்த நேரத்தில் கர்த்தர் இப்பொழுது நமக்கு கிருபை யுள்ளவராக இருந்திருக்கிறார். தீர்க்கதரிசன வார்த்தையையுடைய சகோதரன் நெவில் அவர்களை அவர் எழுப்பியிருக்கிறார். அவருக்கு சகோதரன் ஹிக்கின்பாதம்ஸ் மற்றும் ஏனைய அநேக சகோதரர்கள், இங்கே முற்றிலும் ஆவிக்குரிய வரங்களைப் பெற்றவர்களாய் சபை யில் அற்புதங்களை செய்கிறவர்களாக இருக்கும்படி இருக்கிறது.
5நான் ஒரு சாட்சியை உங்களுக்குக் கொடுப்பேனாக. ஓபல் வீவர் என்றொரு சகோதரி இருந்தாள். அவள் இன்று காலையில் இங்கே சபையில் நம்மோடு இருக்கிறாளா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. சகோதரி ஓபல் இங்கே இருக்கிறாயா? என்னால் அவளை பார்க்க முடியவில்லை. நல்லது, அநேக ஆண்டு களுக்கு முன்பாக, அவள் புற்றுநோயால் மரித்துக் கொண்டிருந் தாள். அப்புற்றுநோய் அப்பெண்மணியின் பெண்மைக்குரிய சுரப் பிகளில் இருந்து வந்தது, பிறகு அது அப்பெண்மணியின் சிறு நீரகத்திற்கு பரவிச் சென்று அவர்கள் அப்பெண்மணி உயிர் வாழ ஒரே ஒரு இரவுதான் உண்டு என்று கூறியிருந்தார்கள். அவள் மிக வும் மோசமான நிலைக்கு போய்விட்டாள். நான் சென்று அவளுக் காக ஜெபித்தேன். அப்பொழுது ஒரு தரிசனம் வந்தது, அவள் முற்றிலும் குணமடைந்தாள். அது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த காரியமாகும். அதிலிருந்து அநேக ஆண்டுகளாக அவள் நம் மத்தியில் வந்து போய்க் கொண்டு இருக்கிறாள்.
6அன்றொரு நாளிலே அவளுக்கு ஒரு வியாதியேற்பட்டது. அவளுக்கு தொண்டை அழற்சி ஏற்பட்டது. தொண்டையிலிருந்து நிறைய இரத்தக்கசிவு ஏற்பட்டது. உடனடியாக அவள் மருத்து வரைப் போய் பார்க்க வேண்டுமென்று கூறப்பட்டது. அது நடந்தது, நான் கனடா தேசத்தில் இருந்தபோது ஆகும். அந்தப் பெண்மணி சகோதரன் நெவில் அவர்களைப் போய் பார்த்தாள். சகோதரன் நெவில் சகோதரன் ஹிக்கின்பாதம் அவர்களை அழைத்துச் சென்றார். சகோதரன் இங்கே இக்காலையில் இருக்கிறார் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஒருவேளை இங்கே யிருக்கக்கூடும். சகோதரன் ரூபர்ட் ஹிக்கின்பாதம் அவர்கள் நமது முந்நாள் தர்மகர்த்தாக்களில் ஒருவராவார். அவர் ஒரு அருமையான சகோதரன், அவர் இங்கேயிருக்கிறாரா? ஆகவே அவர்களிருவரும் அந்த ஸ்திரீக்காக ஜெபிக்கும்படி சென்றார்கள். அவர்கள் அவளுக்காக ஜெபித்தபொழுது, அவள் அதுவரையிலும் இரத்தக் குழாயிலிருந்து இரத்தப் பெருக்கு ஏற்பட்டு கசிந்து கொண்டிருந்த தான நிலையில் இருந்தாள். எவ்வளவு காலம் அது இருந்தது என்று எனக்கு தெரியாது. நாட்கள் கணக்கில், அதாவது இரண்டு அல்லது மூன்று தினங்களாக... இரத்தத்தை துப்பிக் கொண்டேயிருந்தாள். சகோதரன் நெவில் அவர்கள் அவளுக்காக ஜெபித்தார். அதன் பிறகு அவள் ஒரு சொட்டு இரத்தம்கூட துப்பவில்லை. அது உண்மை .
7அதன்பிறகு அப்பெண்மணிக்கு இரு சதை வளர்ச்சி ஏற் பட்டது ..... வாயின் உள்ளே மேல்பாகத்தில் சதை வீக்கம் போன்ற ஒன்று இருந்தது. கொப்புளங்கள் போன்றவைகள் அல்லது அது என்னவாக இருக்குமோ-அது வாயின் உள், மேல்பாகத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. தசை வளர்ச்சியினால் ஏற்படும் வீக்கங்கள் போல்காணப்பட்டது. அவைகளிலிருந்து எந்த ஒரு நிவாரணமும் அவளுக்கு கிடைக்கவில்லை. ஹிக்கரி கொட்டை யைப் போல் (வட அமெரிக்காவில் காணப்படும் வாதுமைக் கொட்டையைப் போன்ற ஒருவகை கொட்டை- மொழிபெயர்ப் பாளர்) அதில் பாதியளவு அது இருந்தது என்று அச்சகோதரி கூறினாள். அந்நோய் அவளுடைய வாயில் கணிசமான அளவுக்கு சில நாட்களாக இருந்தது. சகோதரன் ஹிக்கின்பாதம் அவர்கள்... அவருடைய ஜெர்மானியப் பெயரை என்னால் சரியாக உச்சரிக்க முடியவில்லை சகோதரன் ரூபர்ட் அவர்களே, என்னை அதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள். ஆனால் எப்படியும் ... நான் .... இப்பொழுது நான் இங்கே தவறாகக் கூறக்கூடும். இல்லை. அவர் அந்நிய பாஷைகளில் பேசும் வரத்தையும், அதை வியாக்கியானம் செய்யும் வரத்தையும் உடையவராயிருக்கிறார். இந்த குறிப்பிட்ட சமயத்தில் அந்த சகோதரன் அப்பெண்மணியின் வாயின் மேல் கைகளை வைத்து ஜெபித்தார். அந்த பெண்மணி கூறியதாவது. ''சகோதரன் பிரன்ஹாமே, நேற்றல்ல, நேற்றிரவோ அல்ல, உடனடியாக அவ்வீக்கங்கள் வாயின் மேல் பகுதியிலிருந்து நீங்கிப் போயிற்று.'' உடனடியாக.
8பிறகு மருத்துவர்கள் வந்து அவளுடைய தொண்டையை சோதித்து விட்டு, 'அவள் மருத்துவமனைக்கு சென்றேயாக வேண்டும். ஏனெனில் அவளுக்கு தொண்டையில் புற்றுநோய் உள்ளது'' என்று அவர்கள் கூறினார்கள்.
எனவே நாங்கள்..... அவளை மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச் சென்றனர். நான் நமது நல்ல பாஸ்டர் நெவில் அவர்களை சந்திக்கிற வரையிலும் அப்பெண்மணி மருத்துவனையில் தான் இருக்கிறாள் என்கிற விஷயம் எனக்கு தெரியவே தெரியாது. அவர் அப்பெண்மணி மருத்துவமனையில்தான் இருக்கிறாள் என்று கூறினார். எனவே நான் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந் தேன். எனவே நான் அவளை சந்திக்க சென்றேன். அவளுடைய கணவர் அங்கே உட்கார்ந்திருந்தார். நான்கு அல்லது ஐந்து மருத்துவர்கள் சோதனைகளெல்லாம் செய்து பார்த்துவிட்டு தலையை அசைத்துக் கொண்டே “நிச்சயமாக அது புற்றுநோய்தான், தொற்று நச்சுத்தன்மையையுடைய புற்றுநோய்'' என்று கூறினார்கள்.
9எனவே, அங்கேயுள்ள உள்ளுறை மருத்துவர் (மருத்துவ மனையிலேயே தங்கி பணியாற்றும் மருத்துவர் - மொழிபெயர்ப் பாளர்), வந்து மாதிரிகளை எடுத்துப் பார்த்துவிட்டு, “சந்தேகத்துக் கிடமின்றி அது புற்றுநோய்தான்'' என்று கூறினார்.
நான் அச்சகோதரியிடம், ''ஆனால் சகோதரியே, தேவன் உன்னை ஒரு தடவை புற்றுநோயிலிருந்து குணமாக்கியிருந்தா ரென்றால், அது என்ன வேண்டுமென்றாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஒருவேளை அம்மனிதர்கள் சரியாக இருக்கலாம். அவர்கள் அத்துறையில் நன்கு பயிற்சி பெற்று, அது புற்றுநோயா, புற்றுநோயைப் போன்றதா, அல்லது வேறு ஒன்றோ என்பதைப் பற்றிகூற, அவர்கள் பயிற்சி பெற்றவர்களாவர். அந்த நோக்கத்திற் காகவே நன்கு பயிற்சி பெற்றவர்கள் அவர்கள். அது புற்று நோயைப் போன்று காணப்படுகிறது, எனவே அவர்கள் அதைப் புற்றுநோய் என்கின்றனர். ஒருவேளை அப்படியே இருக்கலாம்'' என்று நான் கூறினேன்.
ஆனால் அச்சகோதரியோ அது புற்றுநோய் என்பதை விசுவாசிக்க விரும்பவில்லை. எனவே, நான் அவளிடம், “உன் தொண்டையில் ஏற்பட்ட இரத்தக் கசிவை, தேவன் ஜெபத்தை கேட்டு அன்றொரு நாளிலே உன்னை குணமாக்கக்கூடுமானால் இப்பொழுதும் தேவன் ஜெபத்திற்கு பதிலளித்து, உன்னுடைய வாயினுள் இருக்கும் அவ்வீக்கங்களை அகற்றிட முடியுமே. அது என்ன வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இங்கேயே இப்பொழுது தேவனால் அதை நீக்க முடியாதா என்ன?” என்று கூறினேன்.
18.. 'ஆமென்'' என்று அவள் கூறினாள். அவளுடைய கணவர் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார். “தேவன் அதை நிறுத்தி விடுவார் என்ற விசுவாசத்தில் தான் நான் இப்பொழுது போய்க் கொண்டிருக்கிறேன்'' என்று அப்பெண்மணி கூறினாள்.
10நான் அவளுக்காக ஜெபித்தேன். அதன்பிறகு அவர்கள் சோதனைக்காக மாதிரிகளை எடுத்து சோதித்துப் பார்த்துவிட்டு திரும்பிவந்து, “இப்பொழுது 'நெகட்டிவ்'' (அதாவது வியாதி யின் அறிகுறிகள் ஒன்றும் இல்லை என்று அர்த்தம் - மொழி பெயர்ப் பாளர்) என்று கூறிவிட்டார்கள். ஆனால் அவர்கள் யாவரும் அது புற்றுநோய் என்று கூறிவிட்டிருந்தார்கள்.
11எனவே நண்பர்களே, காரியம் என்னவெனில், அவர் தேவனாயிருக்கிறார். அவர் ஜெபத்திற்கு பதிலளிக்கிறார். இந்த சிறிய எளிய கூடாரத்தில் அவர் நம்மை வந்து சந்திக்கிறார் என்பதற்காக நாம் மிகவும் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம். பார்ப்பதற்கு அவ்வளவாக அதில் ஒன்றும் அதிகம் இல்லை; மழை, பனி இவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள நம் தலைக்குமேல் ஒரு கூரை இருக்கவேண்டுமே என்பதற்காகத்தான் அநேக ஆண்டுகளுக்கு முன்பாக, பழைய பலகைகளை ஒன்றாகச் சேர்த்து கூரையை அமைத்துக்கொண்டோம். ஆனால் இந்த முயற்சியினால், அநேகர் இன்றைக்கு ஜீவித்துக்கொண்டிருக்கிறார்கள், அதற்காக நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்.
நமது தர்மகர்த்தாக்களுக்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக் கிறோம். நமது உதவிக்காரர்களுக்காக நாம் நன்றியுள்ளவர்களா யிருக்கிறோம். நமது சபையாருக்காக நாம் நன்றியுள்ளவர்களா யிருக்கிறோம். நமது மேய்ப்பனுக்காக நாம் நன்றியுள்ளவர்களா யிருக்கிறோம். சபையில் தேவன் அளித்துள்ள ஒவ்வொரு வரத் திற்காகவும் நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இம்மனிதர் களுக்கு தேவன்தானே, அவர்கள் ஒருபொழுதும் தவறான பக்கத் தில் சாய்ந்துவிடாதபடியும், சாலையின் நடுபாதையில் வார்த்தை யோடு நிலைத்து இருப்பதற்காகவும் விவேகத்தை அளிக்கும்படி ஜெபிக்கிறோம். ஒருபோதும் எந்தவகையிலும் உங்களை உயர்த்திக் கொள்ளவேண்டாம்; எப்பொழுதாவது நீங்கள் அவ்வாறு செய் தால், நீங்கள் அங்கேயே முடிவடைந்து விடுவீர்கள். வார்த்தை யோடு தாழ்மையோடு நிலைத்திருங்கள்.
12பாருங்கள், இப்பொழுது மக்கள் வியாதிப்பட்டவர் களாயும், துன்பப்பட்டவர்களாயும் இருக்கும் போது, அதற்கென ஜெபித்துக்கொள்ளும்படியாக வரும்போது, நான் அச்சமயத்தில் ஒருவேளை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கையில், அக்காரியத்தைப்பற்றி அக்கறை எடுத்துக் கொள்வதற்கென தேவன் ஒரு வழியை ஆயத்தம் பண்ணி வைத் திருக்கத்தான் செய்கிறார். அது மகத்தானதாக இல்லையா? அப்படித் தான் இருக்கவேண்டும். அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கவில்லையா? தேவன் ஒருபோதும் தனக்கென ஒரு சாட்சியை வைக்காமல் விட்டுவிடுவதில்லை. அதற்காக நாம் மிகவும் நன்றி யுள்ளவர்களாயிருக்கிறோம்.
அடுத்தவாரம், கர்த்தருக்கு சித்தமானால், பள்ளி விடுமுறை யினிமித்தம் பள்ளியைவிட்டு இப்பொழுது வீட்டுக்கு வந்திருக் கும் எனது பெண்பிள்ளைகளை அழைத்துக்கொண்டு போகப் போகி றேன். நீங்கள் எங்களுக்காக ஜெபிக்கும்படியாக நான் வேண்டிக்கொள்கிறேன். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் எனது மூத்த மகன், பால் ரிவிர் (Paul Revere) என்பவர் தனது நடுநிசிப் பயணத்தைச் செய்த இடத்தை பார்க்க விரும்பினான். அங்கேதான் அவர் சபையைவிட்டு கிளம்பினார். அது நியூ இங்கிலாந்து என்ற இடத் தில் உள்ளது. நாங்கள் போய் அதைப் பார்க்க விரும்புகிறோம். (பால் ரிவிர் என்பவர் அமெரிக்கா நாட்டு தேசத் தியாகியாவார். அவர் ஏப்ரல் 18, 1775-ல் பிரிட்டிஷ் துருப்புக்கள் படையெடுத்து வருகிறார்கள் என்பதைக் குறித்து குடியேற்றக்காரர்களை எச்சரிக்க இப்பயணத்தை மேற்கொண்டார் - மொழி பெயர்ப்பாளர்).
பிறகு, நான் எப்பொழுதும் “ஓல்ட் அயர்ன்சைட்ஸ்'' - ஐப் பார்க்க விரும்பினேன். (”ஓல்ட் அயர்ன்சைட்ஸ்' (old Ironsides) என்பது அமெரிக்காவில் 1812 ம் ஆண்டில் நடந்த யுத்தத்தில் நடந்த யுத்தத்தில் தீவிரமாக சண்டையிட்ட பீரங்கிகள் பொருத்தப்பட்ட ஒருவகைப் போர்க்கப்பல்களின் தொகுதி - மொழிபெயர்ப்பாளர்) “ஓல்ட் அயர்ன்சைட்ஸ்-ஐப் பற்றிய கவிதையை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்? கிறிஸ்தவத்திற்கு வெளியே நான் அறிந்த வற்றுள் எல்லாம் எனக்கு மிகவும் விருப்பமானது அதுதான். அதுவே எனது சிறந்த ஒன்றாகும். நான் அதைப் படிக்க ஆரம்பித்த உடன், எனக்கு துக்கத்தினால் தொண்டை அடைத்துக்கொள்கிறது. நான் உட்கார்ந்து, பிறகு சுற்றி நடந்து திரும்பிப்போகிறேன். அதை எவ்வாறு உங்களால் மூழ்கடிக்க முடியும்... அது எப்படியிருக்கிறது என்றால், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பிழைப்பை உண்டுபண்ணுகிற ஒரு குதிரையை பிடித்துக் கொல்வதைப்போல் இருக்கிறது. என்னால் அக்காட்சியைக் காணமுடியவில்லை. ”எனவே நான் அவளை இல்லாமற்போகச் செய்வேன்'' என்று கவிதை கூறுகிறது. இல்லை, அவ்வாறு செய்யக்கூடாது. பிரிட்டி ஷாரின் பீரங்கிக் குண்டுகள் அக்கப்பலை தாக்கியபோது, அதன் பக்கவாட்டில் உள்ள கருவாலி மரப்பலகைகளை துளைத்துக் கொண்டு சென்றது. அக்கப்பலை எடுத்து நீங்கள் மூழ்கடிப்பதை என்னால் காண சகிக்காது.
புயலின் தேவதைகளிடம் அதை ஒப்படையுங்கள். மின்னல், கடுங்காற்றிடம் அதை கொடுத்துவிடுங்கள்.
(நான் இக்கவிதையை விரும்புகிறேன்)
13அதன்பிறகு நாங்கள் மேற்கொண்டு வந்து ..... திருவாளர் கென்னடி அவர்கள் எங்களை அழைக்கவில்லை. ஆனால் நாங்கள் அங்கே இருக்கையில் அவருடைய வெள்ளை மாளிகையைக் காண விரும்புகிறோம். அவர்கள்... நான் அவ்விடத்திற்கு அநேக சமயங்கள் போயிருக்கிறேன். ஆனால் பிள்ளைகள் அதைக்காண விரும்புகிறார்கள். கர்த்தருக்கு சித்தமானால் அதன்பிறகு நாங்கள் வீடு திரும்பிவிடுவோம். எனவே எங்களுக்காக ஜெபியுங்கள்.
எங்களிடமுள்ள எங்கள் அன்பானவர்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். இங்கு எங்களிடமுள்ள அவர்கள் தங்கள் ஓய்விற்காக அநேக இடங்களுக்குச் சென்றுள்ளனர். அவர்களில் சிலர் இன்று காலை கென்டக்கி, டென்னசி மற்றும் வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். ஆகவே நாங்கள் அவர்களுக்காக ஜெபிக்கிறோம்.
14இப்பொழுது, நான் ஒரு காரியத்தைக் குறித்து ஒரு அறி விப்பைச் செய்ய வேண்டுமென்று இருந்தேன். ஓ! ஆம், இந்த ஆராதனைக்குப் பிறகு உடனே ஞானஸ்நான ஆராதனை உள்ளது. பிறகு, குழந்தைகளின் பிரதிஷ்டையும் உள்ளது என்று நான் நம்புகிறேன். சகோதரன் குழந்தைகள் பிரதிஷ்டை இருக்கிறது என்று என்னிடம் கூறினார். அநேக காரியங்கள் நாம் செய்தாக வேண்டியிருக்கிறது.... என்ன சொல்லுகிறீர்கள். (யாரோ ஒருவர் சகோதரன் பிரான்ஹாம் அவர்களிடம் மாலை ஆராதனையைப்பற்றி கேட்கிறார் - ஆசி). நல்லது. இரண்டு ஆராதனைகளையுமே நான் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. நான் ஒன்றையும், மற்ற ஆரா தனையை சகோதரன் நெவில் அவர்களும் எடுத்துக்கொள்வார். என்னால் இயலாது... நாங்கள் இருவருமே இங்கேயிருக்கையில், ஏன் ஒருவர் மட்டும் கிரியை செய்யாமல் இருக்கவேண்டும்? அது சரிதானே சகோதரன் நெவில் அவர்களே? அது மிகவும் சரிதான்.
டாக் அவர்கள் என்னிடம், அவர்களை நினைத்துக்கொள்ளும் படி உங்களிடம் கூறும்படி கூறினார். அவர்கள் போதுமான அளவு நிதி கிடைத்ததும் சபைக் கட்டிடத்தை கட்டுவதற்காக திட்ட மிட்டுக்கொண்டிருக்கின்றனர்; அதற்காக நீங்கள் கொடுத்துள்ள வாக்குறுதிகள்.....
அவர்கள் என்னிடம் ஏதோ கூறினார்கள். அது குழந்தைகளின் பிரதிஷ்டை பற்றியது என்று எண்ணுகிறேன். அதுதான் அது. இவ் வாராதனை முடிவின்போது அதை உடனே வைத்துக்கொள்ளு வோம்.
இந்தத் துணிகளின் பேரில் ஜெபிக்க வேண்டுமா? நல்லது, ஐயா. அதையும் சேர்த்து பிறகு செய்துவிடுவோம்.
15இப்பொழுது வார்த்தையை நாம் அணுகும் முன்னர்.... வார்த்தையைக் கேட்பது எத்தனை பேருக்கு இன்பமாயுள்ளது? அது மலையின்மேல் வாசம் பண்ணுவதுபோல் உள்ளது. கடந்த ஞாயிறு அளிக்கப்பட்ட செய்தியிலிருந்து, தேவனுடைய வழியில் ஒன்றைச் செய்வது என்றால் என்ன என்பதைப்பற்றி நீங்கள் பார்க்க முடிந்தது. அவ்விலையேறப்பெற்ற சகோதரர்கள் நடுவில் அந்த ஒரு குறிப்பிட்ட ஆவிதான் அவர்களை அலைக்கழித்தது என்பதை நான் கண்டபோது, லௌகீக மனிதனுக்கு அதை எடுத்துப் போடுவதற்கு வழியே இல்லை. எனவே நம்மால் செய்ய முடிந்த தெல்லாம், அதைக் குறித்து பிரதிஷ்டை செய்து கொண்டு, கர்த்த ரிடத்தில் அதை சமர்ப்பிப்பது என்பதுதான். சில மணி நேரங்களில் அவையாவும் முடிவுக்கு வந்துவிட்டது.
16நான் வெளியிடங்களுக்குச் செல்லப்போகின்றேன். இங்கே உங்களோடு கர்த்தருடைய பணியில் மேய்ப்பன் அவர்கள் உதவியாயிருந்து வருகிறார். ''... தேவனுக்கும்.... தெரிந்துகொள் ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடு கிறேன்,'' என்று பவுல் கூறியவண்ணமாக கூறுகிறேன். சபையில் யாராவது ஒழுங்கைவிட்டு விலகிவிட்டால், என்ன செய்ய வேண்டுமென்பதற்கான ஒரு பரிபூரண உதாரணம் உள்ளது என்று இங்குள்ள இச்சபைக்கு கூறுகிறேன்.
சபையில் சரியில்லாத காரியம் ஒன்று எழும்பு மென்றால், அது சரியானதல்ல என்று அறிந்திருக்கிற குறிப்பிட்ட நபர் அத் தவறை செய்யும் நபரிடம் போகக்கடவர். அவர் போய் எடுத்துக் கூறியும், சரி பண்ணிக்கொள்ளவில்லையென்றால், அதற்கடுத்ததாக செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், அவர் ஒரு சாட்சியை அல்லது இருசாட்சிகளை அழைத்துக்கொண்டு அந்நபரிடம் போகக்கடவர்கள். அப்படியாகப்போய், தவறு இருக்கும் நபரிடம் எடுத்துக்கூறி ஒப்புரவாகவோ, அல்லது தவறை திருத்திக்கொள் ளவோ செய்யும்படி செய்யக்கடவர்கள். இப்பொழுது கவனமாக கேளுங்கள். இப்பொழுது இது ஒலிப்பதிவு செய்யப்படுகிறது. அதுவும் கிரியை செய்யாவிடில்......
17எப்பொழுதாவது உங்களுக்குள் ஏதாவது ஒரு சிறிய இஸம்' ஏதாவது ஒரு கொள்கை அல்லது கோட்பாடு அல்லது வேறு ஏதாவது ஒன்று அல்லது ஏதாவது ஒரு சிறிய தீய உணர்வுகளோ எழும்ப அனுமதிக்காதீர்கள். இப்பொழுதே அப்படிப்பட்ட எந்தவொன்றும் உங்களை விட்டு அகன்றுபோட்டும்! அதனால் உங்களுடைய சிறிய ... திராட்சைத் தோட்டங்களை கெடுப்பது எப்பொழுதும் சிறு நரிகள்தான் என்பதை அறிவீர்கள். எனவே அவைகளை உங்கள் பாதையை விட்டு அகற்றிப் போடுங்கள். எவருக்கெதிராகவும் ஏதாவது ஒரு விசித்திரமான சிறு உணர்வுகள் உங்களுக்குள் தோன்றினால், அக்குறிப்பிட்ட நபரிடம் போய் ''நான் தவறாயிருக்கிறேன். உங்களைப்பற்றி நான் தவறாக எண்ணுகிறேன். நான் சரியாகும் படியாக அதன் பேரில் ஜெபிக்க உதவி செய்யுங்கள்'' என்று கூறுங்கள். ஏனெனில் நமது மத்தியில் சுத்தமான கலப்பிடமில்லாத பரிசுத்த ஆவியானவர் நிலை கொள்வதைத் தவிர வேறு எதையும் நாம் விரும்பவில்லை. அதைத்தான் நாம் விரும்புகிறோம். அப்பொழுது வரங்களும் மற்ற இன்னபிற காரியங்களும் நமது மத்தியில் சரியாக கிரியை செய்திடும், யாவும் சரியாக வரும்.
18ஒரு முழுமையான சபையாக நீங்கள் பெற்றுக்கொள்ள இயலும் பொழுது, ஏன் ஒரு அரைகுறையான சபையை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்? ஆகாயங்கள் பூராவிலும் அசலான வைகளை நீங்கள் பெற்றிருக்கையில், நீங்கள் ஏன் பதிலிகளைப் பெற்றவர்களாயிருக்க வேண்டும்? அப்படிப்பட்டது நமக்குத் தேவையில்லை. சபை அங்கத்தினர்களாகிய உங்களுக்குள் ஒருவருக் கொருவர் ஏதாவது சிறுசிறு வினோதமான எதிரான எண்ணங்கள் எழும்புமென்றால், நீங்கள் அந்நபரிடம் செல்லுங்கள்.
“நல்லது. அவர்கள் எனக்கு அதைச் செய்தார்கள்'' என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
“ஒரு சகோதரனுக்கெதிராக நீங்கள் ஒரு தவறு அல்லது பிழை செய்ததைப் பற்றி அல்ல. ”ஒரு சகோதரன் உங்களுக்கெதி ராக எதையாவது கொண்டிருந்தால்.'' அப்பொழுது அந்நபரிடம் சென்று அவரோடு ஒப்புரவாகுங்கள். அவரைப்பற்றி ஒரு விசித்திர மான உணர்வு ஒன்று ஏற்பட்டதாகவும், ஒருவருக்கொருவர் நண்பர்களாக ஆக விரும்புகிறதாகவும் கூறி, ஜெபித்து, பீடத்தண் டையில் போய் உங்கள் நடுவிலிருந்து தேவையற்றதை அகற்றிப் போடுங்கள்.
19இப்பூமியில் உங்களை இல்லாமல் ஆக்கிப்போடுகிற வரை யிலும் சாத்தான் உங்களை விடாமல் குத்திக்கொண்டேயிருப்பான். அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு சதா குத்து விழுந்து கொண்டேயிருக்குமேயல்லாது, உங்களை சும்மா விடுவது என்பது ஒரு நேரமும் இல்லை. ஏனெனில் நீங்கள் ஒரு யுத்தத்தில் இருந்துகொண்டிருக்கிறீர்கள். பிக்னிக்' போவதற்காகவாகிறிஸ்து விடம் வரவேண்டுமென்று கேட்டுக்கொண்டீர்கள்? நல்லது, நீங்கள் நிச்சயமாகவே ஆச்சரியப்படப் போகிறீர்கள். ஏனெனில் அது ஒரு இடைவிடாது நடக்கிற சண்டையாகும். நான் இந்த போராட்டத்தில் கடந்த முப்பத்தியோரு ஆண்டுகளாக இருந்து வருகிறேன். நான் ஒவ்வொரு அங்குலத்தையும் போராடித்தான் வந்திருக்கிறேன். ஆம் அப்படித்தான். இஸ்ரவேல் ஒவ்வொரு அங்குல பிரதேசத்தையும் யுத்தம் பண்ணித்தான் பிடித்தது. பாலஸ்தீனா அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை சுதந்தரித்துக்கொள்ள அவர்கள் ஒவ்வொரு அங்குலத்தையும் யுத்தம் செய்துதான் பிடித்தார்கள்.
20இப்பொழுது இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சபையில் ஏதாவது எழும்புமென்றால், அப்பொழுது மேய்ப்ப ரானவர்..... உங்கள் மேய்ப்பரை அழைத்துக்கொண்டுபோய் அந்நபரிடம் பேச நீங்கள் விரும்பினால், அப்படிச் செய்யுங்கள், அதற்கும் அந்நபர் செவிகொடுக்கவில்லையெனில் அப்பொழுது சபைக்கு முன்பாக அவ்விஷயத்தைக் கொண்டுவந்து அதை சபைக்கு முன்பாக எடுத்துக்கூறுங்கள். ஒப்புரவாவதற்கு போதிய அவகாசத்தை அந்நபருக்குக் கொடுங்கள்; ஒருவேளை ஒரு ஞாயிற்றுக்கிழமையிலிருந்து அடுத்த ஞாயிறு முடிய என்று வைத்துக்கொள்ளலாம். சபைக்கும் அவர்கள் செவிகொடுக்க வில்லையென்றால், அப்பொழுது வேதம் கூறுகிறது. ''அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப் போலவும் இருப்பானாக'' என்று.
சபையினால் அவர்கள் பாதுகாக்கப்படுகிற வரையிலும், சாத்தானால் அவர்களை நெருங்கமுடியாது. ஆனால் சபையானது சபையின் பாதுகாப்பினின்றும், கிறிஸ்துவின் இரத்தத்தின் பாது காப்பினின்றும் அவர்களை விடுவித்துவிடுமென்றால், அப்பொழுது சாத்தான் அவர்களிடத்தில் போய் கிரியை செய்வான். அது அவர்களை மீண்டும் ஒப்புரவாதலுக்குள் கொண்டு வரும். பார்த்தீர் களா? நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா, அப்படித்தானே பாஸ்டர் அவர்களே? ஆம், ஐயா.
21எனவே ஒப்புரவாகவும், தேவனிடத்தில் வரவும், பிறகு தேவனுடைய வழியில் போகவும் வேண்டும்; இதைத்தான் செய்ய எப்பொழுதும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
இது நமக்கு எதை நிரூபிக்கிறது? நம்மில் இரண்டு மூன்று சகோதரர்கள், நான் எவ்வாறு கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக இந்த தவறான காரியத்துக்கெதிராக போராடிக் கொண்டிருந்தேன் என்பதை அறிவார்கள். ஆம், அப்படித்தான். ஆனால், நான் அம்மனிதர்களைப் பற்றி இப்படியாக சிந்திக்க வேண்டிய கட்டம் வந்தது; அதாவது, நான் அவர்களை நேசித்தும் கூட, முடிவாக அவர்களால் அத்தவறை விட்டு விலக முடியாது என்பதை அறிந்து கொண்டேன். நான் சாட்சிகளை என்னோடு அழைத்துக்கொண்டு அவர்களிடம் சென்றேன். ஆனால் அதுவும் கிரியை செய்யவில்லை. நான் அதை சபையினிடம் கொண்டு வரவேண்டியதாயிற்று. கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, மேடை யிலிருந்து நான் இவ்வாறு கூறவேண்டியதாயிற்று: “இனிமேல் நான் அதை என் காதுகளால் கேட்க விரும்பவில்லை. நான் அதிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு தேவனிடம் அதை ஒப்படைக்கிறேன். நான் அதை ஒப்படைக்கிறேன்'' என்று கூறினேன்.
உடனே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் காண் பித்தது... வேத வசனத்தின் மூலமாக அவர்கள் திருத்திக் கொள்ளுதலுக்கு வரும்பொழுது, வேத வசன பூர்வமான திருத்திக் கொள்ளதலுக்கு ஒரு மனிதன் நிற்க முடியவில்லையெனில், அவன் கோபமடைந்து, பதற்றமடைந்து பேசினால், அது அவன் தேவனோடு சரியாக இல்லை என்பதை காண்பிக்கிறது. ஆனால் ஒரு அசலான தேவனுடைய பரிசுத்தவானோ வார்த்தையின் மூலமாக தேவனோடு ஒப்புரவாகிவிடுவான். அப்படித்தான் நடக்கும். திருவசனமே சீர்திருத்துகிறதற்கான மார்க்கமாயுள்ளது. அச்சகோதரர்கள் தேவனுக்கு நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டும். எதற் கென்றால்.....
பாருங்கள், கடைசி நாட்களில் “கள்ளக் கிறிஸ்துக்கள் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப் பார்கள்'' என்று வேதம் கூறுகிறது. ஆனால் அது சாத்தியமான தல்ல. இல்லை, ஐயா, தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் முன்குறிக்கப் பட்டவர்களாவர். எனவே அவர்கள் வஞ்சிக்கப்படமாட்டார்கள் என்பதை நீங்கள் பாருங்கள்.
22எனவே, உடனடியாக அச்சகோதரர்கள் அடுத்த நாளிலே வீட்டுக்கு வந்தார்கள். இன்னமும் அவர்கள் அக்கொள்கையைப் பிடித்துக்கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் என்னிடம் அவர்களுடைய வேதவசனங்களை கொடுத்தார்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் வேதவாக்கியத்தின் மூலமாக அவர்கள் கூறிய யாவற்றையுமே கடிந்துகொண்டார். எனவே அவர்கள் அப்பொழுது அதைக் கண்டனர் அவர்கள் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள். தேவனுடைய சமுகத்தில், அவர்கள் நடந்து வெளியே சென்றனர். அவ்விதமான மக்களுக்காக அது என்னை நன்றியுள்ள வனாக ஆக்குகிறது. ஆம், ஐயா. அப்படிப்பட்ட வர்கள்தான் உண்மையான மனிதர்களாவர்.
தவறாயிருக்கிற ஒரு மனிதன், தான் தவறு என்று நிரூபிக் கப்படும் பொழுது, அதை உணர்ந்து தான் ஒரு கிறிஸ்தவனாக இருக்கவேண்டுமென்று விரும்புவதை நீங்கள் கண்டால், அவன் அப்பொழுது, முன்னே சென்று நான் தவறாயிருக்கிறேன்'' என்று அறிக்கையிடுகிறான். அதுதான் உண்மையான கிறிஸ்தவன்.
23ஆனால் அந்த நபர், மிகவும் கோபமடைந்து, இங்குமங்கும் ஓடித்திரிந்து, ஒரு பக்கமாகப் போய், “அதிலே ஒன்றும் தவறு இல்லை'' என்று கூறினால், சகோதரனே, அவரை கவனியுங்கள்; அவர் அந்த க்ஷணமே ஆக்கினைத் தீர்ப்படைந்து வெளியேறி விட்டார், ஏனெனில் அவர் நம்முடையவரல்ல என்பதினால். ஆனால் எப்பொழுதும் மேய்ப்பனே, வார்த்தைக்கு வாருங்கள், அது எல்லா சமயத்திலும் அதை சரி செய்யும். ஆனால் நீங்கள் வார்த்தையோடு நிலைத்திருக்கவேண்டும்.
இக்காரணத்தினால்தான், இனி முதற்கொண்டு நான் அமெரிக்காவில், இருதயத்தின் யோசனைகளை பகுத்தறியும் வரத்தோடு வரப்போவதில்லை. இனி மீதமுள்ள என் வாழ்நாளில், அப்படிச் செய்ய நான் விரும்பவில்லை. வெளிநாடுகளிலுள்ள ஊழியக் களங்களில் மட்டுமே இருக்கும். ஒரு வரம் என்ற முறை யில், ஒரு தீர்க்கதரிசன வரம் என்ற முறையில், அது அங்கே தான் இருக்கும். ஆனால் நானோ அதை என்னோடு மாத்திரம் வைத்துக் கொண்டு வேலை செய்வேன். ஏனெனில், இந்நாளில் அது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பதற்கு நாம் மிகவும் தாமதமாக இருந்து கொண்டிருக்கிறோம். நாம் முடிவு காலத்திற்கு மிகவும் சமீபமாயிருக்கிறோம். ஆனால் வெளி நாடுகளிலுள்ள ஊழியக்களங்களில் ஏதோ ஒன்றிரண்டு தடவைகள் மாத்திரம் மேடையில் இருக்கும், சகோதரனே, அவைகளுக்குரிய நாள் கடந்துவிட்டது.
24அந்த மகத்தான வார்த்தை மாம்சீகமாகப் பாவனை செய்வதை நாம் பார்க்கிறோம். ஓ, என்னே ! அது பரிதாபமானதாயிருக்கிறது. பாருங்கள், நான்...
இங்கே பெந்தெகொஸ்தேயினர் எத்தனை பேர்கள் உள்ளனர்? நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். நல்லது. பாருங்கள், பெந்தெகொஸ்தேயினரே, சில ஆண்டுகளுக்கு முன்பாக, தேவன் உண்மையாகவே உங்கள் மேல் இறங்கினார், அதினால் நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசத் தொடங்கினீர்கள். அது சரி. ஆனால் பிசாசானவன் என்ன செய்தான்? அவன்தானே சுற்றிவந்து, அவனும் அதைப்போலவே மாம்சீகமாக பாவனை செய்தான். சரியில்லாத ஒன்றை அவன் உருவாக்கி, மக்களை அதற்குள் விழச் செய்து, அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசி, ஏதோ சில வார்த் தைகளை அவர்கள் பேசச் செய்து, அவர்களும் அந்நிய பாஷை களில் பேசுவதாகக் காண்பித்தான். பிறன் மனைவியோடு வாழக்கூடிய சில நபர்கள்கூட, மற்றும் இன்னபிற பாவங்களைச் செய்கிற வர்கள்கூட, அவர்களில் சிலர் மது அருந்துபவர்களாகவும், சிகரெட் பிடிக்கிறவர்களாகவும் இருந்தார்கள், அப்படியிருந்தும் கூட, அவர்களும் அன்னிய பாஷைகளில் பேசிக்கொண்டிருக்கிறார் கள். எதற்காக அவன் அதைச் செய்தான்? உண்மையான எக்காள மும்கூட ஒரு விளங்காத சத்தத்தை மக்களுக்கு கொடுக்கட்டுமே என்றுதான்.
“எவன் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுவான்?'' என்று வேதம் கூறுகிறது. பார்த்தீர்களா?
25இவ்விதமான காரியம் அங்கே எழும்பி வந்தபொழுது... கூட்டத்தில் நமக்கு அப்படிப்பட்ட ஜனங்கள் இருக்கிறார்கள்...... இங்கேயே ஒருவர்... கனடா தேசத்தில் ஒரு கூட்டத்தில் எனக்கு முன்பாகவே ஒருவர் கடந்து சென்றார். உளவுத் துறை ஏஜெண்டு கள் அம்மனிதனை ஆண்புணர்ச்சிக்காரர் என்ற குற்றத்தின் பேரில் அவரைப் பிடித்தார்கள். அந்நபர் என்னிடம், ''தேவன் எனக்கு இருதயத்தை பகுத்தறியும் வரத்தைக் கொடுத்திருக்கிறார்'' என்றார். 'அல்லேலூயா, இங்கே யோவான் என்ற பெயருள்ள ஒருவர் இருப்பதாக இப்பொழுது கர்த்தர் என்னிடம் கூறினார்'' என்றார்.
ஒரு இளம் பெண் ஒருநாள் காலையில் அங்கே திரும்பி வந்தாள், அவளை உங்களுக்கு ஞாபகமிருக்கும். அவள் அங்கே வந்து, “கர்த்தர் எனக்கும் அதே வரத்தைக் கொடுத்திருக்கிறார்'' என்று கூறினாள்.
“நல்லது'' என்று நான் கூறினேன்.
“அதை நான் நிரூபிக்க எனக்கு ஒரு தருணம் இருந்தால் நலமாயிருக்கும்” என்று அவள் கூறினாள்.
“அதோ அங்கே மேடை உள்ளது'' என்று நான் கூறினேன்.
அப்பொழுது என்ன நடந்தது என்பதை நீங்கள் கண்டீர்கள். அது முழுக்க முழுக்க மனோவசியத்தினால் நடைபெற்றதா யிருந்தது. ஆனால் சகோதரி ஸ்நைட் மேலே வந்தபொழுது, அச்சகோதரிக்கு கீல்வாத நோய் உள்ளதாகக் கூறப்பட்டது. அதுவே அது என்ன என்பதைக் காண்பித்துவிட்டது. அப்பொழுது சகோதரி ஸ்நைடர்....
அப்பொழுது நான், “அதுவல்ல அப்பெண்மணிக்கு உள்ள கோளாறு என்றேன். 'அவள் கீழேவிழுந்து இடுப்புமுறிந்து போய்விட்டது'' என்று நான் கூறினேன். அவள் அங்கே நின்று கொண்டுகூட இருக்கவில்லை. அதை சகோதரி ஸ்நைடர் நன்றாக கேட்கவில்லை.... அவள் கூறினாள், அவளுக்கு என்ன இருந்தது என்பதை. அது அவளது வயிற்றில் உண்டாயிருந்த கட்டி போன்ற ஒன்றாகும் என்று நான் நம்புகிறேன். அல்லது அதைப்போன்ற ஒரு கோளாறு ஆகும். ''அந்தவிதமான துன்பம் தான் அவளுக்கு இருந்தது, அதைப்பற்றித்தான் உட்கார்ந்து சகோதரர்களிடம் எப்பொழுது சொல்லிக்கொண்டிருப்பாள்'' என்றேன் நான்.
ஆனால், அது வெறும் மாம்சப் பிரகாரமான ஒரு போலிதான் என்பதைக் குறித்து சபைக்கு காண்பிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடுதான் கூறப்படுகிறது. அவ்விதமான போலியானது என்ன செய்கிறது? அது உண்மையான எக்காளத்தைக்கூட ....
26கனடா தேசத்திற்கு நான் சென்றிருந்தபொழுது, நான் ஏற்கனவே கூறியிருந்த அந்த மனிதனை அவர்கள் பிடித்தார்கள். இங்கேயிருக்கிற கூட்டத்தைப் போல் பத்து மடங்கு அதிகமுள்ள மக்கள் கூடியிருந்த நார்வே நாட்டு மக்கள் கூட்டத்தில் அவர் எழுந்துநின்று, “கர்த்தர் எனக்கு கூறுவது என்னவென்றால், இங்கே 'ஜான்' அல்லது ஒருவேளை ”ஜோஹான்னஸ்'' அல்லது 'ஜோஹன்னா' என்ற பெயரில் ஒரு நபர் இருக்கிறார், அவர் இங்கேயே இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.'' அவர் மேலும், “இல்லை. அவர் இங்கு எங்கேயோதான் இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.'' அவர் சீட்டுப் போட்டுப் பார்த்துச் சொல்வது போல் கூறினார். நார்வேஜிய நாட்டில், அங்கே தொண்ணூற்று எட்டு சதவிகிதமான மக்களுக்கு, பீடர்சன், கார்ல்சன், ஜான், ஜோஹன்னஸ் என்ற பெயர்கள் வழங்குவதுண்டு. ஆகவே இந்தப் பெயருள்ள நபர் நிச்சயம் யாராவது ஒருவர் அங்கேயிருக்கத்தான் செய்வார். பிறகு அவர் மேலும் கூறினார், ”கர்த்தர் இங்கு யாரோ ஒருவருக்கு முதுகு வலி இருப்பதாகக் கூறுகிறார், நான் என் னுடைய முதுகு வலிப்பதாக உணருகிறேன்'' என்றார். திருவச னத்தில் வளர்க்கப்பட்டவர்கள் எவரும் இந்தவிதமான காரிய மானது மனோதத்துவ ரீதியில் அமைந்துள்ளது என்பதை நன்கு அறிவார்கள். நிச்சயமாக அது அப்படித்தான் உள்ளது.
ஆனால் பாருங்கள் என்ன நடந்தது? பிறகு அம்மனிதன் எஃப்.பி.ஐ (FBI) போலீஸினால் கைது செய்யப்பட்டு, அங்கே ராயல் மௌண்டட் போலீசுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் அம்மனிதனை பிடித்துக்கொண்டார்கள். அப்பொழுது ஊழியக் காரர்களின் சங்கத்தினர் என்னிடத்தில் வந்து, “அம்மனிதன் ஒரு ஆண் புணர்ச்சிக்காரன்'' என்றார்கள். அவர்கள், ''சகோதரன் பிரன்ஹாம்கூட அதேவிதமான ஆளாகத்தான் இருக்கவேண்டும், அப்படிப்பட்ட வழியாகத்தான் எல்லாம் நடக்கிறது'' என்று அவர்கள் கூறுகிறார்கள். அது என்ன செய்துகொண்டிருக்கிறது? உண்மையான எக்காளத்திற்கும் ஒரு விளங்காத சத்தத்தை கொடுக் கத்தக்கதாகத்தான் இப்படியெல்லாம் நடக்கிறது. பார்த்தீர்களா? சரியாக அப்படித்தான் நடக்கிறது. அதேவிதமாகத்தான் எப்பொழு தும் நடைபெற்று வருகிறது. அதாவது உண்மையான காரியங்களுக்கு ஒரு விளங்காத சத்தத்தைக் கொடுக்கும்படியாகத்தான். அவ்விதமாக செய்வது சாத்தானுடைய வேலையாகும்.
27ஆனால் இப்பொழுதோ, நீங்கள் ஒருபோதும் வார்த்தையை விட்டு வேறுபட்டு நிற்கவேண்டாம். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தேவனுக்கு முன்பாக நான் உங்களுக்கு கட்டளை யிட்டுச் சொல்கிறதாவது: வார்த்தையோடு நிலைத்திருங்கள். அதிலிருந்து ஒருபொழுதும் வேறுபட்டுப் போகாதீர்கள். அவ்வித மான காரியங்கள் மக்கள் மத்தியில் எழும்பும்போது, போலி யானதொன்று தோன்றும் பொழுதெல்லாம், அது அசலானது அங்கே இருக்கத்தான் செய்கிறது என்பதை எடுத்துக்கூறுகிறது. ஒரு கள்ள டாலர் நோட்டு இருந்தால், நிச்சயமாக ஒரு நல்ல டாலர் நோட்டும் அங்கே இருந்தது என்றும், அதைப் பார்த்துத் தான் இப்போலி உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் அது எடுத்துக்காட்டுகிறது. ஒரு மாய்மாலக்காரனானவன் அந்நிய பாஷையில் பேசுவதை நீங்கள் கேட்கும் பொழுது, அவனும் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளான் என்று நீங்கள் கூறிட முடியாது; ஆனால் அவன் அந்நியபாஷை வரத்தைப் பெற்றுள்ள ஒரு அசலானவனையே பார்த்து, அதேபோல் பாவனை செய்கிறான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவ்விதமான காரியங்களை நீங்கள் காணும் பொழுது, அது கள்ளத்தனமானது என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள், அவைகள் உண்மையைப்போல் உருவகப்படுத்தப்பட்டவையாகும். தேவன் நன்மையான எல்லாக் காரியங்களின் மூலகாரணர் ஆவார், ஆனால் சாத்தானோ அந்த வரங்களை பாவனை செய்பவன் ஆவான். நல்லது, நான் இதைப் பேசிக்கொண்டே போனால், நம்முடைய பாடத்தை எடுத்துக் கொள்ளவே இயலாது போய்விடும், அப்படித்தானே?
28(சகோதரன் பென் ப்ரையாண்ட் என்பவர், 'சகோதரன் பிரன்ஹாமே, தயவு செய்து ஒரு நிமிடம் தாருங்கள், என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்'' - என்று கூறுகிறார் - ஆசி.) சரி சகோ தரனே. (''கடந்த ஞாயிறன்று நான் இங்கே வந்திருக்கவில்லை. நீங்கள் எதைக்குறித்துக் கூறிக்கொண்டிருந்தீர்களோ, அதைப் பற்றிய செய்தி சில மாதங்களுக்கு முன்பாக வந்து விழுந்தது. அதைப்பற்றி நானும் உண்மையிலேயே சிறிது கலக்கமடைந்த வனாக இருந்தேன். நான் அதைப்பற்றி உங்களிடமும் சகோதரன் நெவில் அவர்களிடமும் வந்து கூறிடவேண்டும் என்று எண்ணி னேன். ஆனால் நானும் என் மனைவியும் அவ்விஷயத்தை ஜெபத் தில் வைத்திருக்கிறோம் என்று அறிந்துள்ளீர் என்று நான் உணர்ந் தேன். இன்று காலையில் நான் கூடாரத்திற்கு வந்தபோது, என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. நமது விலையேறப் பெற்ற சகோதரர்களில் ஒருவர் என்னிடம் இக்காலையில் வந்து தன்னை மன்னித்துக்கொள்ளுமாறு கோரினார். அக்காரியம் ஒரு அருமை யான விஷயம் என்று நான் எண்ணுகிறேன்.'' (இவ்வாறு சகோதரன் பென் ப்ரையாண்ட் கூறினார் - மொழிபெயர்ப்பாளர்) “ஆமென்'' (அச்சகோதரனுடைய இச்செயல் புகழத்தக்கதான ஒரு செயலாகும்.'') ஆம், ஐயா. ('அச்சகோதரன் தன்னை மன்னித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். ஏனெனில் அவர் இவ்வுப தேசத்தை என்னிடம் கொண்டுவர முயற்சி செய்தார். நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இக்காலையில் தன்னை மன்னித்துக் கொள்ளும்படி அவர் கேட்டார். இயேசுவின் நாமத்தினால் நானும் அவரை மன்னித்துவிட்டேன்'') (இவ்வாறு பென் ப்ரையாண்ட். சகோதரன் பிரன்ஹாமிடம் கூறுகிறார் - மொழிபெயர்ப்பாளர்). ஆமென். நன்றி. உமக்கு, சகோதரன் பென் ப்ரையாண்ட். இப்பொழுது அது சரியாக இருக்கிறது. சகோதரன் பென் அவர்களே, நீங்கள் அதைக் கூறியதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். பாருங்கள், அம்மனிதர்கள், எங்கும் சென்று தவறை திருத்திக் கொள்ளுதலைச் செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட செயல்தான் உண்மை யான கிறிஸ்தவமாகும். அதுதான் கிறிஸ்தவம் செயல்படுகிற ஒன்றாக இருக்கிறது. நீங்கள் தவறாயிருந்தால், போய் நீங்கள் தவறா யிருக்கிறீர்கள் என்பதை எழுந்து நின்று, ”நான் தவறாயிருக் கிறேன், என்னை மன்னிக்க வேண்டும்'' என்று கேளுங்கள்.
29தன் தவறை எந்த ஒரு நபரும் பின்னுக்கு ஒளித்து வைத்தால், அப்பொழுது அவரிடத்தில் ஏதோ பிழை இருக்கிறது. எதையோ அவர் மறைக்கிறார். அப்படி செய்யக்கூடாது. ஐயா, இங்கே அந்த எளிய டாக்டரைப்போல்... பேச முடியாது... அதைப்பற்றி நான் அவர்மேல் சொல்லவில்லை... ஆனால் எப்படியாயினும், அவர் ஒரு சிறிய காரியத்தைச் செய்ய வேண்டுமென்றிருந்தார். நான் அவரிடம், 'ஓ இல்லை, டாக்டர் அவர்களே, நீங்கள் தேவனுக்கு பரிதானம் கொடுக்கமுடியாது'' என்று கூறினேன். “அதை ஒளிவு மறைவின்றி இங்கே சமர்ப்பித்திட வேண்டும். அவ்விதமாக அது போகும்படி விட்டு விடவேண்டும்'' என்று கூறினேன். நிச்சயமாகவே எந்தவித ஒரு தவறையும் செய்ய முயற்சிக்க அம்மனிதன் முழுவதும் அறியாமையுள்ளவராக இருந்தார். ஒரு துண்டு நிலத்தை பெற்றுக்கொள்வதற்கு அது ஒரு நல்ல வழியாக இருக்கும் என்று அவர் எண்ணினார். அவர் தீயவழியில் அதைச் செய்ய எண்ணவில்லை. அதை சரியான முறையில் செய்யவே விரும்பினார். ஆனால் அவர் விரும்பினார்.... அவர் கூறினார்...... இங்கிருக்கிற இந்த நபரை தன் செல்வாக்கிற்கு உட்படுத்த யாரை யாவது அதற்காக பிடித்துக்கொள்ள ஒரு வழியை அறிந்திருந்தார். நீங்கள் அந்தவிதமான வழியில் அதைச் செய்யக்கூடாது. நீங்கள் நேரான வழியில் வரவேண்டும். வார்த்தையோடு சரியாக நிலைத் திருங்கள். அப்பொழுது நீங்கள் பெறுவீர்கள். வார்த்தையோடு சரியாக நிலைத்திருங்கள். எனவே அவ்விதமாக அவர் இருந்த படியினால் தேவன் அவரை ஆசீர்வதித்து, அவருக்கு ஒரு பெரிய காரியத்தைச் செய்தார். ஆம்,
30நல்லது, இப்பொழுது நாம் ஜெபத்திற்காக தலைகளை வணங்குவோம். ஜெபத்தில் எத்தனை பேர்கள் தங்களை நினைத்துக் கொள்ளும்படி விரும்புகிறீர்கள்? இங்கே சக்கர நாற்காலியில் வீற்றிருக்கும் ஒரு மாது தன்னை நினைத்துக்கொள்ளும்படி நிச்சயமாகவே விரும்புவார் என்று நான் நம்புகிறேன். இதோ இங்கே ஒரு சகோதரி, இந்த ஸ்தலம் முழுவதிலும்... இப்பொழுது நாம் யாவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு, ஆராதனைக்குள் பிரவேசிப் போம். அதற்காகவே நாம் இங்கே இருக்கிறோம், அடுத்த முப்பத் தைந்து, நாற்பது நிமிடங்களுக்கு ஆராதனை வேளை.
31இப்பொழுதும் கர்த்தாவே , எங்களை நாங்கள் உமக்கு முன்பாக அமைதிப்படுத்திக்கொள்ளுகையில், எங்களது மகத்தான யோசுவா, பரிசுத்த ஆவியானவராகிய எங்களது இந்நாளுக்குரிய தெய்வீக தலைவர் எங்களுக்கு முன்பாக இருப்பதை உணர்ந்து கொள்ளுகிறோம். மோசேக்கு முன்பாக யோசுவாஜனங்களை அமை திப்படுத்தி, “நாம் அந்த தேசத்தை எடுத்துக்கொள்ள நம்மால் கூடும்'' என்று கூறினதைப்போல் ... ஏனெனில் அவன் அந்த அமலேக்கியர்களையும் எமோரியர்களையும் நோக்கிப் பார்க்காமல், தேவனால் அளிக்கப்பட்ட தெய்வீக வாக்குத்தத்தத்தையே நோக் கிப் பார்த்தான்.
இந்த குழப்பமான இந்நாளில், உலகம் இருக்கிற இந்த நிலையில், இன்றுள்ள இவ்வழகான ஓய்வுநாள் காலையில் உமக்கு முன்பாக நாங்கள் எங்களை அமைதிப்படுத்திக்கொள்கிறோம்; எல்லாவிதமான போலிகளின் மத்தியிலும், மாம்சப் பிரகாரமான பாவனைகளின் மத்தியிலும், எல்லா பொல்லாங்கு , தவறாக வழி நடத்தப்பட்ட ஆவிகளின் நடுவிலும் நாங்கள் எவ்வளவாய் தேவனுடைய வார்த்தையை நோக்கிப்பார்த்து, நாங்கள் முற்றிலும் ஜெயங்கொள்கிறவர்களாயிருக்கிறோம் என்று கூறுகிறோம்! தேவன் தனக்கு கறை திரையற்ற சபை ஒன்று உண்டாயிருக்கும் என்று கூறினார்; ஒரு நாளிலே நாம் அச்சபையை காண்போம் என்பதை நாம் அறிவோம். அதன் உறுப்பினர்கள் என்ற முறையில், நாம் இந்த மகத்தான மறுபடியும் பிறந்த தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் என்பதாய் விசுவாசித்துக்கொண்டு, இன்று பூமி யின் மேல் உள்ள சபை அதுதான் என்று விசுவாசித்தவர்களாய், போராடிக்கொண்டு இருக்கிறோம்; எனவே நாம் பயபக்தியுடன் தேவனை கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் அணுகுகிறோம்.
நாங்கள் தாழ்மையாக வருகையில், எங்களுடைய சிந்தை களை விட்டும், எங்களுடைய இருதயங்களைவிட்டும், அனைத்து லௌகீக காரியங்களையும், வாழ்வின் அனைத்து கஷ்ட துன்பங் களையும் அகற்றிடவேண்டுமென உம்மிடம் வேண்டுகிறோம். ஓ தேவனே, நீர் எங்களை ஆராதனைக்குரிய சரியான நிலையில் வைத்தருளும், அதினால் நாங்கள் உம்மை, உமது வார்த்தையை கேட்பதின்மூலம், தொழுதுகொள்ளச் செய்தருளும்.
இப்பொழுதும், இன்று காலையில் உள்ள எங்களது பாடத்தில் யோவான் மிகவும் அழுதான் என்பதைக் கண்டோம்; ஏனெனில் அப்புத்தகத்தை கையிலெடுக்க ஒரு மனிதனும் அங்கு பாத்திரவானாகக் காணப்படவில்லை. அதைப்போல நாங்களும் கர்த்தாவே, எங்கள் இருதயங்களில் அழமுடியும். ஏனெனில் அப்புத்தகத்தை திறக்க ஒருவனும் பாத்திரவானாக இல்லாத தினாலே. ஆனால் யோவானுடைய அழுகையோசிறிது நேரம்தான் நீடித்தது. சீக்கிரமாகவே அவன் ஆற்றித்தேற்றப்பட்டு, ஆட்டுக் குட்டியானவர் வந்து புத்தகத்தை கையில் எடுத்தார். ஓ, தேவ ஆட்டுக்குட்டியானவரே, இன்று காலையில் வந்து அப்புத்தகத்தை எடுத்து, அதை எங்களுக்கு திறந்துதாரும், கர்த்தாவே, நாங்கள் உமக்குக் காத்திருக்கிறோம். நாங்கள் எங்கள் தகுதியின்மையோடு உமக்காக காத்திருக்கிறோம். உம்முடைய பிரசன்னத்தினாலும், உமது வார்த்தையினாலும் எங்களை திருப்தியாக்கியருளும்.
32ஓ, தேவ ஆட்டுக்குட்டியானவரே, அநேக கரங்கள் உம்மிடத் தில் உயர்த்தப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவருடைய இருத யத்தை நீர் அறிந்திருக்கிறீர். ஏனெனில், நீர் அவர்களது விருப்பங் களை அறிந்திருக்கிறீர். நீர் என்றென்றும் இருப்பது போல இன்றைக் கும் அதேபோன்ற தேவனாகவேயிருக்கிறீர். நீர் எப்பொழுதும் மாறாதவராயிருப்பீர். ஏனெனில் நீர் பூரணராயும், எல்லையற்ற பரம்பொருளாகவும், நீர் மாறமுடியாதவராகவும் இருக்கிறீர். நீர் எங்களை திருப்தியாக்கியருளும் என்று இக்காலையில் கேட்கிறோம். கர்த்தாவே, ஒவ்வொருவருடைய வேண்டுகோளையும் அனுகிரக்கத் தருளும், அதினால் அவர்கள் யாவரும் இக்கட்டிடத்தை விட்டு கடந்து செல்லும்போது, தாங்கள் தேவனுடைய பிரசன்னத்தில் இருந்தோம் என்றும், தங்களுடைய இருதயத்தின் விருப்பங்கள் அனுக்கிரக்கப்பட்டவர்களாய் கடந்து செல்லுகிறோம் என்று திருப்தியடைந்தவர்களாய் செல்ல கிருபை செய்தருளும். அந்த எண்ணிக்கையில் என்னையும் சேர்த்துக்கொள்ள நினைத்தருளும், கர்த்தாவே. இவை யாவற்றையும் இயேசுவின் நாமத்தினால் கேட்கிறேன். ஆமென்.
இப்பொழுது நாம், நம்முடைய கிருபை பொருந்திய புத்தகத்தில் திறந்து, முத்திரைகளை ஆட்டுக்குட்டியானவர் தாமே திறப்பதற்காக எதிர்பார்த்துக்கொண்டு, அல்லது அப்புத்தகத்தை நமக்கு திறந்து கொடுக்க வேண்டுமென எதிர்பார்த்து இருப்போ மாக. இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல் என்ற இப்புத்தகத்தில் நாம் 5ம் அதிகாரத்தை திறந்து எடுத்துக்கொள் வோமாக.
33இப்பொழுது இந்த மின்காந்த ஒலி நாடாக்கள் வாயிலாக இச்செய்தியை உலகம் பூராவிலும் பல்வேறு பாகங்களிலுமிருந்து கேட்டுக்கொண்டிருக்கிற எனது நண்பர்களுக்கு நான் கூறிக் கொள்ளுவது என்னவெனில், இச்செய்தியை அளிப்பதற்கென நான் உபதேசங்களை தெரிவித்தாக வேண்டும். எந்த ஒரு மனி தனுக்கும் உபதேசம் ஏதும் இல்லையெனில், அவனுக்கு என்று ஒரு ஊழியமே இல்லை. எனவே, உங்களுடைய சபையார் இச் செய்தி களை கேட்கக்கூடாது என்று நீங்கள் நினைத்தால், அப் பொழுது, இச்செய்தியடங்கிய ஒலிநாடாவை அவர்களிடமிருந்து விலக்கி வைத்துக்கொள்ளுங்கள். நான் எனது சொந்த கருத்தையும், எனது சொந்த எண்ணங்களையும், தேவனுடைய வார்த்தையின் பேரில் உள்ள எனது சொந்த வெளிப்படுத்துதல்களையுமே நான் எடுத்துக் கூறிக்கொண்டிருக்கிறேன்.
சில மாதங்களுக்கு முன்பாக அல்லது சில நாட்களுக்கு முன்பாக, நாம் மூன்றாம் அதிகாரத்திலிருந்து நான்காம் அதிகாரம் வரையிலும் திருப்பிப் பார்த்தோம். கடந்த ஞாயிறன்று மீண்டும் நான்காம் அதிகாரத்தை திருப்பிப் பார்த்து, 5ம் அதிகாரத்திற்கு வந்தோம். இன்றைக்கு இப்பொழுது, 5ம் அதிகாரத்தை திருப்பிப் பார்க்கப்போகிறோம், அதினால் நாம் வரப்போகும் 6ம் அதிகாரத் திற்கு ஒரு அஸ்திவாரமிட்டது போல் செய்துவிடுவோம்.
34எதிர்காலத்திற்காக திருவசனத்தின் பேரில் ஒரு கிரமத்தை ஏற்படுத்திட வேண்டும் என்பது எனது இன்றைய நோக்கமாயிருக் கிறது. அது எப்பொழுது என்று எனக்குத் தெரியாது, ஆனால் கர்த்தர் சந்தர்ப்பம் அளிக்கிறது போல, என்றாவது ஒரு நாளிலே, இக் கூடாரத்தில், ஏழு முத்திரைகளின் பேரில் செய்தியளிக்க ஏழு நாட்கள் கூட்டங்கள் நடத்தப்படும். (இப்புத்தக மானது வில்லியம் பிரன்ஹாம் சுவிசேஷ சங்கத்தால் வினியோ கிக்கப்படுகிறது - ஆசி). நாம் ஏழு சபைக்காலங்களைப் பற்றிய செய்தியைப் பெற்றிருக்கிறோம். இனிமேல் நாம் தேவனுடைய ஏழு இரகசிய மான முத்திரைகளைப் பற்றிய செய்திகளை ஏழு இரவுகளில் எடுத்துக்கொண்டு, அதாவது ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு முத்திரையாக திறக்கப்பட்டு, இப்படியாக ஏழு இரவு களில் ஏழு முத்திரைகளையும் பார்ப்போம். கர்த்தர் அதை எப்பொழுது நமக்கு தந்தருளுவார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் அதைச் செய்வாராயின், இன்று காலையில் அதற்கான அடிப்படையை நான் போடுவேன்.
இவ்வசனங்களின் கடைசி வசனத்தை நாம் எடுத்துக் கொண்டு... திருவசனத்தின் பாகமாக, தானியேலின் எழுபது வாரங்கள்' என்ற செய்தியை கொண்டு வருவோம். (இப்புத்தகம் 'உரைக்கப்பட்ட வார்த்தை பதிப்பகத்தாரால் வினியோகிக்கப் படுகிறது - ஆசி). கடைசி மூன்று வாரங்கள், அவற்றை , கடைசி முத்திரைகளுக்கு மக்களைக் கொண்டு வருகிற பெந்தெகொஸ்தே யூபிலியோடு இணைப்போம். அதன்பிறகு ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளை உடைப்பதற்காக ஆயத்தமாக அமர்ந்திருப்போம்.
முத்திரைகள் இரகசியமானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். புத்தகமானது முத்திரையிடப்பட்டிருந்தது; அது அதன் புறம்பேயும் இருந்தது, ஏழு முத்திரைகள் அதற்கு இருந்தது, அது அப்புத்தகத்தில் கூட வெளிப்படுத்தப்படவில்லை. இந்தக் காரியங்கள் வேதாகமத்தில் எழுதப்படவும் கூட இல்லை. ஆனால் அதைக்குறித்து யாரேனும் ஒரு வியாக்கியானம் அளித்தால், அது வேதத்தின் ஏனைய பகுதிகளோடும் ஒத்து இருக்கவேண்டும். ஓ, நீங்கள் நிச்சயமாகவே அதிலிருந்து ஒரு ஆசீர்வாதத்தைப்பெறப் போகிறீர்கள் என்பதைப் பற்றி நான் நிச்சயமுள்ளவனாக இருக் கிறேன். நிச்சயமாகவே நீங்கள் அதைப் பெறுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
35இன்று காலையில் இங்கே சரியான நேரத்திற்கு நான் வருவதற்கு எனது கோட்டைப் போட்டுக்கொள்ளக்கூட எனக்கு இயலவில்லை. ஏனெனில், நான் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்த பொழுது, படித்துக்கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் என்னில் தமது தயவால், மேலும் மேலும் நிரப்பிக்கொண்டே யிருந்தார். நான் அதைக் கண்ட பொழுது, 'நீர் எனக்கு இப்பொழுது இங்கே கொடுத்துக்கொண்டிருக்கிற வண்ணமாக சபையில் சொல்ல இயலுமென்றால், எவ்வளவாய் ஒரு நல்ல தொரு வேளை நமக்கு உண்டாயிருக்கும்'' என்று எண்ணினேன். ஆனால், ஜெபத்தில் நீங்கள் இருக்கையில் உங்களுக்கு கிடைக்கிற வண்ணமாக அதை உரைக்க எப்படியோ உங்களுக்கு இயலாமற் போய்விடுகிறது.
ஆனால் இப்பொழுது, முதல் வசனங்களை நாம் திரும்பவும் ஆரம்பிப்பதற்கு முன்பாக, நாம் கண்டோம்..... கடந்த ஞாயிறன்று நாம் எங்கே விட்டோமோ அதை நாம் திருப்பிப் பார்போமாக. நாம் எபேசியர் 1:12, 13-ல், நமது இரட்சிப்பின் அச்சாரத்தைப் பெற்றிருக்கிறோம் என்று பவுல் கூறியதைக் கண்டோம். நமது மீட்பின் அச்சாரம். நமது மீட்பிற்கு அச்சாரமாயிருப்பது பரிசுத்த ஆவியேயாகும். இது .... அடுத்த சில வாரங்களுக்கான போதித்த லானது மீட்பைப் பற்றிய அடிப்படையைக் கொண்டதாக இருக்கும். மீட்பின் பேரில்தான். நீதிமான் ஆக்குதலின் பேரில் அல்ல. இல்லை. அது மீட்பை அடிப்படையாகக் கொண்டதாகும். பரிந்து பேசுகிற மத்தியஸ்த ஊழியத்தைப் பற்றியதாக அது இருக்காது. ஆனால் அவ்வுபதேசங்கள் மீட்கப்பட்டவர்களைப் பற்றியதாகவே இருக்கும். இழந்துபோகப்பட்ட அல்லது பறி கொடுத்துவிட்ட ஒரு சுதந்திரம். அது மீண்டும் நமக்கு மீட்டு கொடுக்கப்பட்டது. அது எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என் பதைப் பற்றியும், ஓர் உலகம் என்பது ஏற்படும் முன்னரே தேவன் அதை எவ்வாறு திட்டமிட்டார் என்பதைப் பற்றியும், அதினால் சபையானது எவ்வாறு பத்திரமாக நங்கூரமிட்டு இருக்கிறது என்பதைப் பற்றியும் நாம் பார்க்கலாம்.
36நாம் எவ்வாறு நின்றுகொண்டிருக்கிறோம் என்பதைப்பற்றி நாம் அறிய வேண்டியதான வேளைக்கு வந்திருக்கிறோம் என்று நான் எண்ணுகிறேன். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதின் பேரில் அதற்கான விசுவாசம் உங்களுக்கு இருந்தாலொழிய நீங்கள் அதை எவ்வாறு செய்யமுடியும்? உங்களுக்கு விசுவாசம் இருந்தாகவேண்டும். இங்கேயுள்ள இந்த சபைக்கு அந்த நோக்கத்தின் பேரில்தான் நான் இதைச் செய்துகொண்டு இருக்கிறேன். அதாவது விசுவாசிகள், தாங்கள் எதற்காக நின்று கொண்டிருக்கிறார்களோ, அதற்கான விசுவாசத்தையும் நம்பிக் கையும் அவர்களுக்கு அளிப்பதுதான் அந்நோக்கம். ஏனெனில் அது கர்த்தருடைய வார்த்தையாயிருக்கிறது. அது வேத வாக்கியத்தின் மூலமாக இருக்கிற வரையிலும், ஆதியாகமம் முதல் வெளிப் படுத்தின விசேஷம் வரையிலும் இறையாண்மை முன்னும் பின்னும், மேலும் கீழும் வைக்கப்பட்டு, பிசாசு அங்கே எவ்வகை யிலாகிலும் உள்ளே பிரவேசிக்க வகை, வழியில்லாத படி காக்கப்பட்டிருக்கிறது. அதினால் உங்களுக்கு பரிபூரண நம்பிக்கையானது உண்டாயிருக்கிறது; நீங்கள் எங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள்.
37அதேவிதமாகத்தான் இங்கே சக்கர நாற்காலியில் அமர்ந் திருக்கிற இந்த சகோதரிக்கும், அல்லது இங்கே வியாதிப்பட்டு, பெலவீனப்பட்டு இருக்கிற ஏனையோர்க்கும் காரியமானது உள்ளது. ''உங்களை குணமாக்குவது தேவனுடைய நற்பிரியமா யிருக்கிறது'' என்பதாக உங்களுக்கு பரிபூரண அறிவு உண்டா யிருக்கக்கூடுமானால், அப்பொழுது உங்களை வியாதிப்பட்டவர் களாக தொடர்ந்து வைத்திருக்கக்கூடிய அளவுக்கு போதுமான பிசாசுகள் இருக்கிறதில்லை. காரியமானது அப்படித்தான் உள்ளது. உங்களைக் குணமாக்குவது தேவனுடைய நற்பிரியம் என்பதைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளும் போது, அவர் அதை உங்களுக்காக செய்து முடித்திருக்கிறார் என்று அறிந்து கொள்ளும் போது, அப்பொழுதுதான், ஒரு குறிப்பிட்ட காரியத்தை எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி புரிந்து கொள்ளுகிறீர்கள்.
38அது இவ்வாறு உள்ளது. என் முழு இருதயத்தோடும் நான் உங்களிடம் கூறுவேனென்றால்... நீங்கள் பசியாயிருந்து, சாவுக் கேதுவாக பட்டினி கிடந்து இருந்தீர்களானால், அந்நிலையில் உங் களுக்கு என்னைப் பற்றி, ஒரு உண்மையான நபர் என்பதாக மிகுந்த நம்பிக்கை இருக்குமானால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு ஆயிரம் டாலர் கிடப்பதாக உங்களுக்கு நான் கூறி, அதை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதையும், எந்த சாலை வழியாக, சரியாக எந்த இடத்திற்கு நீங்கள் செல்லவேண்டும் என்பதையும் நான் கூறுவேனென்றால், அப்பொழுது, அப்பணம் எந்த இடத்தில் கிடக்கிறது என்பதை சரியாக அறிந்து கொள்ளுவீர்கள். நான் சொன்னதை நீங்கள் விசுவாசித்திருந்தால், பணமே உங்கள் கையில் கிடைத்துவிட்டது போல் நீங்கள் மகிழ்ந்து களிகூர்ந்து கொண்டிருப்பீர்கள்.
39எனவே நீங்கள் பெற்றுக்கொள்ளும் முன்னரே..... சுகம் அடைந்ததாக உணர்ந்துகொள்ளும் முன்னரே, 'அதைப் பெற்றுக் கொண்டேன்'' என்று கூறி, நீங்கள் உங்கள் சுகத்தைக் குறித்து மகிழ்ச்சி கொண்டிருக்கமுடியும், ஏனெனில் நீங்கள் அதைப் பெறு வதைப்பற்றி உறுதியான நம்பிக்கையுடையவர்களாய் இருப்ப தினால்; ஏனெனில், அதை உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்த அந்த மகத்தான ஒருவர் பேரில் உங்களுக்கு நம்பிக்கை உண்டாயிருக் கிறதல்லவா? பார்த்தீர்களா? அவர் பொய்யுரைக்க இயலாது என்றும், அச்சுகமளித்தல் சரியாக எங்கே இருந்து கொண்டிருக் கிறது என்பதைப் பற்றி உங்களுக்கு கூறியிருக்கிறார் என்னும் திட நம்பிக்கை உங்களுக்கு உண்டு. நீங்கள் ஏற்கனவே அதைப் பெற்று விட்டதாக உங்களுக்கு நம்பிக்கை உண்டாயிருக்கிறது. ஏனெனில் உங்களுடைய மீட்பின் அச்சாரமாயிருக்கிற உங்களுடைய விசுவாசமே அது.
அதாவது, நீங்கள் உங்கள் வியாதியிலிருந்து மீட்கப்பட வேண்டுமென முயன்று கொண்டிருக்கையில், அப்பொழுது அதற் கென நீங்கள் கொண்டுள்ள விசுவாசம் உங்களுடைய சுகமளித் தலின் அச்சாரமாயுள்ளது. உங்கள் உள்ளத்தில் ஏதோ ஒன்று, “உன்னைக் குணமாக்குகிற கர்த்தர் நானே'' என்று கூறுகிற தென்றால், அதுவே உங்களுக்கு போதுமானதாக, நன்மையானதாக இருக்கிறது. அதுவே உங்களுக்கு தேவையானதாக இருக்கிறது. என்னே! அந்நிலையில், என்ன நேரிட்டாலும் சரி, நீங்கள் மகிழ்ச்சி யடைய ஆரம்பிக்கலாம். உங்களுக்கு அது கிடைக்கவில்லை யெனில், உங்கள் நிலைமை இன்னும் மோசமடைந்து கொண் டிருக்கிறதென்றால், நீங்கள் குணமடைந்துவிட்டால் எவ்வாறு மகிழ்ச்சியாயிருப்பீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் மகிழ்ச்சியா யிருக்கலாம். ஏனெனில் அவ்வியாதி குணமடைந்துவிட்டது என்பதற்கான ஒரு உறுதியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதை இப்பொழுது எத்தனை பேர்கள் புரிந்து கொண்டீர்கள். உங்கள் கரங்களை நாங்கள் பார்க்கட்டும். அது ”காணக்கூடாதவைகளின் நிச்சயமாயிருக்கிறது.''
40இந்த 5ம் அதிகாரத்தின் துவக்கத்தில் நாம் காண்கிற தென்னவெனில், 5ம் அதிகாரமானது வெளிப்படுத்தின விசேஷத் தின் 3ம் அதிகாரத்தில் உள்ள சபைக்காலத்தின் கடைசி பாகத்தினை இணைக்கும் வரை முடிச்சு போல உள்ளது. 4ம் அதிகாரம் எதற்காக யோவான் பரலோகத்திற்கு எடுக்கப்பட்டான் என்பதைத் தெரியப் படுத்துகிறது. 5ம் அதிகாரமானது எதற்காக ஆயத்தப்படுத்துகிற தென்றால் ..... சபைக் காலங்களினூடே கடந்து சென்ற பிறகு யோவான் 4ம் அதிகாரத்தில் உயர எடுத்துக் கொள்ளப்படுகிறான். 5ம் அதிகாரமானது, ஏழு முத்திரைகள் திறக்கப்படுதலுக்கான காட்சியை அவன் அமைப்பதாகக் காணப்படுகிறது. எவ்வாறு அவன் வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதிகாரத்தில் ஏழு சபைக் காலங்களுக்கு வழியைத் திறந்து வைத்தானோ அதற் கொப்பாய் இதுவும் இருக்கிறது. அங்கே அவர் ஏழு குத்துவிளக்கு களின் மத்தியில் நிற்பவராய், பதுமராகத்துக்கும் வச்சிரக் கல்லுக்கும் ஒப்பாய் காணப்படுகிறார். அவர் அங்கே ஏழு சபைக் காலங்களுக்காக ஆயத்தம் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
இப்பொழுதும் அவர், மீட்புக்குரிய ஏழு முத்திரைகளைத் திறப்பதற்காக ஆயத்தம் பண்ணிக்கொண்டிருக்கிறார். அதற்காகத் தான் 5ம் அதிகாரம் இருக்கிறது. அக்காரணத்தினால்தான் அதை நான் வாசித்து, அதிலிருந்து எடுத்து அதன் பேரில் பேசி, வேத வாக்கியத்தின் ஏனைய பாகங்களை எடுத்துக் கூறினேன். ஏனெனில், அது ஒவ்வொரு வசனவாரியாக இல்லை. ஆனால் ஏதோ ஒன்று சம்பவிப்பதற்காக ஆயத்தப்படுத்துவதாக அது காணப்படுகிறது. நீங்கள் அந்த ஆயத்தத்தைப் பெற்றுக்கொள்வீர்களானால், அப் பொழுது, அதைப் பெற்றுக் கொள்ளவும் ஆயத்தமாய் இருப் பீர்கள். எனவேதான் அது விசுவாசத்தினால் என்பதாக இருக்கிறது. இப்பொழுது இம்முத்திரைகள்...
41இங்கே நான் சில வேத வாக்கியங்களையும், சில வியாக்கி யானங்களையும் எழுதி வைத்திருக்கிறேன். இப்பொழுது, எபேசி யர் 1:13-14ல் நீங்கள் அதை எழுதிக்கொள்ள விரும்பினால், “இப்பொழுது நாம் இந்த அச்சாரத்தைப் பெற்றவர்களாய் இருக் கிறோம். பரிசுத்த ஆவியே நமது சுதந்திரத்தின் அச்சாரமாயிருக் கிறது'' என்பதைப் பற்றி அது கூறுகிறது. அதாவது, அச்சாரம் என்பது, கிறிஸ்துவுக்குள் நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளோம் என்பதற்கான உறுதியாக இருக்கிறது. அதாவது முன் பணமாக இருக்கிறது. நமக்கு நித்திய ஜீவன் உள்ளது என்பதற்கான ஆசீர் வதிக்கப்பட்ட நம்பிக்கையையும் காப்பீட்டையும் கொடுப்பதாக அது உள்ளது. அவர் நமக்காக கிரயத்துக்குக் கொண்ட அனைத் துக்கும் நாம் சுதந்திரவாளிகள் என்பதையும் அது காட்டுகிறது. ஓ, என்னே! உங்களால் அதைக் காண முடிகிறதா?
42ஓ நீங்கள் பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட்டிருக்கும் போது (நான் தொடர்ந்து அதைக் குறித்து குறிப்பிட்டுக் கொண்டே யிருக்கிறேன். ஏனெனில் நீங்கள் அதை இழந்து விடக்கூடாதே என்று நான் விரும்புகிறேன்) எதையெல்லாம் நமக்குப் பெற்றுத் தர கிறிஸ்து மரித்தாரோ அவையெல்லாம் நமக்குச் சொந்தமான தாக உள்ளது என்பதை அங்கீகரித்துக் காண்பிக்கும் தேவனுடைய முத்திரையாக அது இருக்கிறது. “இப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொண்டு விட்டேன். இம் முத்திரையை நான் உங்களுக்குக் கொடுப்பேன். அதற்காகத்தான் அந்த வேளைக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்' என்பதாக தேவன் கூறுகிறதாக அது உள்ளது. நமது முழு மீட்பையும் பெற்றுக் கொள்வதற்காக, ஏற்கனவே நாம் ஒரு பகுதியளவுக்கு மீட்கப்பட்டிருக்கிறோம்.
நான் அன்றொரு ஞாயிறன்று கூறியதைப் போல... இந்த கீழ்மட்டமான வழியில், பாவியானவன், சேற்றிலும் தூசிபடிந்த நிலையிலும் கடந்து அவர்கள் சுத்தமாக இருக்கக்கூடும். நான்கு மணிநேரத்திற்கு ஒருமுறை குளிக்கக்கூடும். மிகச் சிறந்த ஆடை களைக்கூட அவர்கள் அணியக்கூடும். அவர்கள் மிகவும் நேர்த்தி யான கல்வியறிவு மிக்கவர்களாகக்கூட இருக்கக்கூடும். ஆனால் தங்கள் ஆத்துமாவிலோ அவர்கள் நரகத்திலுள்ள அருவருப் பானதும், ஆபாசமானதும் அசுத்தமானதுமான சுவர்களைப் போல் இருப்பார்கள்.
43ஆனால் ஒரு கிறிஸ்தவனோ, அந்த விதமான நிலைக்கு மேலாக செல்கிறவனாய் இருப்பான். ஏனெனில், இங்கே உள்ளே, தன்னில்தானே நமது சுதந்திரத்தின் அச்சாரத்தைப் பெற்றவனாய் இருக்கிறான். அவன்தானே இந்த அசுத்தத்திலிருந்தும் அருவருப்பி லிருந்தும் தூக்கியெடுக்கப்பட்டு, உன்னதமான நிலையில் செல்கிற வனாய் இருக்கிறான். ஓ, நான் அதை விரும்புகிறேன். பவுல் ரேடெர் என்பவர் இவ்விதமான உள்ள நிலையைப் பற்றி கூறு கையில், ''நான் அம்மேலான இடத்தில் பயணம் செய்கிறேன், நான் பயணம் செய்கிறேன்'' என்று கூறுகிறார். அங்கேதான் அந்த நிலை உள்ளது. இயேசு என்னுடையவர், அது ஆசிமிகும் உறுதியாகும் தெய்வீக மகிமையின் என்னே ஒரு முன்ருசி அது (ஊற்றண்டையில் நான் அதை ருசிபார்க்க அனுமதிக்கப்பட்டேன்) இரட்சிப்பின் வாரிசு, தேவன் கிரயத்திற்குக் கொண்டதால் அவர்தம் ஆவியால் பிறந்தேன், இரத்தத்தால்
கழுவப்பட்டேன். இதுவே என் கதை, இதுவே என் பாடல் எந்நாளும் இரட்சகரைத் துதிப்பேன் இதுவே என் கதை, இதுவே என் பாடல், நாள் முழுதும் என் இரட்சகரைத் துதிப்பேன்
44இருள் பிரதேசங்களிலிருந்தும், அசுத்தத்திலிருந்தும் தூக்கி யெடுக்கப்பட்டோம். மகிமையின் முன் ருசியைக் கண்டோம். நமது அனைத்து சுதந்திரத்தின் அச்சாரத்தை நாம் இப்பொழுது உடையவர்களாக இருக்கிறோம். ஏனெனில் தேவன் நம்மை ஏற்கனவே பூமிக்குரிய காரியங்களிலே நாம் கொண்டிருந்த நமது வேர்களை பிடுங்கியெறிந்து, நம்மை உன்னதமான பிரதேசங் களிலே நட்டார். என்னை அவர் தூக்கியெடுத்து, என்னை லௌகீக காரியங்களிலிருந்து பிரித்தெடுத்து, என்னை மருரூபப்படுத்தினார். எனது வேர்களைப் பிடுங்கியெறிந்து, கிளைகளையும் எடுத்து, என்னை உளையான சேற்றிலிருந்தும் பாவத்தின் பழைய குழியிலிருந்தும் தூக்கியெடுத்து, என்னை சீயோன் மலையின் உச்சியிலே நட்டு, பிரியமுள்ள தேவனுடைய பரிசுத்தவான்களின் பழத்தோட்டங்களில் என்னை நட்டார். இப்பொழுது பிரியமுள்ள அந்த இராஜ்ஜியத்தின் பிரஜையாக நாம் இருக்கிறோம். கிறிஸ்து இயேசுவிலே சகோதர சகோதரிகளாக இருக்கிறோம். நமது சிந்தைகளிலிருந்த எல்லாவிதமான அசுத்தங்களும் அருவருப் புகளும் அகன்றன. நமது சரீரங்கள் சுத்தமான தண்ணீ ரினால் சுத்திகரிக்கப்பட்டு, நமது இருதயங்கள் கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தினால் தெளிக்கப் பட்டுள்ளன. பரிசுத்த ஆவியானவர் தமது இனிய காற்றினால் நம்மில் வாசம் பண்ணிக் கொண்டிருந்து, நமது கிரியைகள் வழியாக நாள் முழுவதும் வீசிக் கொண்டிருக்கிறார். நமது கிளைகள் வழியாக வீசிக் கொண்டிருந்து, நம்மை அப்படியும் இப்படியுமாக அசையச் செய்து, அதினால் அவரில் நன்கு வேர்கொள்ளும் படி செய்து, ஆழமாக வேரூன்றி வளரச் செய்கிறார். அது அற்புத மாக இருக்கவில்லையா? “நமது இரட்சிப்பின் அச்சாரம்'.
45இவ்வதிகாரம் நாம் இழந்து போன சுதந்திரத்தைப் பற்றி வெளிப்படுத்துகிறது. நமது இழந்து போகப்பட்ட சுதந்திரமானது, நமது கிருபையுள்ள, விலையேறப் பெற்ற, நெருங்கின இனத்தானாகிய மீட்பரினால் திரும்ப உரிமை கோரப்பட்டுள்ளது. தேவன் எவ்வாறு கீழிறங்கி வந்தார்! அவர் தேவன் என்னப்படுவதில் இருந்து, மனிதனாக தனது பாத்திரத்தை மாற்றிக் கொண்டார். அவர் மானிடராக, நெருங்கின இனத்தான் மீட்பராக ஆவதற்காக இவ்வாறு செய்தார். எதற்கெனில் ஒரு இயற்கை உலகை, மீண்டும் மானிடருக்கு மீட்டுத் தருவதற்காக இவ்வாறு ஆனார். ஆமென்! இயற்கைக்கு அப்பாற்பட்ட அந்த தேவன் நெருங்கின இனத்தான் மீட்பராக ஆவதற்காக எவ்வாறு அவர் மாம்சத்திற்குரிய தோற்றத்தை எடுத்துக் கொண்டார்! ஏனெனில் அவர் தமது சொந்த பிரமாணங்களை தாமே மீற முடியாதவராக இருக்கிறார். அவர் நெருங்கின இனத்தான் மீட்பராகத்தான் ஆக வேண்டியிருந்தது, ஏனெனில் அதுவே உரிய வழியாயிருந்தது. அதுவே அவரது திட்டங்களாகும். அவ்விதமாகத்தான் அதை அவர் செய்தார்.
மனிதன் விழுந்து விடுவான் என்பதை தேவன் முன்னமே அறிந்திருந்தார். ஆயினும் அவரால் அவனை விழவைக்க முடியாது. எவரும் கெட்டுப்போவதை அவர் விரும்பவேயில்லை. ஆனால் மனிதன் கெட்டுப் போவான் என்பதை அவர் அறிந்தேயிருந்தார். ஆனால் எல்லா மனிதருக்கும் தேவனுடைய தன்மைகள் மகத்தான விதமாக பிரத்தியட்சமாக்கப்பட வேண்டும் என்பதற்காக, அவர் மீட்பராக ஆவதற்காக, அவர் இரட்சகராக ஆவதற்காக, மனிதன் கெட்டுப் போக வேண்டியது அவசியமாயிற்று. விழுந்து போவது என்பது மனிதனில் காணப்பட்டது. ஆனால் மனிதனை மீண்டும் மீட்டுக்கொள்ள வேண்டும் என்ற தன்மை தேவனில் இருந்தது. அக்காரணத்தினால் தான் நமக்கு இரவு வேளையானது உண்டா யிருக்க வேண்டியிருக்கிறது, எதற்கென்றால் பகற்காலத்தை நாம் விரும்பி நாடுவதற்காக, பூரண ஆரோக்கியத்தை நாம் மகிழ்வுடன் அனுபவிக்க வேண்டி நாம் வியாதிப்பட வேண்டியுள்ளது. இன்ப மும், துன்பமும் எல்லாம் தேவையாயிருக்கிறது. இப்பொழுது, நமது நெருங்கின இனத்தான் மீட்பர்...
46இப்பொழுது நீங்கள் இங்கே கவனிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். நான் 5ம் அதிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருக் கிறேன், அவன் உற்றுப் பார்த்தபொழுது, ''பயப்படாதே'' என்று கூறப்பட்டது. இந்த 5ம் வசனத்தில், 'பயப்படாதே'' என்று கூறப்படுகிறது. அங்கே எப்பொழுதும்.. பாருங்கள்... எந்தவொரு காரியத்தைக் குறித்தும் கலவரமடைய வேண்டாம்.
“அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும், தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன் களுக்கும், மூப்பர் களுக்கும் மத்தியிலே நிற்கக் கண்டேன்...'
வெளி. 5:5-6.
“ஒரு ஆட்டுக்குட்டி.'' இதற்கு முன்னால் யோவான் ஏன் அந்த ஆட்டுக்குட்டியைக் காணவில்லை? அந்த ஆட்டுக்குட்டி யானவர் பிதாவின் சிங்காசனத்தில், வாயிற் காவலர்களைத் தாண்டி, உள்ளே வீற்றிருந்தார். யோவானால் உள்ளாகப் பார்க்க முடிய வில்லை. அவன் அந்நான்கு ஜீவன்களை மாத்திரமே, அந்நான்கு கேருபீன்களை மாத்திரமே, அவைகள் அப்பரிசுத்த ஸ்தலத்தை காவல் செய்து கொண்டிருக்கிறதை மாத்திரமே காண முடிந்தது. ஞாயிற்றுக்கிழமை பாடத்திலும் ஏனைய பாடங்களிலும் நாம் அதைப் பற்றி பார்த்தோம். அதற்கு அப்பால் என்ன இருந்தது என்பதை அவனால் காண முடியவில்லை என்பதைக் கண்டோம். அங்கேதானே திடீரென மிகவும் இரகசியமான முறையில் திடுதிப் பென்று ஒருவர், ஒரு ஆட்டுக்குட்டியானவர் தோன்றினார்.
இப்பொழுது, அது, ஒரு மாம்சப்பிரகாரமான ஆட்டுக் குட்டி யல்ல என்பதை காண்பித்தது. ஏனெனில், அது சிங்காசனத்தில் வீற்றிருந்தவருடைய வலது கரத்திலிருந்து புத்தகத்தை எடுத்தது, சாதாரண ஒரு ஆட்டுக்குட்டி அவ்வாறு செய்ய முடியாது. அவர் ஒரு ஆட்டுக்குட்டியானவராக, கிறிஸ்துவாக இருந்தார். அதாவது, அவரது தன்மைகளிலே அவர் ஒரு ஆட்டுக்குட்டியைப் போல சாந்தமும் அமைதியுமாக இருந்தார்.
47இப்பொழுது கவனியுங்கள், அவர் ஒரு ஆட்டுக்குட்டி மீட்பர், முதலில் உள்ளதைப் போலவே அவர் ஒரு ஆட்டுக்குட்டி மீட்பராக இருக்கிறார். தேவன் ஒருபொழுதும் மாற முடியாது. ஏதேன் தோட்டத்திலே முதலாவதான மீட்பர் ஒரு ஆட்டுக் குட்டியே. தேவன் அங்கே ஒரு ஆட்டுக்குட்டியைத்தான் பலியாக செலுத்தினார். வெளிப்படுத்தின விசேஷத்திலே இங்கே அது மீண்டும் ஒரு ஆட்டுக்குட்டியாகவே காணப்படுகிறது. எதை மீட்ப தற்காக? விழுந்து போன மானிட வர்க்கத்தினரின் நிலையையும், விழுந்து போன சுதந்திரத்தையும் மீட்பதற்காகவே. ஆதி நிலை மைக்கு நம்மை மீண்டும் மீட்டுக் கொண்டு போவதற்காகவே ஒரு ஆட்டுக்குட்டியானவர் திரும்ப வருகிறார். நம்மை மீட்டுக் கொள்வதற்காக.
எதை மீட்பதற்காக? என்னத்திற்காக நம்மை அவர் மீட்டுக் கொள்ளப் போகிறார்? எந்த ஒன்றாவது மீட்கப்பட்டிருக்கிறது என்றால், அது இழந்து போகப்பட்டிருக்கிறது என்று அர்த்தமாகும். அதுதானே இழந்து போகப்பட்டு, திரும்ப அது கொண்டு வரப் பட்டுள்ளது என்பதுதான் மீட்கப்படுதல் என்பதாம். இவ்வாட்டுக் குட்டியானவர் எதை நமக்கு திரும்ப அளித்துள்ளார்? ஆதியில் நாம் கொண்டிருந்த அனைத்தையும்தான்.
நாம் ஆதியில் என்னத்தைக் கொண்டிருந்தோம்? நித்திய ஜீவனை. நாம்தான் உலகத்தின் உரிமைக்காரர்கள் ஆக இருந்தோம். நமக்கு ஜீவன் உண்டாயிருந்தது. நாம் மரிக்க வேண்டியதாயிருக்க வில்லை. நாம் வியாதிப்பட்டவர்களாய் இருக்க வேண்டியிருக்க வில்லை. நாம் முதிர்வயதையடைய வேண்டியவர்களாய் இருக்க வில்லை. நமக்கு களைப்புறுதல்கள், சோர்வுகள் இருக்கவில்லை. அங்கே சவ அடக்கங்கள் இல்லை. கல்லறைகள் அங்கே இல்லை. ஒரு தீமையும் இல்லை. மரணம் இல்லை. நரைமுடி இல்லை. தளர்ந்த தோள்கள் அங்கே இல்லை. புலம்பலும் அலறுதலுமில்லை. நமக்கு நித்தியமான ஜீவன் உண்டாயிருந்தது. நமக்கு பூமி முழுவதின் மேலான ஆட்சியதிகாரம் உண்டாயிருந்தது. பூமியின் மேல் நாம் ஒரு தேவனாக இருந்து நடந்து வந்தோம். இங்கே ஒருமரம் சரியான இடத்தில் நின்று கொண்டிருக்கவில்லை என்று காணப்பட்டால், அப்பொழுது அதைப் பார்த்து, “நீ பிடுங்கப்பட்டு, இன்ன இடத்தில் நடப்பட்டிருப்பாயாக'' என்று நாம் கூறுவோம். அப் பொழுது அது அவ்விதமாகவே சம்பவித்துவிடும் என்பதாக இருந்தது. காற்றுகள் அடித்துக்கொண்டு இருந்ததென்றால், அது நமக்கு தேவையில்லையென்றால், ”இரையாதே, அமைதலயாயிரு'' என்று கூறிவிட்டால், அது அவ்வாறே சம்பவிக்கும் என்பதாக இருந்தது. அவர் என்ன செய்வதற்காக வந்தார்? அவை யாவற்றை யும் நமக்கு திரும்ப மீட்டுத் தருவதற்காகத்தான். (ஓ , - ஓ, என்னே !) அவை யாவற்றையும் நாம் திரும்பப் பெறுவதற்காகத்தான்.
48எதை எதிர்பார்த்து இயற்கையானது ஏங்கித் தவிக்கிறது? தேவ புத்திரர் பிரத்தியட்சமாவதற்காகத்தான். தேவனுடைய புத்திரர் தோன்றுவதாற்காகத்தான்.
இப்பொழுது நம்முடைய இரட்சிப்பின் அச்சாரத்தை நாம் நம்மிலே உடையவர்களாய் இருக்கிறோம். எனவே , நாம் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருக்கிற நமது சகோதரனை எடுத்து, அச்சிறிய மீட்பின் சுவாசத்தைக் கொண்டு, ஒரு விசுவாசமான ஜெபத்தை அவனுக்காக ஏறெடுத்தால், அது அவன் மேலுள்ள நோயின் இருளை அகற்றி, அவனை ஆரோக்கியமுள்ள மனிதனாக ஆக்கிவிடும். அப்படியிருக்க, நமது பூரண சுதந்திரம் வரும் பொழுது அது என்ன செய்யும்? ஆமென்.
இயற்கைகூட அதை அறிந்திருக்கிறது. இயற்கை ஏங்கித் தவிக்கிறது. அதனோடு சேர்ந்து நாமுங்கூட ஏங்கித் தவிக்கிறோம். இயற்கையானது தேவ புத்திரர் வெளிப்படுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில், இயற்கை தனது எஜமானனோடு சேர்ந்து சபிக்கப்பட்டது. அதின் ஆண்டவன் (எல்லாவற்றிலும் உயர்ந்த நிலையில் உள்ளவன்) சபிக்கப்பட்ட பொழுது, அப்பொழுது தன் ஆண்ட வேனாடு இயற்கையும் வீழ்ந்தது. ஆனால் நெருங்கின இனத்தான் மீட்பர் வருகிறபொழுது, (அல்லேலூயா!) இயற்கையின் மேல் ஆண்டவனாயிருக்கிற மனிதனை மீண்டும் மீட்டுக் கொண்டார். இப்பொழுது சர்வ சிருஷ்டியும், தன் ஆண்டவனாகிய மனிதனுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.
49நாம் என்ன செய்கிறோம்? நாம் ஒரு மரத்தை வெட்டி வீழ்த்த வேண்டு மென்று விரும்பினால், அதற்கென ஒரு கோடாரியை கையில் எடுத்து, அதை வெட்டி வீழ்த்துகிறோம். ஆனால் அந்நாளிலே நாம் அவ்வாறு செய்ய மாட்டோம். ஆமென்!
சர்வ சிருஷ்டியும் தனது ஆண்டவனுக்காக (எஜமானனுக் காக) காத்துக்கொண்டிருக்கின்றன. அவ்வெஜமானன் யாரென் றால், தேவனுடைய புத்திரரேயாவர். அவர்களுக்குத்தான் இப்பூமி கையளிக்கப்பட்டது. தேவன் நிச்சயமாக தனது வானங்களையுடை யவராய் இருப்பார். ஆனால் இப்பூமி மனிதனுக்கே கையளிக்கப் பட்டது. நாம் இழந்து போனதை நமக்கு திரும்ப மீட்டுத் தருவதற் காகவே, நெருங்கின இனத்தான் மீட்பர் வருகிறார். எவ்வளவு அழகாயுள்ளது! என்னே ! நான் எண்ணுகிறேன் ..... 'ஒரு ஆட்டுக்குட்டி மீட்பர்.''
50அந்த கிரியையானது செய்து முடிக்கப்பட்டவுடன் நாம் மீண்டும் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வோம். அவைகள் என்னவிதமானவை? நமக்கு எல்லாவிதமான வல்லமையும் உண்டாயிருக்கும். நமக்கு நித்திய ஜீவன் உண்டாயிருக்கிறது. நமக்கு நித்திய ஆரோக்கியம் உண்டாயிருக்கும். நமக்கு நித்திய இளமை உண்டாயிருக்கும். நமக்கு நித்திய வல்லமை உண்டா யிருக்கும் ஓ, நித்தியமானவரோடு நாம் நித்தியமானவர்களாக இருக்கிறோம். அதன்பிறகு, அவ்வேளை வருவதற்காக நாம் யாவரும் காத்துக்கொண்டிருக்கிறோம். ஏங்கித் தவித்து காத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஏழு மடங்கான ஏழு மீட்பின் திட்டம் அடங்கிய புத்தகம் நமக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது, அதைத்தான் இப்புத்தகம் தன்னகத்தே கொண்டுள்ளது. நாம் இப்பொழுது இந்த பலமுள்ள தூதன் ஒன்றை அறிவிப்பதும், யோவான் புசிக்க வேண்டியதாயிருந்த ஒரு சிறு புஸ்தகத்தை தன் கையில் உடைய வனாய் இருப்பதுமான காட்சியையுடைய 10ம் அதிகாரத்திற்கு போகப்போகிறோம். யோவான் அதைப் புசித்தபொழுது, அது அவன் வயிற்றுக்குள்போய், கசப்பாக இருந்தது. ஆனால் அவன் உதடுகளில் அது மதுரமாயிருந்தது.
51அதை நீங்கள் ஜீரணிக்கும் பொழுது அப்பொழுது அது கசப்பாக இருக்கிறது, எல்லோரும் உங்களுக்கு எதிராக எழும்பி, “நீங்கள் ஒரு உருளும் பரிசுத்தர்'' என்றும், ”நீங்கள் இப்படிப் பட்டவர், அப்படிப்பட்டவர்'' என்றெல்லாம் எதிராக கூறு கின்றனர். நீங்கள் புத்தி சுவாதீனத்தை இழந்துவிட்டீர்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆகவே, அதை ஜீரணிக்க கடினமா யுள்ளது. ஆனால் அவரது மகிமையைப் பற்றி நீங்கள் சாட்சி கூறும் பொழுது, அப்பொழுது அது உங்கள் உதடுகளில் மதுரமாய்க் காணப்படுகிறது. அவ்வளவுதான். பார்த்தீர்களா? ஒரு கூட்டத்தில் நீங்கள் எழும்பி நின்று, “தேவனுக்கு மகிமை, அல்லே...'' என்று நீங்கள் கூறும் பொழுது, ஓ, அந்த பெரிய சுற்றி வளைப்புக்குள்ளாக நீங்கள் கடந்து செல்லும் பொழுது, அது கடினமாயுள்ளது, ஆனால் அதை விட்டு நீங்கள் நீங்கியிருக்கும் பொழுது, நீங்கள் அதைப் பற்றிசாட்சி கூற முடியும். அப்பொழுது அது உங்கள் உதடுகளில் மதுரமாயுள்ளது. அது தான் இந்த மீட்பின் புத்தகம் ஆகும்.
52இப்பொழுது இந்த 5ம் வசனத்தின் பேரில் இன்னும் ஒரு விளக்கம் அளித்துவிட்டு, பிறகு 6ம் வசனத் திலிருந்து ஆரம்பிப்போமாக. மீட்பின் திட்டத்தில், தேவன் எவ்வாறு அதை முன்கூட்டியே காண்பித்துள்ளார் என்பதை நீங்கள் கவனிக்கும்படி நான் விரும்புகிறேன். ரூத், போவாஸ் ஆகி யோரிலே, அதை தேவன் பூரணமாக அமைத்துத் தந்திருக்கிறார். அதில் தான் நாம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று முடித்தோம். அங்கிருந்தே நாம் மீண்டும் இன்றைக்கு தொடங்க, அதாவது ரூத், போவாஸில் இருந்து தொடங்க நான் விரும்புகிறேன்.
53ரூத், போவாஸிலே நான்கு சந்திப்புக்களாகிய நான்கு நிலைகள் உள்ளன. முதலாவதாக ரூத் தீர்மானிக்கிறாள் (deciding). அதைப் பற்றிய செய்தியை நான் பிரசங்கிக்க எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை நாங்கள் பார்க்கட்டும். (உரைக்கப் பட்ட வார்த்தை புத்தகம் வால்யூம் 6, எண்.8-ஆசி). நீங்கள் அனைவருமே அதைக் கேட்டிருக்கிறீர்கள் என்று நான் கருதுகிறேன். அதை நான் ஒலிநாடாக்களில் பெற்றிருக்கிறேன். நகோமியோடு அந்த தேசத்தினுள் தான் போகப் போகிறோமோ, இல்லையோ என்பதைப் பற்றி, ரூத் முதலாவதாக தீர்மானிக்க வேண்டியிருந்தது. அவள் ஒரு தீர்மானம் பண்ண வேண்டி யிருந்தது. பிறகு அவள் அத்தேசத்தினுள் போய் சேர்ந்த பிறகு, அடுத்ததாக அவள் செய்ய வேண்டியது போவாஸ் வயலில் போய் பணிசெய்ய வேண்டியது (Serving) என்ற காரியமாகும். அங்கேதானே அவள், வெறுங் காலோடு, அறுக்கிறவர்களின் பிறகே தானியம் பொறுக்கி பணி புரிய வேண்டியிருந்தது. அதன்பிறகு, போவாஸ் கண்களில் அவளுக்கு கிருபை கிடைத்ததின் பின்னால் மோவாபியளான ரூத்தை மீட்டுக் கொள்வதற்காக, நகோமி இழந்த எல்லாவற்றையும் மீட்டுக் கொள்வதற்காக நெருங்கின இனத்தானின் மீட்பனின் வேலையை அவன் செய்யும் வரைக்கிலும் அவள் காத்துக் கொண் டிருக்க வேண்டியிருந்தது. (waiting) அதன்பிறகு, அடுத்த கட்டம், ரூத்துக்கு பலன் அளிக்கப்படுவது என்பதாகும் (rewarded).
இப்பொழுது கவனியுங்கள், ரூத் பூரணமாக தீர்மானிக் கிறாள்.
ஓ, யாராவது “வேதமானது தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதப்படவில்லை'' என்று கூறினால், அவர்களில் ஏதோ தவறு உள்ளது. அதின் ஒவ்வொரு வார்த்தையும் தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டதாகும். ஒரு பலகையில் இசைப்புக்கூர் எவ்வாறு கச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளதோ, அதைப் போல் வேத வாக்கியமானது ஒன்றோடொன்று சரியாக பொருந்துகிறது. ஒரு வினாடியின் 10 இலட்சத்தில் ஒரு பங்கு சரியாக இயங்கும்படி பெரிய சக்கரத்தில் பொருத்தப்பட்ட தடைக்கட்டை எவ்வாறு உள்ளதோ, அதைப் போல சரியாக ஒன்றோடொன்று இசைந்து போகிறது.
54இப்பொழுது ரூத் 'தீர்மானித்தல்' என்பதைக் கவனியுங்கள். அத்தேசத்தினுள் தான் போகப் போகிறோமோ இல்லையா என்பதைப் பற்றி அவள் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டியதாயிருந் தது. அதற்காக அவள் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டியதாய் இருந்தது. அவ்விதமாகத்தான் ஒவ்வொரு விசுவாசியும் செய்ய வேண்டியதாக இருக்கிறது. நீங்கள் உங்களுடைய பழைய ஆவிகளை விட்டு விலக வேண்டும்; உங்களுடைய பழைய ஜீவி யத்தை விட்டு விலக வேண்டும். உங்களுடைய உலகப் பிரகார மான பழைய காரியங்களை விட்டுவிட வேண்டும்.
55சகோதரன் ராய், சகோதரி ராபர்சன் உடல் நலமின்றி உள்ளார் களா? ஓ, அவர்கள் சுகவீனமுற்றார்களோ என்று கருதினேன். அப்படி அவர்கள் சுகவீனமுற்றிருந்தால், அவர்களை இங்கே கொண்டு வர வேண்டும் என்று கூற வேண்டுமென்றிருந்தேன்.
56அவர்கள் தங்களுடைய பழைய குற்றம் நிறைந்த ஜீவியத்தை விட்டுவிட, நீங்கள் இதற்கு முன் கண்டிராத, அறிந் திராத ஒரு தேசத்தினுள், ஒரு புதிய மக்களோடு சேர்ந்து பிர வேசித்திட வேண்டும். நீங்கள கிறிஸ்தவராக ஆனபொழுது, இதைத்தான் செய்தீர்களா? நீங்கள் இரவு விடுதிகளையும், சூதாட்ட விடுதிகளையும் விட்டு விலகினீர்கள். வலிப்பு வந்தவர்களைப் போல் தோன்றிய , தங்கள் தலைகளை குலுக்கி அசைத்து கத்தி, மேலும் கீழும் குதிக்கிற, உங்களுக்கு பைத்தியக்காரக் கட்டம் என்பது போல் தோன்றுகிற ஒரு கூட்டம் மக்களுக்குள் நீங்கள் வர வேண்டி யதாயிருந்தது. ஆகவே, நீங்கள் அதற்குள் போவதா வேண்டாமா என்பதைப் பற்றி ஒரு தீர்மானம் எடுக்க வேண்டியதாயிருந்தது. அதுதான் சரியானது. நீங்கள் அந்தத் தீர்மானத்தை எடுத்தபொழுது நீங்கள விட்டு விலகின உங்களுடைய சொந்த ஜனங்கள் உங்களை பரிகசிக்கப்போகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அப்படித் தானே? இதெல்லாம் தானாகவே அப்படியே நடக்கும். ஆகவே துவக்கத்திலேயே அதை நீங்கள் எதிர்பார்க்கத்தான் வேண்டும். ஏனெனில் அவ்விதமாகத்தான் அது இருக்கிறது.
57ரூத்துக்கும் அதேவிதமான காரியம்தான் உண்டாயிருந்தது. ஒரு கூட்டம் உணர்ச்சியார்வம் அளவுக்கதிகமாக உள்ளவர்கள் என்று கூறப்பட்ட இஸ்ரவேலரின் தேசத்தினுள், மோவாபிய தேசத்தை விட்டுப் புறப்பட்டு பிரவேசிக்க இருந்தபொழுது, மோவாபியர்கள் அவளிடம் என்ன கூறியிருப்பார்கள்? பாருங்கள், அவள் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டியவளாய் இருந்தாள். நீங்கள்கூட தீர்மானிக்க வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். இறுதியாக அவள் தீர்மானம் செய்தபொழுது, அவள் ஒரு புதிய தேசத்தினுள் பிரவேசித்தாள்.
இப்பொழுது, அது நீதிமானாகுதல் என்ற நிலையாகும். அது சரிதானே? இப்பொழுது இந்த சபையைக் கவனியுங்கள். ஓ, அது பரிபூரணமாயுள்ளது.
''ஆபிரகாமின் வித்து'' என்ற தலைப்பில் நான் பிரசங்கித் ததை எத்தனை பேர் கேட்டீர்கள்? நீதிமானாக்கப்படுதல், பரிசுத்த மாகுதல், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் ஆகியவை பற்றி பார்த்தோம். இப்பொழுது கூறப்படுவது சரியா இல்லையா என்பதைப் பாருங்கள்.
58ரூத் தனது தீர்மானத்தை செய்தது, புறஜாதி சபைக்கு முன்ன டையாளமாயுள்ளது. அவள் தீர்மானித்துவிட்டு, தேசத்தினுள் கடந்து சென்றாள். இப்பொழுது, அநேக சமயங்களில், மெதோ டிஸ்டுகளும் பாப்டிஸ்டுகளுமாகிய நாம், நாம் செய்ய வேண்டிய தெல்லாம் அம்மட்டோடு போதும் என்று எண்ணுகிறோம். அவள் இப்பொழுது தான் ஆரம்பித்திருக்கிறாள். அவள் இன்னும் சேர வேண்டிய இடம் எதற்கும் போய் சேர்ந்திடக்கூட இல்லை. அவள் இப்பொழுதுதான் அத்தேசத்தினுள் பிரவேசித்திருக்கிறாள்.
இப்பொழுது, அடுத்ததாக அவள் செய்ய வேண்டியதாக இருந்தது என்னவெனில், அவள் தன் தீர்மானத்தின் பேரில் கிரியை செய்ய வேண்டியது என்பதாகும். நீங்கள் செய்ததைப் போலவே, அவளும் “தன் இரட்சிப்பு நிறைவேறப் பயத்தோடும், நடுக்கத் தோடும் பிரயாசயப்பட வேண்டியது” இருந்தது. தன் மேல் ஆடை களைப் போட்டுக்கொண்டு, வயல்வெளியில் சென்று பணிவிடைக் காரிகளின் பின்னால் சென்று, அன்றன்று உள்ள ஜீவனத்திற்கு தேவையான உணவுக்கான தானியத்தைப் பொறுக்கினாள். அப் படித்தானே அவள் செய்தாள்? அவள் என்ன செய்து கொண்டிருந் தாள்? போவாஸின் கண்களில் தனக்கு தயவு கிடைக்க நற்கிரியைகள் மூலம் இரட்சிப்பை அடைதல் என்ற கட்டத்தை நிறை வேற்றினாள்.
59அதேவிதமாகத்தான் சபையும் செய்தது. லூத்தரன்கள் அதை விசுவாசத்தைக்கொண்டு விசுவாசித்து, தேசத்தினுள் பிரவேசித் தார்கள். ஆனால் மெதோடிஸ்டுகளோ பரிசுத்தமாகுதலைப் போதித் தார்கள்; அதுதானே நற்கிரியைகளின் மூலம் இரட்சிப்பை அடைதல் என்ற நிலையைப் பற்றியதாகும். ''நீங்கள் இன்னதைச் செய்ய வேண்டும். நான் அதை விட்டுவிட வேண்டும். நான் என் முடியை நீளமாக வளர்க்க வேண்டும்'' என்று ஸ்திரீகள் கூறி னார்கள். அதற்கு மேல் அவர்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் முடியை நீளமாக வளர்த்தல் போன்றவைகளை யெல்லாம் கடைப்பிடித்தார்கள். தங்கள் முகங்களில் வர்ணங் களைப் பூசுதலையெல்லாம் அவர்கள் விட்டுவிட வேண்டியதிருந் தது. மற்றவர்கள் செய்ததைப் போல, அவர்கள் குட்டைப் பாவா டைகளை அணியவில்லை. தங்கள் ஆடைகளை அவர்கள் தவறாக அணியவில்லை. அவர்கள் எதாவது நற்கிரியைகளைச் செய்ய வேண் டியதாயிருந்தது. பார்த்தீர்களா? அதைத்தான் குத்தும் செய்தாள். அவள் நீதிமானாகுதல், பரிசுத்தமாகுதல் என்ற கட்டங்களை அடைந்தாள்.
60இப்பொழுது, இறுதியாக அவளுக்கு போவாஸின் கண் களில் தயவு கிடைத்தபொழுது, என்ன நடந்தது? பிறகு, நகோமி அவளிடம் கூறுகிறாள் : “போவாஸ் இனத்தான் மீட்பனின் கிரியையை செய்யும் வரையிலும் இங்கேதானே நீ காத்திரு. ஏனெ னில் அவன் ஒருவன் தான் அதைச் செய்ய முடியும். அவனே நமது அடுத்த இனத்தான் மீட்பனாயிருக்கிறான். எனவே நீ இங்கே தானே காத்திரு. இனி முதற்கொண்டு நீ வயல்வெளிகளில் போக வேண்டாம். இன்னின்னதை செய்யாதே. இனத்தான் மீட்பனின் கிரியையானது நிறைவேறுகிற வரையிலும் நீ காத்திரு'' என்று கூறினான். அவளும் அதன்படியே இளைப்பாறிக் கொண்டிருந்தாள். ஆமென்.
சரியாக அதேவிதமாகத்தான் சபையும் பெந்தெகொஸ்தே என்ற இறுதிக் கட்டத்தில் வந்து சேர்ந்திருக்கிறது. பார்த்தீர்களா? பெந்தெகொஸ்தேயின் துவக்க கட்டத்தில் அவர்கள் கிரியை செய்ய வேண்டியதாயிருந்தது. அவர்கள் இன்னின்னதைச் செய்ய வேண்டுமென்றிருந்தது. அவர்கள் அசைத்தார்கள். மற்றும் எல்லா விதமானவற்றையும் செய்தார்கள். இப்பொழுது சபையானது, உண்மையான சபையானது என்ன செய்து கொண்டிருக்கிறது? அதுதானே இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. இளைப்பாறுதல் என்றால் என்ன? இதோ அதன் அர்த்தம் : இளைப்பாறுதல் என்பது, “பரிசுத்த ஆவி'யாகும். ஓய்வு நாள் அது. (ஏழாம் நாள் ஓய்வு சபைக்காரர்கள் ஏழாம் நாள் தான் இளைப்பாறுதல் என்று நமக்குக் கூற முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்). எபிரெயர் நிருபம் 4-ம் அதிகாரத்தில், ”ஏனெனில் அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்தது போல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப் பான்.'' என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இளைப்பாறுதல் என்பது பரிசுத்த ஆவியாகும்.
61ரூத் இளைப்பாறிக்கொண்டிருந்தபொழுது அது தானே, சபையானது தேவனுடைய வாக்குத்தத்தங்களின் பேரில் சார்ந்து இளைப்பாறிக்கொண்டிருக்கிற முன்னடையாளமாயிருக்கிறது. நாம் நமது இரட்சிப்பின் அச்சாரத்தை இப்பொழுது பெற்றவர்களா யிருக்கிறோம். நாம் அந்த அச்சாரத்தை பெற்றவர்களாயிருக் கிறோம். (ஆமென்). அதை நாம் பெற்றுக் கொண்டிருக்கிறோம். கிறிஸ்து நம்மை ஏற்றுக் கொண்டும் இருக்கிறார். அதைவிட்டு இப்பொழுது நாம் விலகிச்செல்ல வழியே இல்லை. நாம் அங்கே இருக்கிறோம். ஆமென். அவர் இனத்தான் மீட்பரின் வேலையை செய்கிற வரையிலும் நாம் காத்திருக்க வேண்டியது தான் நாம் செய்ய வேண்டியதெல்லாம். இப்பொழுதே நாம் அதன் அச்சாரத் தைப் பெற்றிருந்து, அவர் திரும்பி வருகிறதான வேளைக்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம்.
அதன் பிறகு ரூத்துக்கு நேரிட்ட அடுத்த காரியம் என்ன? ரூத்துக்கு பலன் அளிக்கப்பட்டது.
அதைத்தான் சபையும் செய்தது. லூத்தரின் கீழாக சபை நீதிமானாக்கப்படுதலில் பிரவேசித்தது. பிறகு, வெஸ்லியின் கீழாக பரிசுத்தமாகுதல் என்ற கட்டத்தை சபை எட்டியது. இக்கடைசி நாட்களில் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற கட்டத்திற்குள் சபை பிரவேசித்தது. இப்பொழுதோ, நமது சுதந்திரத்தின் அச்சாரத்தைப் பெற்றவர்களாய் இளைப்பாறிக்கொண்டிருக்கிறோம். அதன் மூலமாக நமக்கு ஒரு காரியம் சம்பவித்துள்ளது என்று அறிந்தவர்களாய், நாம்தானே மரணத்திலிருந்து ஜீவனுக்குள் கடந்து சென்று, இயற்கையோடு சேர்ந்து நாமும் அழியாத ஜீவனைப் பெறும் வேளைக்காக ஏங்கித் தவித்து காத்துக் கொண்டிருக் கிறவர்களாய் காணப்படுகிறோம். நமது சரீரங்கள் மீட்கப்பட்டு, அழியாமையின் பூரணத்தை நாம் பெறுவோம். யாவும் மீட்கப் பட்டு விட்டன. நாம் அந்த வாயிலிலிருந்து அவர் திரும்ப வருவதற் காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். ஆமென்.
62அதன்பிறகு என்ன? ரூத்துக்கு பலன் அளிக்கப்பட்டது. அதைப்போல நமக்கு பலன் அளிக்கப்படும். அந்தக் காரியத்தைத் தான் ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டுள்ள புத்தகம் நமக்கு திறந்து கொடுக்கப்போகிறது. இவைகளெல்லாம் என்ன வாயிருக்கிறது? அவைகள் திருவசனத்தில் எழுதப்பெறவில்லை. அவைகள் பரிசுத்த ஆவியால் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் நீங்கள் கவனித்தீர்களானால் உண்மையாகவே, அவை யாவுமே வேத வாக்கியங்கள் பூராவிலும் வெளிப்படுத்தப்பட் டுள்ளன. ஆனால் ஜனங்களுக்கு அவைகள் மறைக்கப்பட்டுள்ளன. சற்று நேரம் கழித்து அந்த சுருளைப் பற்றிப் பார்க்கையில், அது எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் காண்பீர்கள். அப்பொழுது அக்காரியங்கள் எவ்வாறு திறக்கப்படும் என்பதை யும் அறிந்து கொள்வீர்கள்.
63ஆம், இப்பொழுது இளைப்பாறிக்கொண்டிருத்தல். நீதி மானாக்கப்படுதல் என்ற நிலையின் கீழாக ரூத் இருந்தாள். அதை உங்களால் காண முடிகிறதா, அப்படியெனில் 'ஆமென்'' என்று கூறுங்கள். (சபையார் 'ஆமென்'' என்று கூறுகிறார்கள்-ஆசி). பரிசுத்தமாக்கப்படுதல் என்ற நிலையின் கீழாக ரூத் நற்கிரியை களைச் செய்து பாடுபடுகிறாள். ரூத் இளைப்பாறுகிறாள், கிரியையை செய்து முடித்துவிட்டு போவாஸ் திரும்ப வருவதற்காக அவள் காத்துக்கொண்டிருக்கிறாள்.
நமது போவாஸ் கல்வாரியிலே கிரியை செய்து முடித்து விட்டார். ஆனால் அவர் தமது பரம வாசஸ்தலத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் முன்னர், அவர் முதலாவதாக நமக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ண தம் பரம வீட்டுக்குப் போயிருக் கிறார்: (யோவான் 14ல்) மகிமை!
''உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லி யிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன்.“
யோவான் 14:1-2.
64போவாஸ் போய் என்ன செய்தான் என்பதைப் பாருங்கள். போவாஸ் ஒலிமுக வாசலில் போய் நின்று, அங்கே மூப்பர்களை அழைத்து, தன் பாதரட்சையைக் கழற்றி, “நான் இன்று நகோமி யையும், அவளது சுதந்திரம் அனைத்தையும் மீட்டுக் கொண்டேன் என்று அறியப்படட்டும்'' என்றான். அவற்றோடு மோவாபிய ஸ்திரீயையும்கூட மீட்டுக் கொண்டான்.
இயேசு வந்தபொழுது, யாரை மீட்பதற்காக அவர் வந்தார்? இஸ்ரவேலை. இஸ்ரவேலை எடுத்துக் கொள்வதற்காக வந்த அவர் என்ன செய்தார்? அவரோ புறஜாதி மணவாட்டியை எடுத்துக் கொண்டார். அவ்வாறுதான் அவர் செய்தார். இஸ்ரவேலை அவர் எடுத்துக் கொண்ட பொழுது அவர் அப்படிச் செய்தார். அவர் தமக்குச் சொந்தமான ஜனத்தண்டை சென்றார். அவர் அவ்வாறு தான் செய்ய வேண்டியிருந்தது. அவர் செய்ய வேண்டியதாயிருந்த முதலாவதாக கரியம் தான் என்ன? தமக்குச் சொந்தமானதை மீட்டுக் கொள்ள வேண்டும். இஸ்ரவேல் சபையாகிய அந்த ஸ்திரீக்கு புறஜாதி சபை ஒரு சகோதரியாக இருந்தாள். நிச்சயமாக. இவளைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் இஸ்ரவேலை மீட்டுக் கொள்ள வேண்டியதாயிருந்தது. ரூத்தை தன் மணவாட்டியாக அவன் பெற்றுக் கொள்வதற்காக, அவன் நகோமியை மீட்டுக் கொள்ள வேண்டியதாயிருந்தது.
65இப்பொழுது அவன் என்ன செய்தான்? அவளை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக... ஓ மகிமை! வ்யூ! அவன் என்ன செய்தான்? தன் பண்ணைக்கு அவன் சென்று எல்லாவற்றிற்கும் வர்ணம் பூசியிருப்பான், மற்றும் புதிய தரை விரிப்புகளை அவன் போட்டிருப்பான் என்று நினைக்கிறேன். அவன் ஒரு புதிய வீட்டையும் கூட கட்டியிருக்கக்கூடும் என்று நான் அனுமானிக்கிறேன். நமது விஷயத்தில் அது ஒரு புதிய வீடாக இருக்கிறது. அவன் எல்லாவற்றையும் ஆயத்தம் செய்து, அவன் திருமணத்திற் கான மலர்ச்செண்டுடன் திரும்பி வந்தான். ஆமென்!
ரூத் என்ன செய்து கொண்டிருந்தாள்? வேறு எதுவும் செய்ய வில்லை, அவள் இளைப்பாறிக் கொண்டிருந்தாள்! காத்துக் கொண்டி ருந்தாள்! இனி அவளுக்கு பாடுபடுதல் இல்லை. இனி அவளுக்கு கலக்கமில்லை.
நான் மெதோடிஸ்டாக ஆக வேண்டுமோ? பாப்டிஸ்ட் சபையில் நான் சேர்ந்து கொள்ள வேண்டுமோ? ப்ரெஸ்பிடேரிய னாக நான் ஆக வேண்டுமோ? இல்லை, ஐயா, பரிசுத்த ஆவியைப் பெற்று இளைப்பாறுக. நாம் ஆயிர வருட அரசாட்சியின் நாளுக்காக
காத்திருக்கிறோம். அப்போது துதிக்கப்படும் நமது கர்த்தர் வந்து, காத்து நிற்கும் தம் மணவாட்டியை எடுத்துச் செல்வார். ஓ, பூமியானது இனிமையான விடுதலையின் நாளுக்காக
ஏங்கித் தவித்துக் கதறுகிறது. (அவை யாவும்; இயற்கையானது ஏங்கித் தவிக்கிறது. அத்தி இலைகள் உட்பட யாவும் ஆசீர்வதிக்கப்பட்ட விடுதலையை அளிக்கும் அந்நாளுக்காக ஏங்கித்தவித்து, காத்துக் கொண்டிருக் கிறது)
அப்போது நமது இனத்தான் மீட்பர் திரும்பி வந்து தமது மணவாட்டியை எடுத்துக் கொள்வார்.
66இப்பொழுது அவள் இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள், பரிசுத்தமாகுதல் என்பதின் கீழா? இல்லை. நீதிமானாகுதல் என்பதின் கீழாகவா? இல்லை. ஆனால் நீதிமானாகுதல், பரிசுத்த மாகுதல் என்னும் இவ்விரண்டிற்கும் கீழாகவும், அதோடு இளைப்பாறுதலுக்குள்ளும் இருந்து கொண்டிருக்கிறாள்.
இப்பொழுது ஏசாயா 28-ம் அதிகாரம் 18-ம் வசனம் கூறுகிறது :
“...கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாண மும்.... இங்கே கொஞ்சமும், அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள். நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே... இளைப்பாறுதல்.
(ஏசாயா 28:10,12).
இதுவே ஓய்வு ஆகும். இதனுள் தான் சபையானது காத்திருக் கும்படியாக போகிறது.
பாருங்கள், நாம் எவ்வாறு நீதிமானாகுதல், பரிசுத்தமாகுதல் என்பதற்குள்ளாக பிரவேசித்து வந்து, இப்பொழுது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்குள் வந்து, இளைப்பாறிக் கொண்டிருக் கிறோம். காத்திருக்கிறோம் என்று. அது இப்பொழுது என்னவா யிருக்கிறது? இப்பொழுது நாம் இந்த வெளிப்படுத்துதல்களுக்குள் வரும் போது தான் அவைகள் போதிக்கப்பட முடியாதபடி இருந்தன. அவைகள் மனுபுத்திரருக்கு வெளிப்படுத்தப்படாமல் இருந்தது. வேதம் அவ்வாறு கூறுகிறது. இந்த நாள் வருகிற வரை யிலும், அதற்கு முன்னால் மனுபுத்திரருக்கு அவைகள் திறந்து கொடுக்கப்படமாட்டாது என்று வேதம் கூறுவதை நான் உங் களுக்கு இங்கே வேத வாக்கியங்களிலிருந்து காண்பிக்க முடியும். அம்மகத்தான ஆசீர்வதிக்கப்பட்ட காரியங்களோடு நாம் முடிவுக்கு வந்துள்ளோம்.
676-ம் வசனம்... அல்ல து 5-ம் வசனத்தின் பகுதி. 5-ம் வசனத்தில் மூப்பன் “இதோ ஆட்டுக்குட்டி” என்று கூறினான். ஆனால் அவன் சுற்றுமுற்றும் பார்த்தபொழுது, ஒரு சிங்கத்தை அவன் கண்டான். அது ஆட்டுக்குட்டி என்பதற்குப் பதிலாக ஒரு சிங்கமாக இருந்தது. ஆனால் அப்பொழுது என்னவாயிருந்தது? அவரது மத்தியஸ்த வேலையானது செய்யப்பட்டது. சபைக் காலத்தின் முடிவில் அவர் தமது மத்தியஸ்தரின் ஊழியத்தை விட்டு வெளியேறி, யூதா கோத்திரத்துச் சிங்கமாக ஆகப் போகிறார். அவரது மத்தியஸ்த ஊழியமானது முடிவடைந்துவிட்டது. அவர் நியாயாதிபதியாகிய சிங்கமாக ஆகப் போகிறார். அவரது மத்தியஸ்த ஊழியமானது முடிவடைந்துவிட்டது. அவர் நியாயாதிபதியாகிய சிங்கமாக ஆகப் போகிறார். கரத்திலிருந்து அப்புத்தகத்தை அவர் எடுத்துக் கொண்டு விடும் பொழுது அவ்வாறு ஆகிறார்.
இப்பொழுது இதை நீங்கள் மறந்து விட வேண்டாம், நினைவில் கொள்ளுங்கள். ஒரு மனிதன் மீட்பதற்காக போகும் பொழுது, அவன் மனிதர்களை நகரத்தின் ஒலிமுக வாசலுக்கு அழைத்துச் செல்கிறான், அவர்கள் மூப்பர்களாயிருத்தல் வேண்டும், அங்கே தானே அவன், தான் அங்கே போய் நிற்பதன் நோக்கத்தைப் பற்றி அறிவிக்கிறான். அவன் ஒலிமுகவாசலுக்குச் சென்றபொழுது அதைத்தான் அவன் செய்தான். அங்கே சென்ற பொழுது அவன் கூறினான். “நான் இங்கே ஒரு இனத்தான் மீட்பன் என்ற ரீதியில் இச்சுதந்திரத்தை உரிமை கோர வந்துள்ளேன். இதைப் பற்றி நகரத்தின் மூப்பர்களுக்கு முன்பாக தெரியப் படுத்தவே நான் இங்கே இருக்கிறேன்” என்றான். பாருங்கள்?
68யோவான் அழுதபொழுது... இப்பொழுது கடந்த வாரத்தில் நான் ஒருவர் கூறினதைக் கூறினேன். “ஒருவரும் பாத்திரவானாய் காணப்படவில்லை என்பதற்காக அவன் அழுதான்'' என்று அவர்கள் கூறினார்கள். அது அவ்வாறு இல்லை. பரிசுத்த ஆவியின் அசைவின் கீழாக உள்ள ஒரு மனிதன் அதற்காக அழமாட்டான். அவன் பாத்திரவானாய் இல்லை என்பதற்காக அவன் அழுதான் என்பதாக அவர்கள் எண்ணுகின்றனர். ஒருவேளை யோவான் பாத்திர வானாக இல்லை. அங்கே ஒருவரும் பாத்திரவான் அல்ல. ஆனால் அவன் அழுததன் காரணம் அதுவல்ல.
அவன் சந்தோஷத்தினால்தான் அழுதான் என்பதாக நான் நம்புகிறேன். ஏனெனில் இந்தப் புத்தகத்தில் மீட்பினுடைய முழுத்திட்டமும் எழுதப்பட்டிருந்தது என்பதை அவன் கண்டான். அங்கே ஒருவரும் பாத்திரவானாய் காணப்படவில்லை என்பதற்காக அவன் அழவில்லை. ஏனெனில் ஆட்டுக்குட்டியானவர் பாத்திரராய் அங்கே நின்றிருந்தார். எனவே அவன் அழுது, “ஓ தேவனுக்கு மகிமை'' என்று கூறினான். அவன் ஆரவாரிக்கிறதை நீங்களே நேரடியாக கேளுங்கள். இப்பொழுது சிங்காசனத்தில் வீற்றிருக்கிற வருடைய வலது கரத்திலிருந்து ஆட்டுக்குட்டியானவர் அப்புத்தகத்தை எடுத்தார் என்பதினால் அவன் மகிழ்ச்சி யுள்ளவனாய் இருந்தபடியினால், அவன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான் என்பதாக நாம் பார்க்கிறோம்.
69பலமுள்ள தூதன் பாத்திரவான் யார்?'' என்று சத்தமிட்டு கூறிய பொழுது அவன் தானே ஒரு இனத்தான் மீட்பர் வருவதை விளம்பரப்படுத்தினான். அவன் அவ்வாறு அறிவித்த பிறகு உடனே 'இப்புத்தகத்தை எடுக்க பாத்திரவான் யார்?'' என்று அவன் கூறினான். அப்பொழுது யோவான் அழுதான். அப்பொழுது என்ன நடந்தது? அங்கே புத்தகம் இருந்ததை அவன் கண்டான். அது அங்கே இருந்தது. ஆனால் யார் அதை எடுக்க பாத்திரவான்?
நல்லது. அங்கே காபிரியேல் நின்றான். நிச்சயமாக அவன் தகுதியுள்ளவன்தான். ஆனால் பாருங்கள், அவன் ஒரு மனிதன் அல்ல. ஒரு தூதன் அவன். அங்கே மிகாவேலும் நின்றிருந்தான். அவனுங்கூட தகுதியுள்ளவன்தான். ஆனால் அவன் ஒரு மனிதன் அல்ல. அவனோ ஒரு தூதன். எனவே, நம்மைப் போல் பூமிக்குரிய மனிதன்தான் அதற்குத் தேவையாயிருந்தது? அதன்பிறகு, அவன் அங்கே உலகத் தோற்றத்திற்கு முன்னர் அடிக்கப்பட்டிருக்கிற ஆட்டுக்குட்டியானவர் வருவதைப் பார்த்தான். அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னரே அடிக்கப்பட்டவராயிருந்தார். அப் பொழுது யோவான் அழுதான். ஆமென். ஏனெனில் அது அங்கே இருந்தது, அவன் முழுக் காரியத்தையும் பார்த்தான், கவனித் தீர்களா?
70அவன் அங்கே ''யார் பாத்திரவான்'' என்று சப்தமிட்டு அறிவித்தபொழுது, இனத்தான் மீட்பர் வருவதைப் பற்றி பிரகடனம் செய்தான். இதோ அவர் இங்கே ஒரு ஆட்டுக்குட்டி யானவராக நின்றார். அவர் என்ன செய்தார்? சிங்காசனத் தண்டைக்கு நடந்து சென்றார். அங்கு தானே தேவ ஆவியானவர் வீற்றிருந்தார்; சிங்காசனத்தில் வீற்றிருந்த வருடைய வலது கரத்திலிருந்த புத்தகத்தை எடுத்தார். அப்பொழுது மூப்பர்கள் யாவரும் வணக்கமாய் விழுந்து, “நீர் அடிக்கப்பட்டபடியினால் பாத்திரராயிருக்கிறீர்'' என்று கூறினார்கள். அப்பொழுது அவர் மீட்பராக ஆகிவிட்டார். சபைக் காலங்களில் உள்ள பரிந்து பேசுகிற புத்தகத்தின் வேளையானது முடிவடைந்து விட்டது. அப்புத்தகத்தை, அவர் மீட்பின் புத்தகத்தை கையில் எடுத்தது முதல்.
அவர் அதை எவ்வாறு செய்தார் என்பதைப் பற்றிய வெளிப் படுத்துதலானது அந்த ஏழு முத்திரைகளில் காணப்படப் போகிறது. சபைக்காலங்களைப் பற்றி விவரிக்கிற வெளிப்படுத்தினவிசேஷப் புத்தகத்தின் முதல் மூன்று அதிகாரங்களில் பரிந்து பேசுகிற ஊழியத்தின் வேலையானது செய்து நிறைவேற்றப் பட்டதுமே, அக்கிரியையானது முடிவடைந்து விடுகிறது. ஆனால் இப்பொழுது மீட்பானது வெளிப்படுத்தப்பட வேண்டும். அது என்ன? இப்பொழுது, இப்புத்தகத்தை கையில் எடுத்தபொழுது.... இப்பொழுது உங்களுடைய ஆழ்ந்த சிந்தனையைத் தரித்தவர் களாயிருங்கள். ஏனெனில், இந்த ஏழு இராத்திரிகள் நமக்கு கிடைக்குமென்றால், நீங்கள் அதை இப்பொழுதே பெற்றுக் கொள்ளப்போகிறீர்கள்.
நீங்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லையெனில், உங்களு டைய கரத்தை உயர்த்தி, “நான் புரிந்து கொள்ளவில்லை'' என்று கூறுங்கள். ஏனிெனல், நீங்கள் நிச்சயமுடையவர்களாய் இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
71இப்பொழுது “மீட்பு” என்பதைப் பற்றி கவனியுங்கள். சபைக்கு அவர் செய்யும் பரிந்து பேசுதலை“ அவர் செய்து நிறை வேற்றி முடித்த பிறகு, அவர் தன்னை இனத்தான் மீட்பராக வெளிப் படுத்துகிறார். அதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? அவர் அதை எவ்வாறு செய்தார் என்பதைப்பற்றி சபைக்கு வெளிப்படுத்தப் போகிறார். அதன்பிறகு, இந்த வெளிப்படுத் தலானது ஏற்கனவே ஆரம்பித்துவிடது என்றால், அப்பொழுது, நாம் தானே சாலையின் முடிவில் இருக்கிறோம் என்பதை அது நிரூபிக்கிறது. ஆமென்! இது சரியாக இருக்கிறதா இல்லையா என்பதை, வேத வாக்கியங்களை நாம் ஆராய்கையில் கண்டு கொள்ளுங்கள்.
என்ன வெளிப்படுத்தப்பட்டு வருகிறது என்பதை நாம் காண்கிறோம். மீட்பைப் பற்றிய வெளிப்படுத்துதல்தான் என்ன? எவ்வாறு நாம் மீட்கப்பட்டோம்? கடந்த சில ஆண்டுகளாக என்ன நடந்தது என்பதை இங்கே சற்று கவனியுங்கள். இயேசுவின் நாமத்தைப் பற்றிய வெளிப்படுத்துதல்; தண்ணீர் ஞானஸ்நானம், நித்தியமான நரகம் என்று ஒன்றும் இல்லை என்பதைப் பற்றிய வெளிப்படுத்துதல், அது இதற்கு முன்னதாக அறியப்படவே இல்லை. உங்களுக்கு பிரியமானவர்கள் நித்திய காலமாய் நரகத்தில் இருப்பார்கள் என்று எண்ணப்பட்டது. பாருங்கள்?
நீங்கள் இரட்சிக்கப்பட்டால் ஒழிய , நீங்கள் நித்திய ஜீவனை உடையவர்களாய் இருக்கவே முடியாது. நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறீர்கள் என்றால், அப்பொழுது, நீங்கள் நித்திய காலமாக நரகத்தில் சுட்டெரிக்கப்பட முடியாது. இவ்வுலக வாழ்க்கையோடு, உங்கள் பாவங்களுக்காக நீங்கள் தண்டிக்கப் படுவீர்கள். ஆனால் நரகத்தில் நீங்கள் நித்திய ஜீவனை உடைய வர்களாய் இருக்கமுடியாது. நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக் கிறீர்கள் என்றால், சதாகாலமும் நீங்கள் அக்கினியால் சுட்டெரிக் கப்படவே முடியாது, ஏனெனில் ஒரே ஒரு வகையான நித்திய ஜீவன்தான் உண்டு. சபையானது அதைப் புரிந்து கொண்டிருக் கிறது என்று நிச்சயமுடையவனாக நான் இருக்கிறேன்.
72அது என்ன? மற்ற விஷயங்கள் என்ன? மீட்பின் திட்டம். பரிசுத்த ஆவியினால் சமீபத்தில் நமக்குக் கொடுக்கப்பட்ட காரியம் தான் என்ன என்பதைப் பாருங்கள். ஆபிரகாமின் வித்து என்பது - அதைப் பற்றி வெளிப்படுத்துதல் என்ன அர்த்தத்தைக் கூறுகிறது?
சர்ப்பத்தின் வித்து. இந்த வெளிப்படுத்தின விசேஷப் புத்த கத்தை பாருங்கள். நாம் அதை பார்க்கையில், அது எவ்வாறு திறந்து கொடுக்கப்படுகிறது என்பதைக் கவனியுங்கள். அது மிகவும் சரி யான முறையில் சத்தியமாயிருக்கிறது என்பதை நான் தானே உங்க ளுக்கு வேத வாக்கியங்களைக் கொண்டு நிரூபித்துக் காண்பித் தேன். நான் ஆதியாகமத்திற்கு மிகவும் பின்னோக்கிப் போய், அந்த முத்திரையானது திறக்கப்பட்ட பொழுது, அது வேதாக மத்தில் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல் வரையிலும் எவ் வாறு எங்கும் காணப்படுகிறது எனபதை எடுத்துக் காண்பிப்பேன்.
ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை யிலும், ஒருவரும் “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின்'' நாமத் தினால் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை. அது பொய்யான ஞானஸ்நானமாயிருக்கிறது. அன்றொரு நாளிலே நான் சிக்காகோ மாபெரும் ஊழியக்காரர்கள் சங்கத்தைச் சேர்ந்த முன்னூறும் சொச்சம் பிரசங்கிமார்களுக்கு முன்பாக நின்று, அதைக் குறித்து நிரூபித்தேன். அதைக் கேட்ட அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி ஆரவாரித்தனர். அவர்களில் எழுபது பேர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் எடுக்க வருகிறார்கள்.
73சர்ப்பத்தின் வித்து ஆதியாகமத்திலிருந்து இருக்கிறது. சர்ப்ப மானது தனக்கு வித்தை உடையதாக இருக்கவில்லையெனில், அப்பொழுது கிறிஸ்துவும் பிறக்கவில்லை. ஏனெனில் அவர் சர்ப்பத்தை நோக்கி, “உன் வித்துக்கும் ஸ்திரீயின் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்'' என்று கூறினார். சர்ப்பத்தின் வித்தைப் பற்றிய விஷயம் கட்டுக்கதையாக இருக்குமெனில், அப்பொழுது, கிறிஸ்துவும் ஒரு புராணமாக கட்டுக் கதையாக ஆகிவிடும்; அதைப் போலவே சபையைக் குறித்த காரியமும் ஒரு கட்டுக்கதையாக இருக்கும். அவை யாவும் அவ்வாறே இருக்கிறது. நீங்கள் அதைப் பிரிக்கவே முடியாது. சர்ப்பதிற்கும் ஒரு வித்து உண்டாயிருந்தது; அந்த விஷயம் தான் அவர்களை உண்மை யிலேயே தடுமாற வைக்கிறது. அதை அவர்களால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? ஏனெனில் அவர்களுக்கு அதைப் பற்றிய வெளிப்பாடு இருக்கவில்லை.
அவர்கள் ஏன் என்னிடம் இதைப் பற்றி விவாதிக்க வரக் கூடாது? பிரசங்கபீடமானது எப்பொழுதும் திறந்தேயிருக்கிறது, யாரையும் சந்திக்க நான் ஆயத்தமாயுள்ளேன். அவர்களோடு நான் தர்க்கிக்க மாட்டேன். ஆனால் நான் நிச்சயமாக அவர்களோடு அதைப் பற்றி விவாதிப்பேன். ஆனால் அந்த அசோசியேஷன் முன்பாக அவர்கள் கேட்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். உங்களில் சிலர், எங்கே அது தவறாயிருக்கிறது என்பதை என்னிடம் சொல்லுங்களேன். ஒரு மூலையில் நின்று கொண்டு, என்னைப் பற்றி, அவ்வுபதேசத்தைப் பற்றி, பேச வேண்டாம். என் முன்பாக நேருக்கு நேர் வந்து கேட்கட்டும். நாம் உண்மையாக அதைப் பற்றி பேசுவோம். நாம் இங்கே வந்து, யார் தவறு, யார் சரியாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றிக் காண்போமாக. ஆனால் அவர்களோ அதை சமாளிக்க மாட்டார்கள். வெளிப்படையாக கூறுவோமானால், என்ன நேரிடுமென்று அவர்களுக்கு தெரியும். பாருங்கள்?
74ஏனெனில், அது நான் அல்ல, ஆனால் அது பரிசுத்த ஆவியா யிருக்கிறது. நீங்கள் காண்கிற அதே கர்த்தருடைய தூதன், இந்த காரியங்களெல்லாம் இந்நாட்களில் நடைபெறுகிறபொழுது, இந்நாட்களைப்பற்றி என்ன, கர்த்தருடைய தூதன் இங்கே நின்று கொண்டிருக்கிறார். எனக்கு இவைகளைப் பற்றி தெரியாது. ஆனால் இதுவே அந்த வேளையாயிருக்கிறது, அது இங்கே இருக்கிறது. கர்த்தருக்குச் சித்தமானால், நாம் இந்த ஏழு ஆவிகள், பிறகு ஏழு கொம்புகள் இவைகளைப் பற்றி பார்க்கையில், அது எங்கே இருந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி நீங்கள் காண்பீர்கள். இந்த வெளிப்படுத்துதல்கள் வரவேண்டியதாய் இருக்கிற வேளையாக இது இருக்கிறது. இப்புஸ்தகம் வெளிப்படுத்துதல்களின் புத்தக மாக இருக்கிறது. அது இயேசு கிறிஸ்துவைப் பற்றி வெளிப் படுத்துகிறதாயிருக்கிறது. அவர், தாம் யார் என்பதைப் பற்றி, முதல் அதிகாரத்திலேயே வெளிப்படுத்துகிறார் என்பதை நாம் கண்டோம். இப்பொழுது அவர் ஏழு முத்திரைகளில் இருக்கிறார், அவர், தாம் பூமியை எவ்வாறு மீட்டுக் கொண்டார் என்பதை அதன் மூலம் வெளிப்படுத்துகிறார்.
வெளிப்படுத்துதல்களில் ஒன்று இயேசு கிறிஸ்துவின் நாமத் தைப் பற்றியது. மற்ற விஷயம் என்னவெனில், மக்களிலிருந்து நித்தியம், நித்திய மீட்பு, விசுவாசத்தினால் நீதிமானாகுதல், பரிசுத்த மாகுதல், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் ஆகியவைகளைப் பற்றி மக்கள் கொண்டிருந்த பயத்தை நீக்கியதாகும். மேலும் என்ன? நாம் நித்தியமாக பாதுகாக்கப்பட்டுள்ளோம் என்பதைப்பற்றி, மக்களிடத்திலிருந்து எல்லா சந்தேகத்தை அகற்றியதாகும். உங்களுடைய இரட்சிப்பிற்குரிய அச்சாரத்தை நீங்கள் பெற்றிருந் தால், உங்களுடைய மீட்பின் நாள் வரையிலுமாக இருக்கும்படி தேவன் உங்களை முத்திரையிட்டிருக்கிறார். எபேசியர் 4:30 இவ்வாறு கூறுகிறது:
'... நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப் படுத்தாதிருங்கள்.“
எபே. 4:30
75அவ்வாறிருக்க நீங்கள் பின்மாற்றம் அடைவது எங்ஙனம்? நீங்கள் ஒருவேளை பின்மாற்றம் அடையலாம். ஆனால் நீங்கள் இழக்கப்பட்டுப் போவது இயலாது. நீங்கள் அவ்விதமான நிலையில் நிலைத்திருப்பீர்களாயின், நீங்கள் ஆரம்பத்திலேயே அதைப் பெறவில்லை என்பதைத்தான் அது காண்பிக்கிறது. ஆனால் நீங்கள் ஒரு தேவபிள்ளையாக இருப்பீர்களாயின், 'ஆராதனை செய்கிறவர் ஒருதரம் சுத்தமாக்கப்பட்ட பின்பு, இன்னும் பாவங்கள் உண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால்'' என்று எபிரெயர் கூறுகிறது. அது உண்மையாயிருக்கிறது. நீங்கள் வழிவிலகிப் போய், லௌகீகமாக ஜீவிப்பீர்களானால், நீங்கள் ஒரு கிறிஸ்தவரா யிருக்க முடியாது, நீங்கள் பரிசுத்த ஆவியையும் பெற்றிருக்க முடியாது. உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் நீங்கள் அன்பு கூர்ந்தால் தேவனுடைய அன்பு உங்களில் இல்லை. அப்படியிருந்தால், நீங்கள் எங்கிருந்தோ வரும் ஒரு பொய்யான சத்தத்திற்கு செவிகொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். பிசாசு உங்களை செருக்கடையச் செய்து விட்டான். ஆனால் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை தேவனுடைய வார்த்தையைக் கொண்டு ஆராய்ந்தால், அப்பொழுது அது வேதாகமத்தின் படியே சரியாக ஜீவிக்கிறீர்கள் என்று காண்பித்தால், நீங்கள் நித்திய பாதுகாப்பைப் பெற்றிருக்கிறீர்கள்.
நீங்கள் எதைக் குறித்தும் பயப்படத் தேவையில்லை. தேவன் எதை வாக்குரைத்தாரோ அதை நிறைவேற்றுவார். அதைப் பற்றி நான் எந்த ஒரு நபருக்கும் சவால் விடுகிறேன். நீங்கள் வார்த் தையை நம்பி எடுத்துக் கொண்டு அதனோடு நடவுங்கள். அப் பொழுது உங்களுக்கு என்ன சம்பவிக்கிறது என்பதை கவனியுங் கள். சகோதரனே அது ஒவ்வொன்றும் அப்படியே நிறைவேறும். தேவன் அவ்வாறு கூறியுள்ளார். தேவன் வாக்குரைத்த ஒவ் வொன்றும் நிச்சயமாக நிறைவேறும்.
76எனது ஊழியம் ஆரம்பித்த நாள் முதல், கடந்த பதினைந்து ஆண்டுகளாக உலகம் முழுவதிலும் சுற்றி சுற்றி பார்த்ததில், ஒரு தடவை கூட அது தவறியதில்லை என்று நான் உங்களுக்கு ஏற்கனவே கூறியிருக்கிறேன். ஏன்? ஏனெனில், அடிப்படை யாகவே, நான் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் பேரில்தான் நிற்கிறேன். அது சத்தியமாயிருக்கிறது என்று நான் அறிந்தே யுள்ளேன். இது ஏதோ எனது பெரிய ஞானத்தினால் உண்டானது என்று நான் கூற முயலும்படி செய்ய வேண்டாம். இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுதினவர்தான் வேத வாக்கியத்திலிருந்து இதை எனக்குக் காண்பித்தார். ஏனெனில், என்னால் முடியாது..... நான் பிரசங்கிக்க ஆரம்பித்தபொழுது, எனது சிநேகிதி தான் உட்கார்ந்து எனக்காக வேதத்தை வாசித்துக் காண்பிக்க வேண்டிய தாயிருந்தது. அதிகம் கல்வி இல்லாததினால், வேத வாக்கியத்தை என்னால் வாசிக்கக் கூட இயலாதிருந்தது. சகோதரி வில்சன் அவர் களே! ஹோப் தான் என்னருகில் உட்கார்ந்து எனக்காக வேதத்தை வாசித்துக் காண்பிப்பாள் என்பதை நீங்கள் நிச்சயமாக நினைவில் வைத்திருக்க வேண்டும். அப்பொழுது நான், ''அது என்ன கூறுகிறது என்பதை கேள், அது கூறுகிறபடியே செய். நான் உனக்குச் சொல்லத் தெரிந்ததெல்லாம் அவ்வளவுதான்'' என்று கூறு வதுண்டு. அவ்வளவுதான் எனக்குத் தெரிந்தது.
'தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்'' என்ற வசனத்தை அவள் கூறுவாள்.
“எத்தனை பேர் விசுவாசிக்கிறார்கள் அதை? அடுத்த வசனத்தை வாசி என் பிரியமே” என்று நான் கூறுவேன்.
'விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன் நித்திய ஜீவனை அடையும்படிக்கு தம்முடைய ஒரே பேறான குமாரனைத் தந் தருளினார்''
''எத்தனை பேர் விசுவாசிக்கிறார்கள் அதை? அது என்ன கூறுகிறது என்பதைக் கேட்டாயா?'' என்று நான் கூறுவேன். நானே அதை வாசிக்கத் தெரியாமல் இருந்தேன்.
77எனவே, பாருங்கள், எந்த ஒரு பள்ளிக் கூடத்திலிருந்தும் ஓடிப்போக எனக்கு வழியில்லை. ஆனால் நான் சென்ற அந்தப் பள்ளியை நான் நேசிக்கிறேன். அங்கு தனிமையிலே, எங்கோ ஒரு சிறு மலைக்குகையிலே, தேவனிடமாய் எனது கரங்கள் உயர்த் தப்பட்ட நிலையிலே, இரவும் பகலுமாக இருந்தபொழுது, பரிசுத்த ஆவியானவர் தனது இனிமையில் இறங்கி வந்து தம்மைத்தாமே எனக்கு வெளிப்படுத்தித் தந்து, “இது இவ்வாறு இருக்கிறது, அது இவ்வாறு இருக்கிறது'' என்று கூறினார். எந்த ஒரு மனிதனும் எந்தவிதமானதொரு சிருஷ்டியும் எந்த ஒரு சமயத்திலும், அதின் மேல் கையை வைக்கவே இயலாமல் இருந்திருக்கிறது. தேசத் திலே ஊடுருவிப் பாய்ந்து சென்று, மட்டு மீறிய உணர்ச்சி வசப்பட்ட மூட மத வைராக்கியத்தைப் பொருத்த அளவில், தேவன் அதைவிட்டு இதை அகற்றி, மிகவும் உயர்வாகவும் சுத்தமாகவும் இருக்கும்படி இதை வைத்து, உலகத்தைச் சுற்றி சுற்றி உலா வரும் படி செய்தார். அல்லேலூயா! நாம் கடைசி காலத்தில் இருக் கிறோம், சகோதரனே, நாம் இங்கே கடைசி காலத்தில் இருக்கிறோம். ''சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்'' சரியாக அதைத்தான் அவர் கூறினார்.
78இப்பொழுது இது தானே வெளிப்படுத்துதலின் புத்தகமா யிருக்கிறது. தேவன் தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொண் டிருக்கிறார். இப்பொழுது இந்த மகத்தான இரகசியங்களின் வாயிலாக ஞானஸ்நானத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின நாமத்தை அவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். நித்திய நரகம் என்று ஒன்றில்லை என்பதை வெளிப்படுத்திக் கொண் டிருக்கிறார். அவ்வாறு இருக்கவே முடியாது. அவ்வாறு ஒன்று இருப்பதாகக் கூறுவதான வேதவாக்கியம் எதுவும் வேதாகமத்தில் கிடையவே கிடையாது.
பாதாளம் என்று ஒன்றுண்டு; அக்கினிக் கடல் என்று ஒன்றும் உண்டு. அங்கே தான் துன்மார்க்கர் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் இறுதியாக அக்கினியால் பட்சிக்கப் படுகின்றனர். ஒரு வேளை ஆயிரம் மில்லியன் வருடங்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் இறுதியாக பட்சிக்கப்படுவார்கள். ஏன், உங்களுக்கு சாதாரண அறிவே அதைப் பற்றிக் காண்பிக்குமே. பார்த்தீர்களா? நீங்கள் எப்படி நித்தியத்தைப் பெற்றிருக்க முடியும்? நித்திய ஜீவனை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள், இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உங்களில் எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? நல்லது, நீங்கள் நித்தியமாக எரிந்து கொண்டிருப்பீர்களானால், அதைப் பற்றி நீங்கள் கண்டுகொள்ள உங்களுக்கு நித்திய ஜீவனைப் பெற்றிருக்க வேண்டாமா? எனவே பாருங்கள், அது அர்த்தமற்றதாக இருக்கிறது.
79''பாதுகாப்பு'' எவர்களை முன்னறிந்தாரோ, அவர்களை அழைத்துமிருக்கிறார். எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான் களாக்கியுமிருக்கிறார். எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். எபேசியர் 1ம் அதிகாரத்தில் “தேவன் உலகத் தோற்றத்திற்கு முன்னர் இயேசு கிறிஸ்து மூலமாக தமக்கு சுவிகார புத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்''.
“கடைசி நாட்களில் மார்க்க சத்துருவாயிருக்கிற எதிராளியான வன் மக்கள் மத்தியில் நுழைந்து, ஸ்தாபனங்களையும் இன்ன பிற வற்றையும், இன்று உள்ளது போல கொள்கைகளையும் உண்டா யிருக்கும் படி செய்து கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்ட வர்களையும் வஞ்சிக்கப் பார்த்து, உலகத்தோற்றத்திற்கு முன்னரே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் பெரெழுதப்படாத வர்களையெல்லாம் வஞ்சிப்பான்'' என்று யோவான் இங்கு நமக்கு வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில் எடுத்துரைக்கிறான்.
எப்பொழுது உங்களுடைய பெயர் ஆட்டுக்குட்டியான வரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டது? உலகத்தோற்றத்திற்கு முன்னரே, எப்பொழுது கிறிஸ்து பலியிடப்பட்டார்? 1900 ஆண்டுகளுக்கு முன்பாகவா? இல்லை, ஐயா. உலகத் தோற்றத்திற்கு முன்னரே, “உலகத் தோற்றத்திற்கு முன்னர் அடிக்கப்பட்டிருக்கிற ஆட்டுக்குட்டியானவர்.''
அது என்ன செய்கிறது என்பதைப் பாருங்கள்? இம்முத்திரை கள் திறக்கப்படும் பொழுது, மீட்பின் திட்டத்தை அவை வெளிப் படுத்துகின்றன. எவ்வாறு அவர் அதை செய்தார். என்பதைப் பற்றியும், இப்பொழுது யாவும் முடிவடைந்து விட்டது. முடி வடையும் கட்டத்தில் வந்துவிட்டது. எனவே நாம் முடிவு காலத் தில் இருக்கிறோம். எனவே தான் இக்காரியங்களெல்லாம் வெளிப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
80இப்பொழுது நமது இனத்தானிடம் மீட்புக்குரிய ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டுள்ள புத்தகமானது அதன் மூல சொந்தக்காரரால் ஒப்படைக்கப்படுகிறது. ஆதாமின் மூலமாக நாம் ஏதேன் தோட்டத்தில் அதை இழந்தபொழுது, அது திரும்பவும் அதன் மூல சொந்தக்காரரரிடமே திரும்பிச் சென்றது. ஆனால், பிறர் நிலத்தின் உரிமையில் அத்துமீறி வரம்பு மீறி பிரவேசிக்கிறவனான, உரிமையின்றி பிறர் நிலத்தில், ஆக்கிரமித்து பிரவேசித்து கையகப்படுத்திக்கொள்கிறவனான, சாத்தான் அங்கே இருந்தான். அவன் வந்தான். அவன் தானே உரிமையின்றி அடுத்தவர் உரிமையில் தலையிடுகிறவன். இப்பூமி அவனுக்கு சொந்தமாயிருக்கவில்லை. தேவனுக்கு சொந்தமாயிருக்கிறது. ஆனால் அவனோ அத்துமீறி அடுத்தவர் நிலத்தின் உரிமையில் பிரவேசிக்கிறவன், அத்துமீறி அடுத்தவர் நிலத்தை எடுத்துக் கொள்கிறவன். மனிதனே, அவனைப் பற்றி இப்பொழுதே நான் ஒரு காரியத்தை கூற முடியும். ஆனால் நான் அவ்வாறு சொல்லா திருப்பேனாக. இந்த ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்ட புத்தகம் தான் நமது மீட்புக்குரிய உரிமைச் சாசனமா? அதுவே நமது உரிமைச் சாசனமாயிருக்கிறது. முத்திரைகளைப் பற்றி நாம் பார்க்கும் வரையிலும் பொறுத்திருங்கள்
அவர் முத்திரைகளை உடைத்து, வெளிப்படுத்தி, தமது சுதந் திரத்தை அவருடைய ஜனங்களாகிய நமக்கு அளிக்கிறார். அவர் இனத்தான் மீட்பராக ஆனதின் மூலமாக தாம் சுதந்தரித்துக் கொண்ட அச்சுதந்திரத்தை நமக்கு இலவசமாக தருகிறார். அவை யாவும் அவருக்கு சொந்தமாயிருந்தது. அவரே அதை மீட்டார். ஆனால் அதை தாமே வைத்துக் கொள்வதற்குப் பதிலாக அதை திரும்ப தமது மக்களுக்கே அளித்துவிடுகிறார். அதுதான் நம்மேல் அவர் வைத்திருக்கிற அன்பாகும். ஓ!
சாத்தான் அச்சுதந்திரத்தை இப்பொழுது தன் கையில் வைத்திருக்கிறான், அவன் அதன் மேல் எவ்வித உரிமையுமின்றி, அத்துமீறி கையகப்படுதிக்கொண்டுள்ளான். அவன் முடிவா... அவன் அதை உடனடியாக விட்டுவிட விரும்பவில்லை. அதைப் பற்றி வேதவாக்கியங்களில் இன்னும் கொஞ்சம் நேரத்தில் நாம் பார்ப்போம். நான் இன்னொரு அதிகாரத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அவன் அதை திரும்பக் கொடுத்துவிட விரும்பவேயில்லை, அதற்காக அவன் சண்டையிட வேண்டியதாய் இருக்கிறது. ஆனால் இறுதியாக, பலப்பரீட்சைக்கு கொண்டு வரப் படுகையில் அவன் அக்கினிக் கடலில் தள்ளப்படுகிறான்.
81இயேசு- சுவிசேஷங்களில் இயேசு என்ற நாமம், நான்கு பட்டங்களோடு குமாரனாக காணப்படுகிறது. அதை நீங்கள் அறிவீர்களா? இயேசுவுக்கு நான்கு பட்டங்களைக் கொண்ட குமாரன் சுவிசேஷங்களில் உண்டாயிருக்கின்றன. அவைகளில் ஒன்று, தாவீதின் குமாரன்,'' இன்னொன்று, 'ஆபிரகாமின் குமாரன்,'' - இன்னொன்று, ''மனுஷகுமாரன்'' நான்காவதாக ''தேவகுமாரன்'' என்பவைகளாகும்.
இப்பொழுது கவனியுங்கள். நமது இனத்தான் மீட்பர் இயேசு கிறிஸ்துவாகும் பொழுது, அவர் தாவீதின் குமாரனாக ஆகிறார் - அந்நிலையில் அவர் சிங்காசனத்தின் வாரிசாக ஆகிறார். - மகிமை! தாவீதின் குமாரனாக இருப்பதின் மூலமாக அவர் சிங் காசனத்திற்கு வாரிசாகிறார். தேவன் முன்பு “தாவீதுக்கு ஒரு சந்ததி இல்லாமல் போவதில்லை'' என்று கூறியிருக்கிறார். கிறிஸ்து தாவீதின் குமாரனா யிருக்கிறார். அவர் நமது இனத்தான் மீட்பராக ஆகி நம்மோடு அரசாள்வதற்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணி, காத்துக் கொண்டிருக்கிறார். தாவீதின் குமாரன் சிங் காசனத்தின் உரிமைக்காரராயிருக்கிறார்.
82ஆபிரகாமின் குமாரன் என்ற முறையில், ராஜரீக ஆஸ்தி யுரிமைக்கு உரிமைக்காரனாயிருக்கிறார். ஆமென். அது சரிதானே? ராஜரீக ஆஸ்தியுரிமைக்கு அவர் உரிமைக்காரனாயிருக்கிறார். ஆமென். பாலஸ்தீனாவும் அதிலுள்ள யாவும் “ஆபிரகாமின் வித்துக்கு உரியதாகும். அவர் ஆபிரகாமின் குமாரனாவார்.
மனுஷகுமாரன் என்ற அளவிலே மனுஷகுமாரன் என்ன செய்தார்? மனுஷன் எதை இழந்தான்? அவன் பூமியை இழந்தான். ஆகவே மனுஷகுமாரன் என்ற முறையில், அவர் பூமியின் எல்லா வற்றின் மேலும் உரிமைக்காரனாயிருக்கிறார். இவையெல்லாம் அவர் பெற்றார். அதை நமக்கு திரும்ப அளிக்க வேண்டும், அதன் பிறகு, அவர் இருந்தபடியே இருப்பதற்கு திரும்பிப் போகிறார்.
பிறகு, அவர் தேவ குமாரன் என்ற ரீதியில் எல்லாவற்றை யும் அவர் சுதந்தரித்துக் கொள்ளுகிறார். ஆபிரகாமின் குமாரன் என்ற முறையில் அவரேராஜரீக ஆஸ்தியுரிமைக்கு வாரிசாக இருக் கிறார். மனுஷகுமாரன் என்ற வகையில், அவர் பூமிக்கு உரிமைக் காரனாக இருக்கிறார். தேவகுமாரன் என்ற அளவில் அவர் வானத்திலும் பூமியிலும் உள்ள எல்லாவற்றின் பேரிலும் உரிமை யுடையவராக இருக்கிறார். ஓ! அவரே நமது மீட்பர், நமது இனத் தான் மீட்பர் அவர்.
இப்பொழுது கவனியுங்கள். இது எனக்கு மிகவும் நன்றாக இருக்கிறது. இதன்பேரில் தான் எனக்கு நல்ல போஷிப்பு உண்டா யிருக்கிறது. இப்பொழுது உங்களது இருதயங்கள் சில நிமிட நேரம் தேவனுக்கென்று இளகியதாக இருக்கட்டும். இதற்கு செவிகொடுங்கள்.
83சாத்தானானவன் சட்டவிரோதமாக அத்துமீறி பிறருடைய சுதந்திரத்தில் பிரவேசித்து அதை கைப்பற்றிக் கொள்பவன். அவன் இதை சட்டப்படியாக உரிமை கொண்டிருக்கவில்லை. அவன் அதை சொந்தமாகக் கொண்டிருந்தானா அல்லது வேறு எவருமோ சொந்தமாகக் கொண்டிருந்தார்களோ என்பதைப் பற்றி, கடந்த இரண்டாயிம் ஆண்டுக்காலமாக அவன் சச்சரவு செய்து கொண்டிருந்தான். ஆனால் கிறிஸ்துவோ இனத்தான் மீட்பராக வந்து, அதை நமக்கு திரும்ப மீட்டுத் தந்தார். ஆனால் சாத்தான் அதை இப்பொழுதும் கையில் வசப்படுத்தி வைத்துக் கொண்டி ருக்கிறான். ஆனால் சில காலம் கழித்து, இந்த பெரிய சண்டை யானது முடிவடைந்த பிறகு, அவன் அக்கினிக் கடலிலே தள்ளப் படுவான் என்பதை நீங்கள் அறிவீர்களாக. அவனும் அவனைத் தொழுது கொள்ளுபவர்களும் முழுவதும் அழித் தொழிக்கப் படுவார்கள். ஆனால் இரட்சிப்பை சுதந்தரித்துக் கொண்ட வர்களோ கிறிஸ்துவோடு வருவார்கள். இப்பொழுதோ சாத்தான் சட்டவிரோதமாக அத்து மீறி நமது சுதந்தரத்தில் நுழைந்து அதை கையகப்படுத்திக் கொண்டுள்ளவனாயிருக்கிறான்.
84பழைய ஏற்பாட்டில் ஒரு மனிதன் தன் சுதந்தரத்தை இழந்து விட்டால், அச்சுதந்திரத்தில் பிரவேசிக்கிற ஒருவன் ஐம்பது ஆண்டுகள் வரையிலும் உள்ள காலத்திற்கு மேல், அவன் தன் வசம் அதன் உரிமைக்காரனிடமிருந்து பிடுங்கி, நிரந்தரமாக வைத்துக்கொள்ள முடியாது. ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது யூபிலி ஆண்டாகிய ஐம்பதாவது வரும்பொழுது, அனைத்தும் அவை தாம் முன்பிருந்த ஆதி நிலைக்கு திரும்பிப் போய்விடும். அடிமைகள் யாவரும் தங்களுடைய ஆதி சுயாதீன நிலைக்கு திரும்பிப் போயினர். ஒரு மனிதன் வயலில் மண்ணை வெட்டிக் கொத்திக் கொண்டிருக்கையில், அவன் எக்காளம் ஊதுகிற சத்தத்தை கேட்கையில், அவன் மண்வெட்டியை எறிந்து விட்டு, ''நான் இனிமுதற்கொண்டு ஒரு அடிமையல்ல, நான் என் வீட்டிற்கு என் குடும்பத்தினிடம் திரும்பிச் செல்லுகிறேன்'' என்று கூறுவான். யாவும் திரும்ப அளிக்கப்பட்டன. ஒரு மனிதன் இன்னொருவன் நிலத்தில் அத்துமீறி பிரவேசித்து வசித்து வந்தால், அவன் அங்கிருந்து அகன்றிட வேண்டும். அவன் அவ்விடத்தை காலி செய்தாக வேண்டும். ஏன்? ஏனெனில் சட்டப்படியாக உரிமைக்காரன் திரும்ப வருகிறான். எனவே இவன் விட்டுக் கொடுத்தாக வேண்டும்.
அல்லேலூயா! இந்நாட்களில் ஒன்றில், இவ்வுலகின் இராஜ்ஜியங்கள் வீழ்ந்துவிடும், இந்நாட்களில் ஒன்றில், இதன் சட்டப்படியான சொந்தக்காரர்கள் வந்திடுவார்கள். ஆமென்.
85அது சச்சரவுக்குரியதாக இருந்த ஒரு வேளை உண்டா யிருந்தது. நாற்பதாவது நாள் வரையிலும், அதாவது பரிசுத்த ஸ்தலத்தின் சுத்திகரித்தலின் முதலாம் நாள் தொடக்கம், அல்லது கிறிஸ்து கல்வாரிக்குச் சென்ற நாள் தொடக்கம், கிறிஸ்து பரத்துக்கு ஏறுகிறவரையிலும் நாற்பது நாட்கள் உண்டாயிருந்தது. சாத்தானின் குழுவினர் அதைக் கைவசப்படுத்திக் கொள்வார்களோ என்ற விவாதம் உண்டாயிருந்தது. அவர்கள் அவர் மரித்தோரி லிருந்து எழும்பவில்லை என்று கூறினர். இவ்விதமான ஒரு செய்தியை அறிவிக்கச் செய்தனர்; அதாவது “அவருடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து அவரைக் களவாய்க் கொண்டு போய் விட்டார்கள்'' என்று கூறினார்கள். நீங்கள் அதைப் பற்றி வேதத்தில் வாசித்திருக்கிறீர்கள். ''அவருடைய சீஷர்கள் இராத் திரியிலே வந்து அவரை களவாய்க் கொண்டு போய்விட்டார்கள்'' என்று சொன்னார்கள். இவ்வாறு கூறும்படி போர்ச்சேவகர்களுக்கு அவர்கள் பணம் கொடுத்தார்கள். ஆனால் அது அப்பொழுது கேள்விக்குரியதாக இருந்தது.
“நல்லது, உண்மையிலேயே அது ஸ்தாபனத்திற்கு சொந்த மாக ஆகிறது. யாவும் அதற்கே சொந்தம் ஆகிவிடும்'' என்று கூறினார்கள்.
86ஆனால் ஐம்பதாவது நாளிலே, அது பெந்தெகொஸ்தே என்னும் நாளாகும். சட்டப்படியான உரிமைக்காரனானவர் அவர்கள் மத்தியில் இறங்கி வந்து (அல்லேலூயா!) அது ஸ்தாபன மல்ல என்பதைக் காண்பித்தார். அதுதானே பரிசுத்த ஆவியின் நிறைவாகும் என்று காண்பித்தார். அதுதானே தமது சபைக்கு அளிக்கப்பட்ட அச்சாரமான பணம் என்றும், அது ஸ்தாபனத்தால் கட்டுப்படுத்தப்படாது என்றும், அதுதானே பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் அச்சாரமான பணமாக, தேவனுடைய வல்ல மையோடும், அன்போடும் உள்ளதாக இருக்கிறது என்றும் காண்பித்தார். ஆமென்! ஓ, அது உங்களுக்கு ஒரு காரியத்தைச் செய்ய வில்லையா? சட்டப்படியான சுதந்தரவாளி. அது யாருடைய கைகளில் இருந்தது? தேவனுடைய கரங்களில் இருந்தது.
அவன் அதை ஐம்பது நாட்களுக்கு வைத்திருக்க முடியாது என்பதைப் பாருங்கள். அதைப்பற்றி நீங்கள் லேவியராகமத்தில் வாசிக்கிறீர்கள். லேவியராகமத்தில் உள்ள பிரமாணங்களில் வாசிக்கிறீர்கள். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்தரமானது அதனுடைய மூல சொந்தக்காரனிடத்தில் அது திரும்பிச் சென்றிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நாம் யாவரும் அதை அறிவோம். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு காணி யாட்சியின் ஆதி சொந்தகாரனிடத்தில் அது திரும்பிப் போக போக வேண்டும் என்பதைப் பற்றி நீங்கள் அநேக சமயங்களில் படித்திருக்கிறீர்கள்.
இந்த ஐம்பது நாள் - வருடங்களுக்குப் பிறகு, ஒரு வருட மானது .... ஒருநாள் ஒரு வருடத்திற்கு சமம். அவர்கள் இந்த இனத் தான் மீட்பரைப் பிடித்து பண்டிகையன்று கொன்ற பொழுது, அந்த நாள் முதற்கொண்டு, சர்ச்சை உண்டாயிருந்தது. அவர் இனத்தான் மீட்பர் என்று சபையானது அது வரையிலும் நம்பி வந்தது. “அவரே மீட்பர்'' என்று நம்பியது. அதன்பிறகு அது என்ன செய்தது? எதிராளியானவன் அவரைக் கொன்று போட்டு விட்டு, அவர்கள் அவரது சரீரத்தை எங்கோ ஒளித்து வைத்து விட்டார்கள் என்று கூறினான். பிறகு என்ன நடந்தது? என்ன சம்பிவித்தது?'' என்று மக்கள் மனதில் ஐயங்கள் எழும்பியது.
87இப்பொழுது ஐம்பதாவது நாளிலே, இனி முதற் கொண்டு அது சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்கவேயில்லை என்பதை நீங்கள் பாருங்கள். அப்பொழுது தேவன்.... அவர்கள் பழைய வைதீக மான, குளிர்ந்து போன சபையோடு ஒத்துப் போய்விட மனதா யிருந்தனர். தேவன் பரிசுத்த ஆவியை திரும்ப அனுப்பினார். அப்பொழுது, அது சுதந்திரத்தில் உட்கார்ந்து ஆக்ரமித்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம் துரத்தியடித்துவிட்டு, அதை தன் கைவசப்படுத்திக்கொண்டது. பரிசுத்த ஆவியின் வல்லமையானது இறங்கி வந்து, அதினால் சபையானது தனது இரட்சிப்பின் அச்சாரத்தைப் பெற்றுக்கொண்டது.
இப்பொழுது, சகோதரனே, இப்பொழுது நான் சொல்லப் போவது, உமது உணர்வுகளைப் புண்படுத்துவதற்காக அல்ல. உமக்கு ஸ்தாபனமானது சரியென்று இருந்து, நீர் ஸ்தாபன ரீதியாக கத்தோலிக்கராகவோ, பாப்டிஸ்ட்டாகவோ, இருப்பீராயின், நீர் இழந்து போகப்படுவீர். நமது இரட்சிப்பின் அச்சார மானது ஒரு சபையில் சேருதல் என்பதாக அல்ல. ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்தவனாக இருப்பது, நமது இரட்சண்யத்தின் அச்சாரம் அல்ல. நமது இரட்சண்யத்தின் அச்சாரம் என்பது, எந்தவொரு ஸ்தாபனத்தையும் சேராமல், பரிசுத்த ஆவியின் ஞானஸ் நானத்தைப் பெறுதலே ஆகும். ஆமென்.
88அந்த ஐம்பதாவது நாள் முடிந்தபிறகு, அதற்கப்பால் அதை வைத்திருக்க அவர்களால் முடியாது. ஏனெனில், அந்நாள் தான் யூபிலி ஆகும். அந்நாளில் தான் யாவும் அதன் ஆதி நிலைக்கு திரும்பிச் சென்றது. தேவனுடைய வல்லமையானது அந்த ஐம்ப தாவது நாளிலே, யூபிலி ஆண்டிலே, யாவும் அதன் ஆதி நிலைக்கு திரும்பிச் சென்றபோது, திரும்பக் கொடுக்கப்பட்டது.
இன்னொரு யூபிலி ஆண்டு வரப்போகிறது. அதை நாம் கிட்டத்தட்ட இந்த வேளையில் பெற்றிருக்கிறோம். நீங்கள் கவனித் தீர்களானால், பெந்தெகொஸ்தேயானது கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுக்காலமாக விழுந்து கொண்டிருக்கிறது என்பதை அறியலாம். ஏறத்தாழ அந்த வேளையில் தான் அது இருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக பெந்தெகொஸ்தேயானது விழ ஆரம்பித்தது. இப்பொழுது என்ன சம்பவித்துக் கொண்டிருக் கிறது? சபையானது இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப் படுத்துதலாகிய ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டுள்ள புத்தகத்தை பெற்றுக்கொண்டிருக்கிறது. அவர்களில் பத்தில் ஒரு பங்கினர் கூட அதைப்பெற்றுக் கொள்ள முடியாது.
89ஆனால் நீங்கள் யூபிலி வருஷத்தை காண ஆரம்பிக்கும் பொழுது, அங்கே நாம் வெற்றுப் பகட்டு ஆரவாரம் செய்யவோ, நமக்கு சிரமமோ இல்லை, ஆனால் நாம் ஏற்கெனவே கிறிஸ்துவிலே பாதுகாக்கப்பட்டிருக்கிறோம். ஞானஸ்நானத்தில் நமக்கு ஏற் கெனவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் கிடைத்திருக் கிறது. இந்த ஏழு முத்திரைகளில் நாம் எடுத்துக்காண்பிக்கப்போகிற இம்மகத்தான இரகசியங்கள் யாவும் நாம் பெற்றிருக் கிறோம். இம்முத்திரைகள் தான் மக்களுடைய கண்களுக்கு மறை வாக முத்திரையிடப்பட்டிருக்கின்றன என்பதை உங்களுக்கு நிரூபித்திடுவோம். தேவன் என்னுடைய துணையு மானவராக இருப்பதினால் அவர்களால் அதைப்பற்றி வேதத்தின் மூலமாக காண முடியவில்லை என்பதையும், இந்த வேளை வரையிலும், 'பிதா குமாரன் பரிசுத்த ஆவி'' என்பதைத் தவிர வேறோன்றையும் பார்க்க முடியவில்லை என்பதையும் நிரூபிக்க முடியும். இந்த வேளை வரையிலும் அவர்களால் நித்திய நரகம் என்று ஒன்று இல்லை என்பதை காண முடியவில்லை. உண்மையான விசுவாசிக்கு நித்திய பாதுகாப்பு என்பதைப் பற்றி அவர்களால் காண முடியவில்லை.
அதைப் பற்றி எப்பொழுதும் பரியாசமானது இருந்து வந்தி ருக்கிறது. அது அவர்கள் உண்டாக்குகிற விளங்காத சத்தமாயிருக் கிறது. அக்காரணத்தினால் தான் மக்கள்... அவர்கள், 'அந்த ப்ரெஸ்பிடேரியன்களைப் பாருங்களேன், அவர்கள் புகைக் கின்றனர், மது அருந்துகின்றனர். இன்ன பிற காரியங்களை யெல்லாம் அவர்கள் செய்து விட்டு தங்களுக்கு நித்திய பாதுகாப்பு இருக்கிறது என்று கூறுகின்றனர்'' என்று கூறுகிறார்கள். அதெல்லாம் சரிதான். ஆனால் இவ்வாறு இவர்கள் கூறுவது உண்மையான எக்காளத்தை இல்லா மல் ஆக்குவதற்காக உள்ள முயற்சிதான்.
இந்த முத்திரையானது திறக்கப்படுகையில், எக்காளமானது முழங்கி அதினால் நீங்கள் வேதத்தில் ஆதியாகமம் முதல் வெளிப் படுத்தின விசேஷம் வரையிலும், முன்னும் பின்னும் ஒருங்கிணைப் பாக, காரியமானது இசைவாக இருக்கிறதா இல்லையா என்று நாம் பார்ப்போமாக. அப்பொழுது, இக்காரியங்கள் வெளிப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது, ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும்,
90இப்பொழுது, ஓ, சகோதரனே, நான் நினைத்தேன்..... அடுத்த தடவை நான் இங்கே திரும்பி வருகிற வரையிலும் நான் இதோடு இங்கே நிறுத்திக் கொள்ளுகிறேன், இன்னும் இங்கே ஆறு பக்கக் குறிப்புகள் உள்ளன; இல்லை, ஞானஸ்நான ஆராதனை நடக்கவிருக்கிறது. யூபிலி வருஷத்தைக் குறித்து உள்ள இன்னும் இரண்டு சிறு காரியங்களைக் குறித்து நான் படித்துக் காண்பிப்பேனாக.
நீங்கள் யாவரும் வேதவாக்கியங்களை குறித்துக் கொள்ளு கிறீர்களா? எரேமியா 32ம் அதிகாரம் 6ம் வசனத்தில் தொடங்கி... நீங்கள் வாசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். எரேமியாவின் புத்தகத்தில் புத்தகச் சுருள் என்பது என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும்படி நான் அதை எடுத்துக்கொள்வேன். எப்படியும் நாம் அப்புத்தகச் சுருளைக் குறித்துப் பார்ப்போம். புத்தகச் சுருளைக் குறித்துப் கூறுவதற்கு எனக்கு இன்னும் பத்து நிமிடங்கள் பிடிக்கும். இப்புத்தகமானது முத்திரையிடப்பட்டிருந்தது என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள். வேதாகம நாட்களில் ஒரு புத்தகம் என்னப்படுவது இக்காலத்தில் உள்ளதைப் போல நான்கு மூலைகள் கொண்ட ஒன்றல்ல. இவ்வாறாக அது இருக்கும். அது புத்தகம் என அழைக்கப்பட்டது. அது ஒரு புத்தகச் சுருள் ஆகும். அதை எத்தனை பேர் அறிவீர்கள்? நிச்சயமாகவே அது ஒரு புத்தகச் சுருளாக இருந்தது.
91இப்பொழுது இப்புத்தகமானது ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டிருந்தது. அது வேதாகமமாக இருந்தது. அது ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டிருந்தது. அது எவ்வாறு செய்யப்பட்டிருந்தது என்பதை கவனியுங்கள்.
எரேமியா தீர்க்கதரிசனம் உரைத்தபொழுது அவன், தானுங் கூட சிறைப்பிடித்துச் செல்லப்படப்போவதாக கூறினான். எரேமியா 32ம் அதிகாரம். அவனுங்கூட பாபிலோனுக்கு சிறைப் பிடிக்கப்பட்டு போவதற்கு இருந்தான்; அவர்கள் சிறையிருப்பில் எழுபது ஆண்டுகள் இருப்பதற்கு என்று இருந்தார்கள். அதைப் பற்றி அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான். வேதத்தை வாசித்திருக் கிறவர்களாகிய நீங்கள் அதைப்பற்றி அநேக சமயங்களில் படித்திருக்கிறீர்கள். அவன் அங்கே எழுபது ஆண்டுக்காலம் இருக்கும்படி கொண்டு போகப்பட இருந்தான். எரேமியா தன் பெரிய தகப்பன் மகனாகிய அனாமயேலுக்கு மிக நெருங்கின இனத் தானாக இருந்தான். அவன் மரித்துப் போய்விட்டான். அவன் தன் சுதந்திரத்தின் உரிமை பற்றிய தஸ்தாவேஜுகளை சத்துருவானவன் எடுத்துக்கொண்டு விடுவான் என்றும், ஆனால், தேவன் தன் ஜனங்களை கைவிடமாட்டார் என்றும், கைப்பற்றி கொண்டு விடுவான் என்றும், அறிந்திருந்தான். எனவே அவர்கள் திரும்பி வரும்பொழுது, அந்த சுதந்திரத்தின் பேரில் சட்டப்பபடியான சொந்தக்காரனாக அதை பெற்றுக்கொள்ள முடியும் என்று கருதி அவன் இந்தக் காரியத்தைச் செய்தான். அவன் எல்லாவற்றையும் அதில் எழுதி வைத்துவிட்டான்.
92எத்தனை பேர்கள் அதை படித்திருக்கிறீர்கள்? நல்லது, நீங்கள் அதைப் பற்றி படித்திருக்கிறீர்கள். இந்த புத்தகச் சுருள்கள் முத்தி யிரையிடப்பட்ட விதமாகவே அவன் அதை எழுதி எடுத்து முத்தி ரையிட்டு வைத்தான். நீங்கள் கண்டுள்ள எல்லாவற்றிலும் மிகவும் தலைசிறந்த விஷயமாக இது இருக்கிறது.
இந்த துண்டுக் காகிதத்தை கொண்டு நான் உங்களுக்கு இதை விளக்கப் போகிறேன். என்னால் அதை சரியாக செய்ய முடியுமோ, முடியாதோ, எனக்கு தெரியாது. இந்த விதமாகத்தான் அது முத்தி ரையிடப்பட்டிருந்தது. அவன் ஒவ்வொன்றையும் இவ்விதமாகத் தான் செய்து முத்திரையிட்டிருந்தான். முத்திரைகள் ஒவ்வொன்றி லும் என்ன சம்பவித்தது என்று அவனுடைய சுதந்திரத்தைப் பற்றி எழுதுகையில் குறிக்கப்பட்டிருந்தது, என்ன சம்பவித்தது, அவனுக்கு முன்பாக யாரெல்லாம் இருந்தார்கள், மரித்தார்கள் என்பதைப் பற்றியும், எவ்வாறு அவன் தன் வரிசையில் அதை சுதந்தரிக்க உரிமை பெற்றான் என்பதைப் பற்றியெல்லாம் எழுதப் பட்டது. அது யாவும் அந்த விதமாகத்தான் முத்திரையிடப் பட்டிருந்தது.
93இப்பொழுது தேவனும் அந்த விதமாகத்தான் தனது ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்ட புத்தகத்தை கொண்டிருந் தார். அவர் அதை உடைத்த பொழுது, ஆதியோடந்தமான அனைத் தையும் பற்றிய வெளிப்படுத்தல் அங்கே வந்து புத்தகத்தின் பின்பக்கம் வரையிலும் போகிறது. எனவேதான் நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தைப் பற்றிய வெளிப்பாட்டை எடுத்துக் கொண்டு, அதை ஆதியாகமம் முதற்கொண்டு, வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் எங்கும் இருக்கக் கண்டு, “பிதா குமாரன் பரிசுத்த ஆவி” என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதை நிரூபிக்க லாம். அது வேதம் முழுவதிலும் காணப்பட்டு, அதை வெளிப் படுத்துகிறது.
“நித்தியமானதொரு நரகம் உண்டு' என்று சொல்லப் படுகிறதைப் பற்றி எடுத்துக் கொள்வோம். அதைப் பற்றி வேதம் பூராவிலும் ஆராய்ந்து பார்க்கையில், நித்தியமான நரகம் ஒன்று உண்டு என்கிற விஷயமே அங்கே இருக்கவில்லை. ஏனெனில் ஆதியில் தேவன், பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக் காகவுமே நரகமானது, அவர்களுடைய எதிர்கால தண்டனைக்காக சிருஷ்டிக்கப்பட்டது என்று கூறியுள்ளார். நரகம் நித்தியமானது என்றாகிவிட்டால் அது எவ்வாறு சிருஷ்டிக்கப்படமுடியும்? சிருஷ்டிப்பு என்ற வார்த்தையானது... ''நித்தியம் என்ற வார்த் தைக்கு , ” துவக்கம் இல்லாததும், முடிவடையாததுமான'' என்று பொருளாகும். நரகம், நித்திய நரகம் என்பதாக இருந்தால், தேவன் நித்தியமாக இருக்கிறே அதே வேளையில் நரகமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்றும், பாவம் என்று ஒன்று இருப்ப தற்கு முன்பாகவே அப்பொழுது நரகம் என்று ஒன்று இருந்திருக் கிறது என்பதாகிவிடும். ஓ! அவ்வாறாக இருக்கவே முடியாது.
94ஆகவே, இவ்விஷயங்கள் தாமாகவே திறக்கப்படுகையில் அது பின்னால் திரும்பிச் சென்று புத்தகத்தை திறக்கிறது. ஆகவே இப்பொழுது அது முழு வேதாகமத்தில் சரியானதொரு சித் திரத்தை நமக்கு அளிக்கிறது. முத்திரைகளானது, ஞானிகள், கல்வி மான்களுக்கு வேதம் மறைவாக இருக்கும்படி செய்துவிடுகிறது. தேவன் பரிசுத்த ஆவியினாலே இவ்வாறாக அவைகளை திறந்து கொடுத்து, வேதாகமம் முழுவதிலும் இருந்து அவைகளை வெளிப் படுத்துகிறார். தேவனுக்கு மகிமையுண்டாவதாக!
சகோதரனே, இவ்விஷயமானது எனது ஆவிக்குரிய அறு சுவை உணவு உண்ணும் தன்மையை தட்டியெழுப்பிவிடுகிறது என்று நான் உங்களுக்கு கூறுகிறேன். இப்பொழுது இங்கே பாருங் கள். அது இவ்வாறு உள்ளது ..... நான் கூறுவதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? பாருங்கள், இங்கே ஒரு முத்திரை இருக்கிறது. நீங்கள் கவனித்து இங்கே படித்தால், எரேமியாவின் புத்தகத்திற்கு சென்று அவன் எவ்வாறு முத்திரையிட்டான் என்பதை அங்கே காணுங்கள்.
95அங்கே அப்புத்தகம் உள்ளது, அங்கே எழுதப்பட்டு இருக்கிறது. முதலாம் வெளிப்படுத்துதலுக்காக உள்ள சரியான நேரத்தில், அவர் இந்த முத்திரையை திறக்கிறார். நாம் முத்திரை களைப் பற்றி பார்க்கப் போகையில், முதலாம் முத்திரையானது என்ன என்பதை நீங்கள் கவனியுங்கள். பிறகு, இரண்டாம் முத்திரைக்கான வேளையில் அடுத்த முத்திரையை அவர் உடைக்கிறார். நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்களா? நாம் இப்பொழுதே ஏறத்தாழ ஏழாம் முத்திரையின் வேளையில் இருக்கிறோம். ஏழாம் ... அந்த வேளையிலே...
முதலாம் முத்திரையானது திறக்கப்பட்ட பொழுது, முதலாம் எக்காளமானது முழங்கி, முதலாம் வாதையானது விழுந் தது. ஆறாம் முத்திரை திறக்கப்பட்ட பொழுது, ஆறாம் எக்காளம் முழங்கி, ஆறாம் வாதையும் விழுந்தது. நீங்கள் பார்த்தவைகளி லெல்லாம் மிகவும் அழகான விஷயமாக இது இருக்கிறது என்பதை கவனியுங்கள். நான் இதைப்பற்றி போதிக்கப் போகையில், நான் அதற்கென பெரிய கரும்பலகை ஒன்றைக் கொண்டு வந்து, அதன் மூலமாக இவைகளைக் குறித்து போதிக்கப் போகிறேன். அதற்கென ஏராளமான நேரத்தை நாம் ஒவ்வொரு முத்திரையின் பேரிலும் எடுத்துக்கொண்டு, வரலாற்றில் நாம் பின்னால் திரும்பிச் சென்று, எப்பொழுது அது சம்பவித்தது என்பதை நிரூபித்து, அதைப்பற்றி வேதத்திலிருந்து எடுத்துக் காண்பித்து, அது எப்பொழுது சம்பவிக்கும் என்று வேதம் கூறியதோ அதன்படியே சரியாக எப்பொழுது அது சம்பவித்தது, தேதியுட்பட யாவற்றையும் விவரித்து போதிப்பேன். அவரிடத் திலிருந்து நான் அதைப் பற்றிபெற்றுக் கொண்டுள்ளேன். ஆமென், அங்கே அம்முத்திரைகள் உள்ளன.
96எரேமியா அப்புத்தகத்தை எழுதிய போது, அது முத்திரை யிடப்பட்டது. அந்த முத்திரையிடப்பட்ட அப்புத்தகத்தை வாசிக் கிற நீங்கள் யாவரும் ஒரு நல்ல காரியத்தைக் குறித்து கவனிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அவனும் சிறையிருப்பில் போய் விடப் போவதாக இருந்தது. அவன் அதைப் பற்றி தீர்க்கதரிசனம் உரைத்திருந்தான். நீங்கள் அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவன் தானே அதை, தான் அதைப்பற்றி தீர்க்கதரிசனத்தில் உரைத்ததினால் மாத்திரமே அறிந்திருந்தான். நான் கூறுவதை நீங்கள் கவனித்துக் கொண்டே வருகிறீர்களா? தீர்க்கதரிசனத்தினால் அவன் அறிந்திருந்தான். தேவன் அளித்த வெளிப்பாட்டின் மூலமாக எழுபது ஆண்டு கால சிறையிருப்பில் அவர்கள் அத்தேசத்தை விட்டு கொண்டு போகப்படுவார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் அதைப் பற்றி தீர்க்க தரிசனம் உரைத்ததை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களா? அவர்கள் சிறையிருப்பில் எழுபது ஆண்டு காலம் இருந்தார்கள். எனவே முத்திரையிடப்பட்ட தனது சுதந்தரத்தைப் பற்றி கிரயப் பத்திரமானது பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என அவன் விரும்பினான். ஏனெனில் அவனுக்கு ஒரு ... அவன் தன் பெரிய தகப்பனாரின் மகனுடைய சுதந்திரத்தை சுதந்தரித்துக் கொண்டான். எனவே அவன் அதைப்பற்றி சட்டபூர்வமான எல்லாம் எழுதப்பட்டிருக்கப் பெற்றிருந்தான். எனவே அப் பத்திரம் துருப்பிடிக்காமலும், கெட்டுப் போகமலும் இருக்க அவன் என்ன செய்தான்? அவன் அதை ஒரு மண்பாண்டத்தில் வைத்தான். எழுபது ஆண்டுகள் முடியும் வரையிலும் அது கெட்டுப் போகவே, அல்லது துருப்பிடிக்கவோ செய்யாதபடி இருக்க அவ்வாறு செய்தான்.
97தேவனுக்கு மகிமை உண்டாவதாக! நீங்கள் அதை புரிந்து கொள்வீர்கள் என்று நான் விரும்புகிறேன். தேவன் என்ன செய்தார் என்பதை கண்டு கொண்டீர்களா? அவர் அதை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை. அதனால், அவர்கள் இதுவரையிலும் அதைப் பற்றி மேன்மை பாராட்டிக்கொள்ள முடியாமல் ஆகிவிட்டது. ஆனால் அவர் அதை ஒரு மண்பாண்டத்திற்குள் வைத்து அவர் தாமே தன்னுடைய சொந்த குமாரனாகிய கிறிஸ்து இயேசுவை சிருஷ்டித்தார். இந்தக் கடைசி நாளிலே இப்பொழுது அவர் முத்திரைகளை திறந்து தமது சபைக்கு அவைகளை காண்பித்துக் கொண்டிருக்கிறார். அது கெட்டுப்போகவோ, அல்லது துருப்பிடிக்கவோ கூடாதபடி அதை அவர் ஒரு மண்பாண்டத்தினுள் வைத்தார். அல்லேலூயா! ஓ நான் ஒரு உருளும் பரிசுத்தன் என்று நீங்கள் எண்ணுவீர்கள் என்று நான் அறிவேன். ஒரு வேளை நான் அப்படி இருக்கக்கூடும். ஆனால் அது அங்கேதான் இருக்கிறது. அதுதானே மண்ணுக்குரிய ஒரு பாத்திரத் தினுள் சுற்றி வைக்கப்பட்டு, பூமியினின்று அது மீட்கப்பட்டு ஈஸ்டர் காலையிலே உயிரோடு எழும்பி வந்தது; அங்கே மரணத்தின் முத்திரைகள் அவரை அதற்கு மேல் பிடித்து வைத்திருக்க இயலாமற்போயிற்று. அவர்தாமே முத்திரைகளை உடைத்து, உயிர்த் தெழுந்து, தான் உயிரோடிருக்கிறதை இந்தக் கடைசி நாட்களில் நிரூபித்து விட்டார். அவர் தமது சபையிலே இருக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். இவ்விஷயம் வேதாகமக் கல்லூரிகளுக்கும், ஸ்தாபனங்களுக்கும் மறைக்கப் பட்டுள்ளது.
இந்தக் கடைசி நாட்களில், தமது ஜனங்களின் மத்தியில் தன்னுடைய சொந்த பிரசன்னத்தினால், அதை அவர் வெளிப் படுத்திக் கொண்டிருக்கிறார். லௌகீக காரியங்களை தங்களைவிட்டு அகற்றிக் கொள்ளத்தக்கவர்களை அவர் தெரிந்து கொண்டு, அவர்களை விட்டு, அவனைவிட்டு , ஸ்தாபன தன்மையை அகற்றி விடுகிறார், இதனால் அவர் அவர்கள் மூலமாக பேச முடியும்; இம்முத்திரைகளை அவர் செய்தது போல வெளிப்படுத்தவும், திறக்கவும் முடியும். அல்லேலூயா! ஓ, நீங்கள் அவரை நேசிக்க வில்லையா? என்னே, என்னே, என்னே!
98நமது இரட்சிப்பின் திட்டமானது இயேசு கிறிஸ்துவிலே இப்பொழுதும் அது வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர் எவ்வாறு தன்னை இந்தக் கடைசி நாட்களில் வெளிப் படுத்தினார்? முத்திரையை திறந்து கொடுப்பதின் மூலமாகத்தான். ஏன் எவரும்... ஆபிரகாமின் வித்தைக் குறித்த விஷயத்தை உங்கள் ஜீவியத்திலும் நீங்கள் இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை. அவர் கள் எவ்வாறு நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாகுதல், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் ஆகியவற்றின் வழியாக சென்றனர் என்று பார்த்தோம். எவ்வாறு அத்தூதன் கடைசி நாட்களில் வந்து, தன் முதுகு சபையோருக்கு நேராக இருக்க, சாராள் தன் இருதயத்தில் எதை எண்ணிக் கொண்டிருக்கிறாள் என்பது அப் படியே சரியாக கூறப்பட்டதோ, அது இதுவரையிலும் ஏற் படவில்லை, அது சரிதான், அது அந்நாளில் தான் ஏற்பட்டுள்ளது. ஆபிரகாமின் விசுவாசம் - கர்த்தாராகிய இயேசுவின் நாமத்தைக் குறித்த விஷயம்.
99இன்னும் ஒரு விநாடியில் நான் இன்னும் பேசவிரும்பும் ஐந்து காரியங்கள் என்னிடம் உள்ளது. அதை எவ்வளவு விரைவாக பேச முடியுமோ அவ்வளவு விரைவாக பேசிடுவேன். பாருங்கள். ஏழு... ஏழு முத்திரைகள் உள்ளன. தேவனுடைய மீட்பின் திட்டத்தில் ஐந்து ஏழுகள் உள்ளன. ஐந்து என்ற எண் ''கிருபையின்'' எண்ணாகும். எத்தனை பேருக்கு அது தெரியும்? இயேசு (J-e-s-u-s) (F-a-i-th) விசுவாசம் (ஆங்கிலத்தில் இயேசுவுக்கு (Jesus) விசுவாசத் திற்கு (Faith) ஐந்து எழுத்துக்கள் உள்ளன- மொழி பெயர்ப்பாளர்) ஐந்து என்ற எண் கிருபையைக் குறிக்கும். ஆறு என்ற எண் மனிதனின் நாளைக் குறிக்கும் - ஏழு என்ற எண் அவனது மீட்பின் நாளுக்குரிய எண்ணாகும்.
இப்பொழுது கவனிக்கவும். அங்கே ஏழு முத்திரைகள் இதில் உள்ளன, அல்லது இந்த மகத்தான மீட்பின் திட்டத்தில் ஏழு திட்டங்கள் உள்ளன. அங்கே ஏழு என்ன உள்ளது? மீட்புக் குரிய ஏழு முத்திரைகள், தேவனுடைய ஏழு ஆவிகள்.... நாம் அதை பார்க்கிறோம், ஏழு ஆவிகள் என்று வசனம் கூறுகிறது. இங்கே வெளிப்படுத்தின விசேஷம் 5ம் அதிகாரத்தில் 6ம் வசனம் துவங்கி என்ன கூறப்பட்டுள்ளது என்பதை சற்று ஒரு நிமிடம் நேரம் நான் வாசிக்கட்டும். அது 6ம் வசனம் என்று நான் நம்பு கிறேன்.
''அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன் களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியில் நிற்கக் கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதா யிருந்தது. அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.
வெளி.5:6
அந்த ஏழு ஆவிகள் என்ன? அந்த ஏழு செய்தியாளர்கள் தான். அங்கே பரிசுத்த கொலம்பா, ஐரேனியஸ், ஜான் வெஸ்லி, மார்டின் லூத்தர் ஆகியோர் உண்டு. ஏழு மனித தூதர்களாகிய ஏழு செய்தியாளர்கள்தான் அவ்வேழு ஆவிகளாம்.
100ஏழு முத்திரைகளும், ஏழு ஆவிகள், ஏழு தூதர்கள், ஏழு கொம்புகள், ஏழு சபைகள். ஏழு ஏழு என்று ஐந்து ஏழுகள் உள்ளன என்று பாருங்கள். ஏழு என்பது பரிபூரணத்தைக் குறிக்கும். ஐந்து என்பது “கிருபையைக் குறிக்கும். தேவன் ஏழு சபைக் காலங் களுக்கும் அளிக்கப்படும் தேவனுடைய கிருபை அவருடைய ஏழு மனித செய்தியாளர்கள் - தூதர்கள்தான் அவ்வேழு தேவனுடைய ஆவிகளாகும். மீட்புக்குரிய திட்டத்தைக் கொண்ட ஏழு முத்திரைகள் - நாம் இப்பொழுது அதைத்தான் பார்க்கிறோம். ஏழு கொம்புகள் ஏழு காலங்களைக் குறிக்கும்.
கொம்பு என்றால் “ ஒரு இராஜ்யத்தை''க் குறிக்கும். தானி யேலில் அம்மிருகத்தின் வருகிற அக்கிரீடத்தைக் கொம்பின் மேல் குறித்து உங்களுக்கு ஞாபகமிருக்கும். கொம்பு என்றால் ஒரு இராஜ் யத்தைக் குறிக்கும், அல்லது ''ஏழு காலங்கள்'' சிலர் நித்திரை யடைந்தார்கள் என்று இயேசு கூறியது உங்களுக்கு ஞாபகத் திலிருக்கட்டும். சிலர் முதலாம் ஜாமத்திலும், சிலர் அதற்கடுத்த ஜாமத்திலும், இப்படியாக அடுத்தடுத்து வருகிற ஜாமங்களில் அதற்குரிய ஜாமங்களில் வாழ்ந்தவர்கள் நித்திரையடைந்தார்கள். கடைசியாக ஏழாம் ஜாமம், அந்த ஏழாம் ஜாமத்தில் மணவாளன் வருகிறார், அப்பொழுது யாவரும் விழித்தெழுகிறார்கள். அதை நினைவில் கொண்டிருக்கிறீர்களா?
ஆகவே, ஏழு காலங்கள் தான் அவ்வேழு கொம்புகள் ஆகும். ஏழு சபைகள் அல்லது, விசுவாசிகளைக் கொண்ட சரீரத் தின் ஏழு காலங்கள் ஆகும். ஓ, அது மிகவும் பரிபூரணமாக இருக் கிறது. எரேமியா... அப்புத்தகம் '' காலங்கள் - எவ்வாறு அது மீட்கப்பட்டது. எங்ஙனம்? (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி) இங்கே .....
101இம்முத்திரைகளில் ஏழாவதும், கடைசியுமான முத்திரை - அவைகள் திறக்கப்படுகையில், அதைப்பற்றி, வெளிப்படுத்தின விசேஷம் 10ம் அதிகாரத்தில் காணப்படுகிறது. அங்கே ஒரு பலமுள்ள தூதன் இறங்கி வந்து - அது கிறிஸ்து தான் - ஒரு பாதத்தை பூமியின் மேலும், ஒரு பாதத்தை சமுத்திரத்தின் மேலும் வைத்து, தன் கரத்தை உயர்த்தி, “நாள் முடிவடைந்தது, நேரம் கடந்து சென்றுவிட்டது. எல்லாம் முடிவடைந்தது, இனி காலம் செல்லாது'' என்று கூறுகிறார்.
அது முழக்கமிடப்படுகையில், அவ்வேளையில் தேவ இரகசியம் முடிவடையும் என்று கூறினார். தேவன் யார், அவர் எவ்வாறு தம்மை பிரத்தியட்சப்படுத்தினார் என்பதெல்லாம் தெரியும். அம்முத்திரை திறக்கப்படுகையில், அவர் எவ்வாறு தேவ குமாரனாகவும், அவரே தேவன் என்பதையும் குறித்து நாம் புரிந்துகொள்ள ஆரம்பித்தோம். அவர் தேவனே மாம்சத்தில் வெளிப் பட்டவர் என்பதை அறிந்து கொண்டோம். அவர் யார் என்பதைப் பற்றிய வெளிப்பாடு - இதெல்லாம் அத்தூதன், நிலத்தின் மேல் ஒரு பாதத்தையும் சமுத்திரத்தின் மேல் ஒரு பாதத்தையும் வைத்து, ''இனிகாலம் செல்லாது'' என்று ஆணையிட்டுக் கூறுகிறதற்கு முன்பாக முடிவடைய வேண்டும். நாம் இப்பொழுது அதனுடைய முன் முற்றத்தில் வந்து விட்டோம். பாருங்கள்?
அவைகளில் கடைசியானது வெளிப்படுத்தின விசேஷம் 10ம் அதிகாரமாகும். ஒருபாதம் நிலத்தின் மேலும், ஒரு பாதம் சமுத்திரத்தின் மேலும் - நேரம் கடந்து விட்டது - மீட்பு முடி வடைந்துவிட்டது - இப்பொழுது அவர் சிங்கமாக வருகிறார்அப்பொழுது அவர் ஆட்டுக்குட்டியாக இருந்தார். இப்பொழுதோ அவர் யூதா கோத்திரத்து சிங்கமாக வருகிறார்.
102இப்பொழுது அக்காரியத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளத் தக்கதாக இங்கே மீதியுள்ள வசனத்தையும் விரைவாக வாசிப் பேனாக, 8ம் வசனம் :
“அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக் கொண்டு, ஆட்டுக்குட்டி யானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து,
வெளி.5:8
இப்பொழுது, இந்த வேளையில் தான் யாவும் தொழுது கொள்ளவேண்டும். எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது இதை நாம் இழந்து போக வேண்டாம். மிகவும் கவனமாக கேளுங்கள். சபைக்காலத்திற்குரிய அனைத்து இரகசியங்களும் முடிவடையும் பொழுது மீட்பின் திட்டங்களைப் பற்றிய அனைத்து இரசகியங்களும் அவ்வேழு முத்திரைகளும் திறக்கப்பட்ட பிறகு.... இதற்குப் பிறகு, உடனடியாக பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள யாவும் தேவனைத் தொழுது கொள்ள வேண்டிய வேளையாக அது இருக்கிறது. இப்பொழுது என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள். சற்று ஒரு நிமிட நேரம் அதைப் பற்றிக் கூர்ந்து கேளுங்கள்.
... பாத்திரராயிருக்கிறீர்... என்று புதிய பாட்டைப் பாடினார்கள்...'
103இது என்ன ஒரு தொழுகையாயிருக்கிறது என்பதை கேளுங் கள். மூப்பர்கள், ஜீவன்கள், யாவும் அவருக்கு முன்பாக வணக்கமாக விழுந்தனர். அவர் தமது திட்டத்தை நிறைவேற்றி முடித்தபோது, அது தொழுது கொள்ளுவதற்கான வேளையா யிருக்கிறது.
“தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் (ஆங்கிலத்தில் ”ஏடுக்கவும் என்றுள்ளது'') அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப் பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக் கென்று உம்முடைய இரத்தத்தினால் மீட்டுக் கொண்டு,
எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களு மாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டை பாடினார்கள் (அங்கே அந்த மீட்கப்பட்ட ஆத்துமாக்கள் ஆர்ப்பரிக்கின்றார்கள் என்பதைக் கேளுங்கள்).
பின்னும் நான் பார்த்த போது, சிங்காசனத்தையும் ஜீவன் களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன் : அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும் ஆயிரமாயிரமாகவுமிருந்தது (பரலோகத் திலுள்ளயாவும் இந்த ஆட்டுக்குட்டியானவரை தொழுது கொள்ளுகின்றன)
அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியானவர் (அல்லேலூயா அல்லேலூயா!) வல்லமை யையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.
வெளி.5:9-12
104கவனியுங்கள் சர்வ சிருஷ்டியும்'' யோவான் என்ன செய்தான் என்பதை கவனியுங்கள்.
அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ள வைகளும், அவற்றுள்ளடங்கி வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத் திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதாகாலங் களிலும் உண்டாவதாக என்று சொல்லக் கேட்டேன் (யோவான்).
வெளி.5:13
யோவான் அப்பொழுது, தன்னில் தானே ஒரு உண்மையான பெந்தெகொஸ்தே அனுபவத்தை பெற்றிருந்திருக்கவேண்டும். 'வானத்திலுள்ள சிருஷ்டிகள் யாவும், பூமியிலுள்ள சிருஷ்டிகள் யாவும், பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும் சமுத்திரத்தி லுள்ள சிருஷ்டிகள் யாவும்: ஆமென், சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கும், ஆட்டுக்குட்டி யானவருக்கும் ஸ்தோத்திர மும் கனமும் மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக என்று நான் சொல்வதைக் கேட்டார்கள்'' என்று கூறுகிறான்.
ஆராதனையின் வேளை. ஆமென். அவர்கள் அதை எவ்வாறு செய்தார்கள்? இதோ இங்கே அவருடைய வசனம் உள்ளது. அவர்கள் யாவரும் அதைக் கேட்டார்கள்.
“அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின (யோவானே, நீ செய்வது சரி. உன்னால் கூடுமான வரைக்கும் உரத்த சத்தத்தோடு அவரைத் துதிப்பாயாக ) இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுது கொண்டார்கள்.
வெளி.5:15
105என்னே ஒரு அழகான விவரிப்பு இது. எனக்கு நேரமில்லை. இங்கே அதைப்பற்றிய பின்னணியான விவரக் குறிப்பு எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் நமது அடுத்த கூட்டத்தில் அதைப்பற்றி நாம் எடுத்துக்கொள்ளலாம். நான் எனது விடுமுறை நாட்கள் முடிந்து இங்கே திரும்ப வரும் போதோ அல்லது பிறிதொரு சமயத்திலோ ஒரு வேளை நான் இந்த தானியேலின் எழுபது வாரங்கள்' பற்றி எடுத்துக்கொண்டு இங்கே இதனோடே அதை இணைத்து, பெந்தெகொஸ்தே யூபிலிக்கு அது எங்கே எடுத்துச் செல்லுகிறது என்பதை காண்பித்து, பிறகு இந்த ஏழு முத்திரைகள் இடமாக திரும்ப வந்து, நாம் போய்விடுவதற்கு முன்பாக அவற்றைக் திறந்து, அது முடிவு நேரத்தில் இருப்பதைக் காண்பிக்கலாம்.
ஆட்டுக்குட்டியானவராகிய மேசியா, அதிபதி வந்திட வேண்டும்; அவருடைய ஜனங்களின் மேல் எழுபது வாரங்கள் செல்லும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. ஏழின் பாதியிலே மூன்றரையாவது வருடத்திலே அதிபதியானவர் வெட்டப் படுவார். அன்றாட பலி நீக்கப்படும். பாழக்குகிற அவருவருப்பாகிய முஸ்லிம்களுடைய உமர் பள்ளிவாசல் ஆலய நிலங்களிலே இன்று நின்று கொண்டிருக்கிறது; அவர்கள் ஆலயத்தை சுட்டெரித்த போது.... அதன்பிறகு, இஸ்ரவேலருக்கு இன்னும் மூன்றரை வருடங்கள் மீதியாயுள்ளன.
106கிறிஸ்துவானவர் வந்து, சரியாக மூன்றரை ஆண்டுகள் பிரசங்கித்து தீர்க்கதரிசனம் உரைத்தார், அன்றாட பலியும் ஒழிக்கப் பட்டு, யாவும் பரிபூரணமாக நிறைவேறியது. ஆலயம் இருந்த அதே இடத்தில், உமர் பள்ளிவாசல் அங்கே கட்டப்பட்டு இன்னும் அங்கே அது நின்றுகொண்டிருக்கிறது. புறஜாதிகளின் காலம் முடிவடையும் வரைக்கிலும் அவர்கள் எருசலேமின் மதில்களை மிதிப்பார்கள். அப்பொழுது தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டி யாகிய சபையானது உயர எடுத்து கொள்ளப்படும்.
இரு தீர்க்கதரிசிகளாகிய எலியாவும் மோசேயும் மீதியுள்ள மூன்றரை வருட காலத்திற்காக, இஸ்ரவேலரிடம் திரும்பி விடுவார்கள். அதை உங்கள் மத்தியில் அளிக்கும் பொழுது, அது மிகவும் அழகான காரியமாக இருக்கும்.
107ஒரு நிமிடம் பொறுங்கள். அது இதனோடு சரியாக ஒத்திருக்க வேண்டும். ஏனெனில் முத்திரைகள் வேதத்தை வெளிப்படுத்தும் படி தனது பின்புறத்தில் முத்தரையிடப்பட்டிருந்தது. அது என்ன? அது என்ன? எரேமியாவைப் போலுள்ளது. இன்னின்ன காரியம் நடந்தது என்று நீங்கள் கூறுகிறீர்கள். இதை இழுங்கள், இங்கே தான் அது உள்ளது. அதைக் கிழியுங்கள். இங்கே பின்னால் திரும்பிப் பாருங்கள், அங்கே என்ன சம்பவித்தது என்பதை பற்றி அங்கே நீங்கள் வாசிக்கலாம். அது சரி இதோ இங்கே அடுத்ததை திறவுங்கள்; இங்கே பாருங்கள், அதுதான் சம்பவித்தது. அதே காரியத்தைத் தான் அது உடையதாய் இப்புத்தகம் கொண்டதாய் இருக்கிறது. அதன் பின்புறத்தில் உள்ளது.
“நல்லது, என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. சிலர் பிதா குமாரன் பரிசுத்த ஆவி' என்றும், வேறு சிலர் இயேசுவின் நாமம் என்றும் கூறுகிறார்கள், யாவும் இதைப் போலதான் இருக்கிறது'' என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
அது இத்தனை ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்தது. ஆனால் இங்கே இப்பொழுது அது வந்திருக்கிறது; அப்புத்தகச் சுருள் பின்னோக்கி திறக்கப்பட்ட, ஆதியோடந்தமாக ஒரேயோரு தேவன் தான் உண்டு என்பதைக் காண்பிக்கிறது. ஒரேயொரு தேவனைத் தவிர வேறு யாரும் இருந்ததில்லை. பார்த்தீர்களா அவரது நாமம்...
மத்தேயு 28:19-ல் கூறப்பட்டுள்ளதைப் போல் “நீங்கள் புறப்பட்டு போய், சகல ஜாதிகளுக்கும் போதித்து, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து ...'' பிதா என்பது ஒரு பெயர் அல்ல, குமாரன் என்பதும் ஒரு நாமமல்ல; பரிசுத்த ஆவி என்பதும் ஒரு நாமமல்ல. அப்படியெனில் நீங்கள் அவர்களுக்கு எவ்வாறு ஞானஸ் நானங் கொடுக்கப்போகிறீர்கள்? அவைகள் நாமமல்ல என்றால் அவை களில் ஒன்றில் எந்த நாமத்தின் பேரில் ஞானஸ்நானங் கொடுக்கப் போகிறீர்கள்? அப்படியாயின் நீங்கள் எந்தவொரு நாமமும் இல்லாத ஞானஸ்நானத்தையே கொடுப்பீர்கள். அது மீண்டும் தீர்க்கதரிசிகளின் வேதக் கலா சாலையாக ஆகிவிடுகிறது, பாருங்கள்.
108பின்பு அவர் மீண்டும் இங்கே இடத்திற்கு வருகிறார். நீங்கள் அவ்வசனத்தை எடுத்துக்கொண்டால். அவர் மத்தேயு 1ம் அதிகாரத்திற்கு திரும்பி வந்து என்ன செய்வார்? அவர்தாமே அதை பின்னுக்கு இழுத்து இந்த இடத்திற்கு அதைக்கொண்டு வருகிறார்.
“இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: (இங்கே மூன்று தேவர்களல்ல என்பதைக் கவனியுங்கள்) அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப் பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே , அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது (பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியானாள்'' என்று கூறப்பட்டுள்ளது. ”பிதாவாகிய தேவனால் கர்ப்பவதியானாள்'' என்று கூறப்பட வில்லை. ஹு).
அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து. அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தரு டைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியா யிருக்கிறது (பிதாவாகிய தேவனாலா?) பரிசுத்த ஆவியினால் உண்டானது.
மத்.1:18-20
109பிதாவாகிய தேவனே அவருடைய பிதா என்று எண்ணி யிருந்தேன். நான் ஞானஸ்நானத்தினிமித்தம் இதை இவ்வாறு கூறுகிறேன் பிதாவாகிய தேவனே அவருடைய தகப்பன் என்று நான் எண்ணியிருந்தேன். ஒன்று பரிசுத்த ஆவியானவரும் பிதாவா கிய தேவனும் ஒருவர் தான் என்பதாக இருக்க வேண்டும், அல்லது இயேசுவுக்கு இரு பிதாக்கள் இருக்கவேண்டும். அப்படியிருந்தால் தவறாகப் பிறந்த பிள்ளை என்று இருக்கும். அப்படியெல்லாம் இருந் தால், நமக்கு எப்படிப்பட்ட தேவன் இருக்கிறார்? பாருங்கள்?
தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தாராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; (அவர்கள் அவரை இயேசு என்றழைப் பார்கள்) அவருக்கு இம்மானுவேல் என்ற பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிரு க்கிறார் என்று அர்த்தமாம்.
மத்.1:22-23
இப்பொழுது, அவர் முத்திரையை பின்னாக இழுத்து திறந்தார். அதினால் மத்தேயு 1ம் அதிகாரத்திற்கு வரையிலும் பின்னால் திரும்பிப் போய் பார்த்தார், அது இயேசு கிறிஸ்துதான் என்பதாக இருக்கிறதை காணலாம். அதைதான் பெந்தெகொஸ்தே நாளிலே சரியாக பேதுரு கூறினான். அதைத்தான் ஏனையோர்களும் கூறினார்கள்.
நிச்சயமாகவே, இந்த ரோமர்கள் வந்து, “ஓ, இல்லை, நமக்கு மூன்று தேவர்கள் இருந்தாக வேண்டும். நமக்கு... உள்ளனர்'' என்று இப்பொழுது அவர்களுக்கு பத்தாயிரக்கணக்கில் இருக் கிறது. அங்கே மரியாள்களும், பரிசுத்த சிசிலியாக்களும், பரிசுத்த மார்கள், பரிசுத்த இன்னின்னார் என்றெல்லாம் இருக்கின்றது. மெக்சிகோ நகரத்தில் மட்டும் ஐந்நூறு சொச்சம் பேர்கள் அவர்கள் வழிபாட்டுக்கென உள்ளனர். அங்கே சில காலத்திற்கு முன்னர் ஒரு ஸ்திரீயானவள் தனது காதலர்களில் சிலரால் கொல்லப் பட்டாள். அவள் பேரில் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டு, முடிவில் அவர்கள் அவளைக் கொன்றுவிட்டனர். எனவே, அவளை இப்பொழுது ஒரு பரிசுத்தவாட்டியாக ஆக்கிவிட்டனர். மக்கள் அவளிடம் பாவ அறிக்கை செய்கின்றனர். அவ்வாறேல்லாம் நடைபெறுகின்றன. மரித்த ஆவிகளோடு தொடர்பு கொள்ளலாம் என்னும் நம்பிக்கை கொண்ட ஒரு கோட்பாடு இது.
110இங்கே ப்ராடெஸ்டெண்ட்டுகள் அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம் என்று அவர்கள் கூறுகிற ஒன்றைக் கொண்டு வருகிறார்கள். 'நான் வானத்தையும் பூமியையும் படைத்த சர்வவல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன். பரிசுத்த ரோமன் கத்தோலிக்க சபையையும் விசுவாசிக்கிறேன். பரிசுத்தவான்களின் பரிந்து பேசுதலையும் அவர்களுடைய ஐக்கியத்தையும் விசுவாசிக்கிறேன்'' என்று கூறுகிறார்கள். பிராடெஸ் டெண்டுகள் தேவனுடைய சத்திய பிரமாணத்தின் கீழாக, தாம் பரிசுத்தவான்களின் ஐக்கியத்தை விசுவாசிப்பதாகக் கூறுகின்றனர். அது மரித்த ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் ஒரு கள்ள உபதேசமாகும். பார்த்தீர்களா? அது எப்படியிருந்தாலும் அவர்கள் தொடர்ந்து அதையே செய்கிறார்கள், ஏனெனில் அவர்களுடைய சபை அவ்வாறு கூறியுள்ளது. ஓ, தேவனே, நான் என்ன அறிந்துள்ளேன் என்பதை அறிய மகிழ்வடைகிறேன். நான் என்ன அறிந்துள்ளேன் என்பதை அறிய நான் எத்தனையாய் மகிழ்வெய்துகி றேன். தங்கள் தேவனை விட்டு வெகு தூரமாய் அந்தகாரத்தினுள் தங்களை தாங்களே முத்திரையிட்டுக் கொள்வதை அவர்கள் உணரவில்லை. நீங்கள் அவர்களுக்கு அதைக் கூறி உணர்த்துவிக்க முடியாது, ஏனெனில், அவர்களால் முழுமையாக அதை காண முடியாதிருக்கிறது.
111நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். இதை ஒருவரும் கூற வேண்டியதில்லை. என்னை இயேசு கிறிஸ்து என்று தவறாக எண்ணிக் கொண்டிருந்ததைப் பற்றி குற்றமுள்ள நெஞ்சத்தோடு இருந்த பதினைந்து அல்லது இருபது பேர்கள் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் எவ்வாறு அத்தகைய காரியத்தை செய்ய முடியும்? ''அது ஒரு ஆவி'' என்று தேவன் என்னிடம் கூறியபோது, அது என்னவென்று நான் கண்டு கொண்டேன். அம்மனிதர்கள் ஒவ்வொரு வார்த்தையினாலும் என்னை நம்பினார்கள். “நான் உங்களுக்கு கூறினால், நீங்கள் எப்படியாய் என்னை அப்பொழுது விசுவாசிப்பீர்கள்?” என்று நான் கேட்டேன். பிறகு நாங்கள் வார்த்தையைக் கொண்டு அணுகிய பொழுது அவர்கள் கண்டுணர ஆரம்பித்தார்கள். ''நல்லது, நிச்சயமாகவே நாங்கள் உங்களை விசுவாசிக்கவில்லை, அல்லது நீங்கள் கூறியதற்கு நாங்கள் செவிகொடுத்திருப்போம்' என்று கூறினார்கள்.
112ஆனால் அவர்கள் உத்தமமாக, தாங்கள் சரியாகத்தான் இருக்கிறோம் என்று எண்ணினர். அந்தவிதமாக ஆவிகளில் ஒன்று உங்களை பிடித்துக்கொள்ளுமானால், அதினால், நீங்கள் முழுமை யாக அதை விசுவாசித்துவிடுவீர்கள். நான் அதைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. அதன் வித்தியாசத்தை சொல்லுவதற்கு ஒருவரும் இல்லை. வார்த்தை என்னதான் சொன்னபோதிலும், அந்த ஆவி உங்களைப் பீடித்துக் கொள்ளுவதினால், நீங்கள் அதை விசுவாசிப்ப தில்லை. நீங்கள் அப்படியே இருந்து கொள்ளுங்கள். “நீங்கள் அந்தவிதமாக இருந்து கொள்ள விரும்பினால், அப்படியே இருந்து கொள்ளுங்கள். நான் எனக்கென்று உள்ள வழியில் சென்று கொள்ளுவேன்.'' பாருங்கள் நீங்கள் தவறான ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறீர்கள் என்பதை காட்டுகிறது.
தேவ ஆவியானவர் எப்பொழுதும்... நல்லது நீங்கள் கேட்கிறீர்கள். “உங்களைப் பற்றி என்ன சகோதரன் பிரன்ஹாம் அவர்களே?''
113நான் எவரையும் கேட்பேன்... எவரும் எது சரி, அல்லது தவறு என்பதை எனக்குக் காண்பிப்பதற்கு நான் ஆயத்தமாயிருக் கிறேன். ஆனால் அது திருவசனத்தின்படி இருக்க வேண்டும். அவர் களால் கூறமுடியாது .... எதைக் கூறினாலும் அது வார்த்தை யிலிருந்து தான் வரவேண்டும். அது ஒரு முத்திரையாக இருக்கு மானால், அது தன்னைப் பற்றி ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் அறிக்கையிடும். எனவே அங்கே தான் முத்திரைகள் உள்ளன. நீங்கள் அவரை நேசிக்கவில்லையா?
நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், ஏனெனில் அவர் என்னை முந்தி நேசித்தார், என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் கிரயத்திற்குக் கொண்டார்.
நாம் தலைகளை வணங்குவோமாக.
114(சகோதரன் பிரன்ஹாம் “நான் அவரை நேசிக்கிறேன்'' என்ற பாடலை தாழ்ந்த குரலில் பாடுகிறார் - ஆசி) இங்கேயுள்ள எத்தனை பேர்கள் அவரை உங்களது இரட்சகராக அறியாமலிருக் கிறீர்கள்? அவரை உங்கள் இருதயத்தினுள் வரும்படி அழைக் விரும்புகிறீர்களா? நான் பீடத்தண்டையில் போவதை நான் விசுவாசிக்கிறேன். நான் உண்மையிலேயே அதை விசுவாசிக் கிறேன். அது நல்லது. ஆனால் வேதாகமத்தில் அவர்கள் ஒரு போதும் பீடத்தண்டையில் இரட்சிக்கப்படுவதற்காக செல்ல வில்லை. அவர்கள் அதை தங்கள் இருதயத்தில் விசுவாசித்து அதை ஏற்றுக்கொள்ள மாத்திரமே செய்தனர். எத்தனை பேர்கள் வேதாகம வழியிலே வருவீர்கள்? 'விசுவாசித்தவர்கள் யாவரும் ஞானஸ் நானம் பெற்றனர். இதற்கு முன் செய்யாதவர்கள் எத்தனை பேர்கள் விசுவாசிக்க முன் வருகிறீர்கள்? நீங்கள் உங்களின் வழிகளிலே தவறாயிருந்தோம்'' என்று பகிரங்கமாக அறிக்கையிட்டு இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள முன்வரு வீர்களா? உங்கள் தலைகள் வணங்கிய வண்ணமாக நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா?
115தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர் வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பின்னால் கையை உயர்த்திய உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. அங்கே பின்னால் - உங்களை தேவன் ஆசீர்வ திப்பாராக. அங்கே அதோ அங்கே பின்னால் இருக்கிற அம்மனி தர் - தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, ஞாபகத் தில் கொள்ளுங்கள் - இங்கே அல்ல, உங்கள் இருதயத்திலே தேவனிடமாக நீங்கள் பகிரங்கமாக அறிக்கையிட்டு, “கர்த்தாவே, நாங்கள் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதை நான் அறிகி றேன். நான் முடிவுக்கு வந்துவிட்டேன்'' என்று கூறுங்கள்.
அன்றொரு நாளிலே, நான் இந்நகரத்திலுள்ள என் நண்பரி டம் பேசிக்கொண்டிருந்தேன். அது டாக்டர் சாம் அடெயர் அவர் கள் தான். நாங்கள் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். ''சாம், எனக்கு கொஞ்சம் வாய்வுத் தொந்தரவு உண்டாயிருக் கிறது'' என்றேன்.
“அது வாய்வு என்று நீங்கள் எவ்வாறு அறிவீர்கள்? உங்கள் இருதயத்தைச் சுற்றியா அவ்வாறு உள்ளது?'' என்று அவர் கேட்டார்.
“ஆம்'' என்று நான் கூறினேன்
அதற்கு அவர், “அது ஒரு வேளை இருதயத்திலுள்ள இரத்த உறைவாக இருக்கலாம். அது ஒரு வேளை இருதயக்கோளாறாக இருக்கலாம்'' என்றார்.
“அது அங்கே உள்ளது என்று எவ்வாறு நீர் அறிவீர்'' என்றார். ”நான் உங்களை சோதிக்கட்டும்'' என்று கூறினார்.
அவர் என்னைப் பரிசோதித்துவிட்டு, “இல்லை, உம்மிடம் ஒரு கோளாறும் இல்லை' என்று கூறினார்.
116''சாம், அது வரும் பொழுதெல்லாம்.... ''என்று நான் கூறினேன். நான் ஐம்பத்திரண்டு வயதுள்ளவனாக இருக்கிறேன்,'' சாம் என்னைவிட சிறிதே வயதில் மூத்தவர். நான் கூறினேன்: 'சாம், அது வரும் பொழுது, இந்த முப்பதாண்டுகள் முழுவதிலும், நான் யாரை நேசித்து, யாருக்காக இத்தனை காலம் உழைத்தேனோ, அந்த இயேசு கிறிஸ்துவை மக்கள் விசுவாசிக்கச் செய்வதில் தான் என்னையே நான் அர்ப்பணித்துள்ளேன். அவர் வருகையில் அது எனக்கு ஒன்றும் வித்தியாசமாயிருக்காது. நான் பரம வீட்டிற்குப் போய்விடுவேன்'' என்றேன்.
அதற்கு அவர், “பில்லி, மற்றவர்களுக்கு நான் ஏதாவது செய்வதில் தான் எனது மகத்தானதை நான் பெற்றுக் கொள்ளுகிறேன்.'' என்றார்.
“அதுவே உண்மையான வாழ்க்கை'' என்றேன் நான்
117நண்பரே, உங்களுக்கு இவ்வுலகில் ஒரு சுதந்தரம் உண்டாயிருக்குமானால், அது அழிந்து போய்விடும் சுதந்தரமாகும். ஆனால் நாமோ, வாடிப்போகாத சுதந்தரத்தையே பெற்றுக்கொள்கிறோம். கெட்ட குமாரன் தனது சுதந்தரத்தை விட்டு அகன்று போனான். அவன் அதில் ஒரு பாகத்தை மட்டும் தன்னோடு எடுத்துச் சென்றான். அவன் திரும்பி வந்தபொழுது அவனது சுதந்தரம் மாத்திரமே கெட்டுப்போனது. ஆனால் நீங்கள் உங்களுடையதை விட்டு சுதந்தரத்தையே பெற்றுக்கொள்கிறோம். நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லையா? பாவிகளாயிருக்கிற சுமார் பதினைந்து பேர்கள் தங்களுடைய சுதந்தரத்தை பெற விரும்பிய வர்களாய் தங்கள் கரத்தை இக்காலையில் இங்கே உயர்த்தியுள்ளனர். நாம் ஜெபம் பண்ணுவதற்கு முன்னால் இன்னும் ஒருவர் கூட உண்டா ? ஆம்.
இப்பொழுது மிகவும் மெதுவாக.
நான் அவரை நேசிக்கிறேன் (நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உணர்ந்தால் இதுவே அதற்குரிய தருணம்; எனவே தீர்மானித்துக் கொள்வீர்).
ஏனெனில் அவரே என்னில் முந்தி நேசம் கொண்டு, கல்வாரி மரத்தில் எனது இரட்சிப்பை கிரயத்திற்கு கொண்டார்.
118(நான் அவரை நேசிக்கிறேன் என்ற பாடலை சகோ. பிரான் ஹாம் தாழ்ந்த குரலில் பாடுகிறார்-ஆசி) பரம பிதாவே எங்களை அமைதிப்படுத்தும் இவ்வேளையில், இன்று காலையிலே நாங்கள் இக்கூட்டத்தினரை உம்மிடம் பெலவீனமான நிலையில் கொண்டு வருகிறோம். கர்த்தாவே. இந்த செய்தியை நான் இம் மக்களுக்கு கொண்டு வர முயலுகிறேன், ஏனெனில் நான் அவர்களை நேசிக் கிறேன். அவர்கள் இதை கேட்கும்படி நான் விரும்புகிறேன், கர்த்தாவே. அவர்கள் நங்கூரமிடப்பட்டிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக செய்யப்பட்ட இக் காரியங்களெல்லாம் ஏதோ தற்செயலாக நடந்ததாக அல்லாமல், அவைகள் அறிய வேண்டுமென நான் விரும்புகிறேன், கர்த்தாவே. இவ்விஷயங்களையெல்லாம் நீர் தான் திறந்து கொடுத்துக் கொண்டு இருக்கிறீர். ஓ, தேவனே, நாங்கள் யாவரும் எங்களுக்கு நேர் முன்பாக மகத்தான யூபிலி ஒன்று உள்ளது என்பதை உணருகிறோம்.
119தங்களுடைய கரங்களை உயர்த்தினவர்களுக்காக நான் ஜெபிக் கிறேன். அவர்கள், தாம் தவறாக இருப்பதை உணருகிறார்கள், கர்த்தாவே . அவர்களில் அநேகர் எண்ணுகின்றனர்.... ஒரு வேளை அவர்கள் எப்பொழுதாவது யாரிடமிருந்தாவது கொஞ்சம் பணத்தை சுதந்தரித்துக் கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் அது என்ன செய்தது? அது எங்கே சென்றது என்பதை அவர்கள் அறி யார்கள். ஒரு சிறிதளவு மீதமாயிருக்கிறது. ஏனெனில் அது ஒரு அழிந்து போகும் சுதந்தரமாகும். அவர்கள் வேறு யாருக்காவது அதை விட்டு விட்டுச் செல்வார்களானால், அது மீண்டும் அழிந்து தான் போகும்.
ஆனால் நாமோ அழியாததொரு சுதந்தரத்தையே பெற்றுள் ளோம்; அதுதான் இரட்சிப்பு, மீட்பு -ஏதேன் தோட்டத்திற்கு போகுதல். அதைப்பற்றி எண்ணிப் பாருங்கள். கர்த்தாவே, யார் தான் ஆதாம், ஏவாளைப் போல் இருக்கும்படி அங்கே திரும்பிப் போய் வாழ விரும்ப மாட்டார்கள்? அங்கே அன்றன்றைக்குள்ள எங்களது ஆகாரம் அளிக்கப்படுகிறது. பரம பிதாவானவர் பாதை முழுவதும் எங்களோடு எப்பொழுதும் பேசிக்கொண்டே யிருப்பார். அந்த மகத்தான ஒளி எங்கள் முன் நடந்து செல்வதை நாங்கள் காண்போம். சிங்கமும் ஓநாயும் ஒருமித்து மேயும். எருது வைக்கோலைத் தின்னும், சிங்கமும் அதனோடு சேர்ந்து மேயும். இப்பொழுதோ, அவைகள் ஒன்றையொன்று தின்று கொள்ளு கின்றன, அல்லது சிங்கம், காளையெருதை தின்கிறது; ஓநாய் காளை யெருதை தின்கின்றது, எதெல்லாம் கிடைக்கிறதோ அதை யெல்லாம் அது தின்கின்றது. ஆனால் அந்நாட்களிலோ, அவ்வித மாக இருக்கவே இருக்காது. பெரிய அழகான பறவைகள் பறந்து செல்லும். அங்கே வருத்தமில்லை, விலங்குகளை வேட்டையாடு பவர் அங்கே இருப்பதில்லை. நமது பாதையெல்லாம் நாம் அங்கே நமது பிள்ளைகளையும், நமக்கு பிரியமானவர்களையும் காண்போம். ஓ , தேவனே, என்னே ஒரு நாள் அது! என்னே ஒரு நாள்! இவ்வுலகில் நாம் எதைப் பெற்றுக்கொள்கிறோம் என்பது ஒரு பொருட்டல்ல. அவை யாவும் வாடிப்போகுமே. ஆனால் அதுவோ வாடிப் போகாது.
120தேவனே, கரங்களை உயர்த்தியவர்களிடம் ஒரு வேளை நான் இப்புவியில் அவர்களோடு பேச முடியாது போகலாம். நான் அறியேன். என்னால் முடியும் என்று நான் நம்புகிறேன். ஆனால் என்னால் இயலாமற்போய்விட்டாலும், அப்பொழுது, கர்த்தாவே நான் அவர்களை அங்கே அப்பாதையில் சந்திப்பேனாக. அவர்கள் ஒரு வேளை இவ்வாறு கூறக்கூடும்; 'சகோதரன் பிரன்ஹாம் அவர் களே, இந்த மகத்தான காரியம் நிகழும் முன்னதாக எங்களை இப்பூமியில் நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் காலையில் நீங்கள் ஒரு மண்பாண்டத்தினுள் வைக்கப்பட்டிருந்த முத்திரைகள் திறக்கப் படுதலைக் குறித்து பிரசங்கித்தீர்கள். அந்த வேளையில் தான், அவர் என்னுடைய மண்ணான பாத்திரத்தினுள் வந்தார். அன்று காலையில் கரத்தை உயர்த்தியது நான் தான். ஓ , நான் அங்கே இருக்க முடிந் ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்'' என்று.
நானுங்கூட, “சகோதரனே சகோதரியே, நானுங்கூட அங்கே இருந்தேன் என்பதற்காக மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். யுகாயுகமாக நாம் ஒருமித்து ஐக்கியங் கொள்ளு வோம்'' என்று அப்பொழுது கூறுவேன்.
பிதாவே, அவர்களை ஆசீர்வதியும், அவர்கள் உம்முடைய வர்கள். என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்'' ''பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். 'நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்து போகவில்லை' என்று நீர் கூறினீர். எனவே, பிதாவே நாங்கள் அதற்காக நன்றியுள்ள வர்களாய் இருக்கிறோம். அவர்கள் தாமே இப்போது முன் வந்து, அவர்களுடைய இரட்சிப்பின் அச்சாரத்தைப் பெற்றுக்கொள்ள வார்களாக. ஒரு சபையை அவர்கள் சேர்ந்து கொள்ளுதல் அல்ல. அது ஒரு புதிய பிறப்பு ஆகும். அதுதானே அவர் அவர்களை ஏற்றுக் கொள்ளுதல் ஆகும். அதுதானே அவர் அவர்களை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுதல் ஆகும். பிதாவே, அவர்களை உம்முடைய கரத்தினிலே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஒப்படைக்கி றோம். ஆமென்.
121கர்த்தராகிய இயேசுவே, இந்தக் கைகுட்டைகளுக்காக நான் ஜெபிக்கிறேன்; இங்கே இருக்கிற தேவையுள்ளவர்களையெல்லாம் நீர் ஆசீர்வதிக்கும்படி வேண்டுகிறேன். கர்த்தாவே, இந்த சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் இவ்வெளிய பெண்மணியையும் ஆசீர்வதியும்.
இக்காலையில் இந்த மகத்தான கூட்டத்திற்குப் பிறகு, பிதாவே, எங்கள் ஊடாக உமது பரிசுத்த ஆவி செறிவூட்டியிருப் பதை உணர்ந்தவர்களாய், உமது வார்த்தையானது எங்களுக்குள் ஆழமாய்ப் போய் பதிந்து, மக்களுடைய இருதயங்களுக்குள்ளாக வேர் கொண்டிருப்பதை உணருகிறோம். கர்த்தாவே, அவர்கள் அதை ஒருபோதும் மறக்கவே மாட்டார்கள். இவற்றை அவர்கள் கேட்கின்ற போதெல்லாம், அம்முத்திரைகள் திறக்கப்படுதலைக் குறித்து எண்ணிக் கொண்டிருப்பார்கள். இப்பொழுது, கர்த்தாவே, அம்முத்திரைகள் என்னவாயிருந்தன என்பதை நாங்கள் அறியும் படி எங்களுக்கு உதவி செய்தருளும், அதினால் ஒவ்வொருவரும் தங்கள் சிந்தையில் அதை புரியாத புதிராக எண்ணமாட்டார்கள். ஆனால் அது 'கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பதிலிருந்து அது தேவனுடைய முத்திரையாகும் என்று எண்ணிக் கொள்வார்கள். தேவன் திறந்து கொடுத்த முத்திரை அது.
நீர் தாமே சுகவீனரையும் பெலவீனரையும் குணமாக்கிட வேண்டு மென்று நாங்கள் வேண்டுகிறோம். அதைக் தாரும் கர்த்தாவே. உமது ஆவி பிரசன்னமாயுள்ளது. கட்டிடத்தின் பின் பகுதியில் உள்ள ஒரு பாவியை நீர் இரட்சிக்க முடியுமென்றால், அங்கேயுள்ள ஒரு வியாதிப்பட்ட நபரையும்கூட நீர் குணமாக்கிட முடியும். அதை நீர் அளித்திட வேண்டுமென, கர்ததாவே, நான் ஜெபிக்கிறேன். இங்கே இன்று வர இயலாமற்போய், தங்களுக்காக இங்கே ஜெபக் கைக்குட்டைகளை வைத்துள்ளவர்களை நீர் குணமாக் கியருளும். இவை யாவற்றையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வின் நாமத்தினால் உம்மிடம் ஒப்படைக்கிறோம். ஆமென்.
இங்கே ஒரு சிறு குழந்தையை பிரதிஷ்டைக்காக அவர்கள் கொண்டு வந்துள்ளனர். குழந்தையோடு இங்கே இருக்கிற இந்த ஸ்திரீ தானா? இவ்வேளையில் இங்கே கொண்டு வந்தால், அச்சிறு வனை பிரதிஷ்டை செய்ய நாங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கி றோம். இல்லை, சிறு குழந்தையாகத்தான் இருக்க வேண்டுமென்ப தில்லை. இங்கே வாருங்கள். மூப்பர்களில் சிலர் இவ்வேளையில் முன்வருவீர்களாயின், இங்கே என்னோடு வந்து நின்று கொள்ளுங் கள். என்ன வயது? இரண்டரை வயதா? அவனது பெயர் என்ன? ஸ்காட் ஃபோர்ட்! சிறுவனாகிய ஸ்காட் ஃபோர்ட் - நான்கரை வயதுள்ளவன் - இன்று காலையில் தங்களது கர்த்தரும் இரட்ச கருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கென பிரதிஷ்டை செய்யப்பட விரும்புகிறான். அவனை அவனது தாய் கொண்டு வருகிறாள். முன்னே வாரும், சகோதரனே.
கிருபையுள்ள கர்த்தாவே, இன்று காலையிலே, பிரதிஷ்டை செய்வதற்காக இக்குழந்தையை உம்மிடம் நாங்கள் கொண்டு வருகிறோம். இயேசுவை கல்லறையினின்றும் உயிரோடெழுப்பிய அவ்வல்லமையானது இச்சிறுவனை உயிர்ப்பிக்க வேண்டுமென அவன் மேல் கைகளை வைத்து நாங்கள் வேண்டுகிறோம். தேவனே ஆராக்கியத்தோடும் பெலத்தோடும் அவன் வாழட்டும். உமது மகிமைக்காகவே இவன் வாழட்டும் கர்த்தாவே. இக்குழந்தைக்கு உதவி செய்யும்படி நீர் எவ்வாறு ஏற்கனவே அதை அமைத் திருக்கிறீர் என்பதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இச்சிறுவனோடு நீர் தொடர்ந்து இருந்தருளும். அவனுடைய பெற்றோரோடும் அவனுக்குரிய பிரியமானவர்களோடும் இருந்தருளும். கர்த்தரில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக் கேதுவாகவே நடக்கிறது என்று நாங்கள் போதிக்கப்பட்டதை அறிந்திருக்கிறோம். சில வேளைகளிலே, இந்த காரியங்க ளெல்லாம் எப்படியாய் மக்களை உம்மிடமாய் கிட்டிச் சேரும்படி செய்கிறது! நாங்கள் கோருகிற ஆசீர்வாதங்களை நீர் அளிக்க வேண்டுமென்று நான் வேண்டுகிறேன். இப்பொழுது, பிதாவே, உமது வார்த் தைக்கு கீழ்படியும்படியாக, இச்சிறுவனை உம்மிடம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் சமர்ப்பிக்கிறோம். நீர் தாமே இந்தச் சிறுவனின் ஆவி, ஆத்துமா, சரீரம் யாவற்றையும் ஏற்றுக் கொண்டு, உமது மகிமைக்காக அவனை உபயோகித்தருளுவீராக. ஆமென்.
தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. சிறுவனாகிய ஸ்காட்டே, உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. நாம் அதற்காக கர்த்தருக்கு எவ்வளவாய் நன்றி செலுத்துகிறோம்.
122இப்பொழுது - யார் ஞானஸ்நானம் பெறப்போகிறீர்கள்? அங்கே ஒரு கூட்டம் மக்கள் ஞானஸ்நானம் பெறும்படி உள்ளனர் என்று நான் நம்புகிறேன். நாம் அதற்காக ஆயத்தம் செய்கையில், நாம் என்ன செய்யலாம் என்பதை பற்றி நான் கூறுகிறேன். நாம் தானே பாடுவோமாக. சகோதரன் நெவில் அதைச் செய்யட்டும். அது சரியானது என்பதை அறிவேன். அப்படி செய்யுங்கள், ஐயா. சகோதரன் நெவில் அவர்களே.
நீங்கள் கர்த்தரை நேசிப்பதினால், ஆமென் என்று சொல்லுங் கள் (சபையோர் ஆமென் என்கிறார்கள் -ஆசி). எனக்காக நீங்கள் ஜெபிப்பீர்களா? (சபையார் ஆமென்'' என்று கூறுகிறார்கள் - ஆசி). ஆமென். ஆமென்.